Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம்.. எடப்பாடிக்கு ஆதரவாக பேசிய ஸ்டாலின்.. பறிபோகும் ஓபிஎஸ் இடம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் முடிவை மறுபரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டு இருப்பதால், விரைவில் எடப்பாடி பழனிசாமி அருகிலேயே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர் பி உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி குழப்பம் காரணமாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஓ பன்னீர் செல்வத்தை துணைத்தலைவராக அங்கீகரிக்க கூடாது என்றும் புதிய துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமாரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்து இருப்பதாகவும் அதிமுக கூறியது.

Deputy leader of opposition Issue CM Stalin requests Speaker Appavu to reconsider his decision

இது தொடர்பாக சட்டசபையில் ஓ பன்னீர் செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும் என்றும் அவை மரபுப்படி எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில் எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் பல்வேறு முறை அதிமுக மூத்த எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்தனர்.

எனினும், அவையில் இருக்கை ஒதுக்கும் விவகாரம் என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் அவை விதிகளின் படியே தான் செயல்படுவதாகவும் சபாநாயகர் அப்பாவு கூறி வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை தொடர்பாக பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

எடப்பாடி பழனிசாமியும் இதே கோரிக்கையை வைத்து பேசினார். அப்போது உடனே முதல்வர் முக ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேசினார். முதல்வர் முக ஸ்டாலின் கூறியதாவது:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சிக்கு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர் பி உதயகுமாருக்கு இடம் ஒதுக்கி தருமாறு தொடர்ந்து இந்த அவையிலே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இது சபாநாயகருக்கு உள்ள உரிமை என்று இந்த விவகாரத்தில் பலமுறை அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே இதே அவையில் அவைத்தலைவராக இருந்த தனபால் என்ன தீர்ப்பு தந்தாரோ? அதை அடிக்கடி நீங்கள் சுட்டிக்காட்டி சொல்கிறீர்கள். எனினும், இந்த விஷயத்தில், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை சபாநாயகர் மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யுமாறு உரிமையோடு நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "முதல்வர் பரிந்துரைப்படி இந்த கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதிலளித்தார்.

எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் முடிவை மறுபரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டு இருப்பதால், விரைவில் எடப்பாடி பழனிசாமி அருகிலேயே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர் பி உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் பட்சத்தில் ஓ பன்னீர் செல்வத்தின் இருக்கையும் மாற்றி அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.

முன்னாள் முதல்வர் என்பதால் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அமரும் முன் வரிசையில் ஏதேனும் ஒரு இருக்கை ஓபன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்படலாம் என்று சட்டமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+