Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகம் இழந்த உரிமைகளை மீட்பதில் உறுதி.. "இந்தியா" கூட்டணி ஏன்? முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் இழந்த உரிமைகளை மீட்போம் என்றும், அனைவரது குரலுக்கும் மதிப்பு தரவே இந்தியா கூட்டணியை உருவாக்கினோம் என்றும் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

தி.க சார்பில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என்ற தலைப்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திராவிடர் கழகம் தான் தாய் வீடு. திகவும் திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என அறிஞர் அண்ணா கூறியுள்ளார். திகவும் திமுகவும் நாணயத்தின் இரு பக்கங்கள் என கருணாநிதி கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து வகைகளிலும் முன்னேறிய மாநிலமாக தன்னிறைவு பெற்ற மாநிலமாக மலர வேண்டும். உயர வேண்டும்.

determined to recover Tamil Nadu rights says TN Chief Minister M.K. Stalin in Thanjavur

இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி கருத்தியலாக கூட்டாட்சி கருத்தியல் மலர வேண்டும். அனைத்து தேசிய இனங்களும் உரிமை பெற்றவையாக அனைத்து மாநில மொழிகளும் ஒன்றிய ஆட்சி மொழியாக உயர்ந்து நிற்க வேண்டும். அனைவரது குரலுக்கும் ஒரே மரியாதையும் மதிப்பும் இருக்க வேண்டும். இதுதான் இந்தியாவின் இந்திய ஒன்றியமும் அதில் உள்ளடங்கிய தமிழ்நாடும் இயங்க வேண்டிய முறை.

அத்தகைய கூட்டாட்சி கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே இந்தியா கூட்டணியை அமைத்து இருக்கிறோம். இது அரசியல் கூட்டணி அல்ல... கொள்கை கூட்டணி.. தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு நாங்கள் இதனை உருவாக்கவில்லை. அந்த வெற்றிக்கு பின்னால் அமையப்போகும் ஆட்சியில் கோலேச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே நாங்கள் செயல்படுகிறோம்.

தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். மீட்கப்பட்டே தீர வேண்டும். கல்வி உரிமை, நிதி உரிமை, மொழி உரிமை, மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைகளுக்கு கேடு விளைவிக்க பார்க்கிறார்கள். மக்கள் தொகை குறைந்துவிட்டது என சொல்லி நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் சதி செயலை அவர்கள் அரங்கேற்ற பார்க்கிறார்கள்.

குடும்ப கட்டுபாட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்கு தண்டனையாக நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க பார்க்கிறார்கள். 39 எம்.பிக்கக்ள் தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்கள் என்றால் நமது நிலைமையை எடுத்து சொல்ல உரிமையை நிலை நாட்ட செல்கிறார்கள் என்று பொருள். இந்த எண்ணிக்கையை கூட்ட வெண்டும் என்று சொன்னால் அது பொருத்தம்.. அது குறையக் கூடாது. மகளிருக்கான இட ஒதுக்கீடு 33 சதவிகிதம் அறிவித்தார்கள்,. ஆனால் பாஜக அதை முழு ஈடுபாட்டோடு கொண்டு வந்து இருக்கிறதா..

மக்கள் தொகை முடிந்ததற்கு பிறகு தொகுதி மறு வரையறைக்கு பிறகு என்று சொல்வதே இது நிறைவேற்றாமல் இருப்பதற்கு தந்திரம். அதிலும் குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மகளிர் இட ஒதுகீட்டை வாங்க மறுப்பது பாஜகவின் உயர் வகுப்பினருடைய மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டையும் காலி செய்யும் ஆபத்து இதில் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+