ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா!
மயிலாடுதுறை: சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ, கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சீர்காழி சட்டசபை தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாரதி தனக்கு தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்காததால், கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. சீர்காழி (தனி) தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவர், அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவராகவும் உள்ளார். இதற்கு முன்பாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பாரதி, முன்னாள் ஒன்றியக் குழு தலைவராகவும், ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 76,487 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.கிள்ளை ரவீந்தரனை விட கூடுதலாக 9,003 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் பாரதி.
அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 2021 சட்டசபை தேர்தலில் சீர்காழி (தனி) தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பாரதி விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், சீர்காழி (தனி) தொகுதிக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சக்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
நீண்ட காலமாகத் தொகுதியில் செல்வாக்குடன் விளங்கிய பி.வி.பாரதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்எல்ஏ பாரதி, "சீர்காழி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுகவின் மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தைக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு அனுப்பி உள்ளேன்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் நாகை மாவட்டச் செயலாளரும், மண்டலச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களோடு இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலையில், தனது மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மேலும், என்றைக்கும் அதிமுகவுக்கும், கட்சி தலைமைக்கும் விசுவாசம் மிகுந்த தொண்டனாக செயல்படுவேன்" எனக் கூறினார். முன்னாள் எம்எல்ஏ பாரதி தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதேபோல, அதிமுகவில் இருந்து விலகியுள்ளார் மயிலாடுதுறை அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜனார்த்தனன். "அதிமுகவில் உழைப்புக்கு மரியாதை இல்லை. 2016 தேர்தலுக்காக வாங்கிக் கொடுத்த ரூ.25 லட்சம் கடனை திருப்பித் தராமல் ஓ.எஸ்.மணியன் ஏமாற்றிவிட்டார்" என சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுகவில் இருந்து விலகியுள்ளார் ஜனார்த்தனன்.
-
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி












Click it and Unblock the Notifications