உதயநிதிக்கு கூடுதல் பவர்.. திட்டக்குழு கமிஷன் துணை தலைவராக நியமனம்.. ஜெயரஞ்சனுக்கு புது பொறுப்பு
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி மாநிலத் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022ம் வருடம் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்த முக்கியமான துறையான சிறப்பு திட்ட செயலாக்க துறை உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினிடம் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை ஒன்றரை வருடம் இருந்தது.

இந்த துறை ஒரு வகையான சிறப்பு துறையாகும். பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுவாக ஒரு துறை ரீதியான அறிவிப்பை அந்த துறை அமைச்சர்கள்தான் வெளியிடுவார்கள். ஆனால் இந்த சிறப்புத்திட்ட செயலாக்க துறை எந்த துறையில் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும்.
இந்த துறையின் கீழ்தான் முதல்வர்தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார். உதாரணமாக மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் இந்த சிறப்புத்திட்ட செயலாக்க துறை மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த துறையைத்தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் பெற உள்ளார். அனைத்து துறைகளையும் கண்காணிக்க வேண்டும் என்பதால் இந்த துறை இத்தனை காலம் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்தது. மற்ற துறைகளை கண்காணிக்க வசதியாக இந்த துறை முதல்வரிடம் இருந்தது. இதுதான் கடந்த 2022ம் ஆண்டு அமைச்சரவை மாற்றத்தின் போது விளையாட்டுத் துறையுடன் இந்த துறையும் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்றது.
இதன் மூலம் மகளிர் உரிமை தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், மாணவ, மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் என்று பல திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே வெளியிட்டார்.
அடுத்த பவர்: அதோடு இரண்டு மாதங்களுக்கு முன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்றார். கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் திமுகவில் இளம் ரத்தத்தை பாய்ச்சல் அந்த கட்சி முடிவு செய்துள்ளதாம். இந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் வியூகங்கள் ஆளும் திமுகவிற்கு சாதகமாக அமைந்தன. லோக்சபா தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு முன் சட்டசபை தேர்தலிலும் வேட்பாளர் தேர்வு தொடங்கி பல விஷயங்களில் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக தலையிட்டார். கட்சியில் அவர் எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கு சாதகமாக மாற தொடங்கி உள்ளன. அந்த வகையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளாராம். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற போது ஆட்சி நிர்வாகத்தை உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக கவனித்துக்கொண்டார். முக்கியமாக அமைச்சரவை கூட்டங்களை நடத்தினார்.
இதெல்லாம் அவருக்கு அடுத்தடுத்து ப்ரோமோஷன் கிடைக்க காரணமாக அமைந்தது.
அடுத்த பவர்: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி மாநிலத் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திட்டங்களை வகுப்பது, அதற்கான நிதி ஆதாரங்களை ஆய்வு செய்வது, திட்டங்களின் பலன், பிரச்சனைகளை ஆராய்வது இந்த அமைப்புதான். இதன் தலைவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். துணை தலைவராக இருந்த ஜெயரஞ்சன் செயல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications