சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ் இப்படி பேசலாமா.. கொதித்து போன ராமதாஸ்.. சிஎம்முக்கு பறந்த போன்.. பரபரப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் பேச்சு பாமகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் அதிருப்தி அடைந்தார். முதல்வருக்கே போன் போட்டு ஆதங்கத்தைகொட்டிய ராமதாஸ், கட்டாமாக அறிகை வெளியிட்டுள்ளார். தங்கள் கட்சிக்கு எதிராக சில ஊடங்கள் விஷமப் பிரச்சாரம் செய்வதாக கொந்தளித்துள்ளார்.

பாமகவின் கோரிக்கையை ஏற்று சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில் கடைசி நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றினார். இந்த சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது,

வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்தால் மட்டுமேஅதிமுக உடன் கூட்டணி என்று கூறிவந்த பாமக, அதிமுக சட்டம் கொண்டு வந்ததால் கூட்டணிஅமைத்தது, அத்துடன் தொகுதியை குறைத்து பெற்றுக் கொள்வதற்கும் பாமக ஒப்புக்கொண்டது இதன் அடிப்படையில் தான் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது,

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

புதிய சட்டத்தின் படி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற அனைத்து சாதியினருக்கும் சேர்த்து 20% இடஒதுக்கீட்டில் மீதம் உள்ள 2.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

போராட்டம்

போராட்டம்

இந்த விவகாரத்தில் தென்மாவட்டங்களில் சீர்மரபினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இதேபோல் தென் மாவட்டங்களில் உள்ள பிற சாதியினரிடமும் அதிருப்தி ஏற்படுள்ளதாகக கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள அமைச்சர்கள் வன்னியர் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு தற்காலிகமானது என்று கூறிவருகிறார்கள். சாதிவாரிய கணக்கெடுப்புக்கு பிறகு புதிய சட்டம்நிறைவேற்றப்படும்என்று கூறிவருகிறார்கள்.

தற்காலிகம்

தற்காலிகம்

அமைச்சர் உதயகுமார் பேசி சர்ச்சையான நிலையில்,அதற்கு அவர் விளக்கம்அளித்தார்.ஆனால் தற்பாது ஆங்கில நாளிதழுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இதே கருத்தையே பேட்டியில் சொல்லிஉள்ளார். தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது தான்.சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்ட பிறகு வன்னியர் இட ஒதுக்கீடு இறுதியாகும்.சாதிவாரி கணக்கெடுப்பு குழு தரும் அறிக்கை அடிப்படையில் வன்னியர் இட ஒதுக்கீடு கூடுவதற்கும் குறைவதற்கும் வாய்ப்புள்ளது என்றார்.

ராம்தாஸ் அதிருப்தி

ராம்தாஸ் அதிருப்தி

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு பாமகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் அதிருப்தி அடைந்தார். உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போன் போட்ட ராமதாஸ், சட்டம் குறித்து கேள்வி கேட்டார்.அதற்கு எடப்பாடி பழனிசாமி, சட்டம் நிரந்தரமானது, அதை யாரும் நீக்க முடியாது. பயப்பட வேண்டாம்.சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் இன்னும் கூடவே கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளார். அதன் பிறகே அமைதியாகி உள்ளார் ராமதாஸ்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

எனினும் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கல்வி & வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது தான் என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர்; அதை சில ஊடகங்கள் திரித்து வெளியிடுவதை விஷமப் பிரச்சாரமாகவே பாட்டாளி மக்கள் கட்சி பார்க்கிறது.

தற்காலிகம் இல்லை

தற்காலிகம் இல்லை

சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம் தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என்று ஒன்று கிடையாது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் வரை நீடிக்கும். இது தான் நடைமுறை.

ராமதாஸ் உறுதி

ராமதாஸ் உறுதி

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, வன்னியர்களின் மக்கள்தொகை 15 விழுக்காட்டுக்கும் கூடுதல் என்பது உறுதி செய்யப்படும். அதனடிப்படையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவையும் உயர்த்தி புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும். இதுவே எனது உறுதியான நிலைப்பாடு" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
pmk leader ramadoss dissatisfied Deputy Chief Minister O Panneerselvam speech of Vanniar quota not permanent. He worry and call to chief minister edappadi palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X