Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாரி செல்வராஜே யோசிச்சு இருக்க மாட்டாரே.. தேவர் மகனை குறைசொன்னீர்களே.. இப்போ பாருங்க என்னாச்சுன்னு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமன்னன் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் அந்த படத்தின் வில்லன் கதாபாத்திரமான ரத்தினவேலுவை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்ட போக்கு இணையத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

"தேவர் மகன் படத்தில்.. நடப்பதெல்லாம் ரத்தமும் சதையுமாக இருந்தது... எனக்கு அந்த படம் பெரிய மனப்பிறழ்வை உருவாக்கியது. அதில் இருந்து மீண்டு வர பல காலம் ஆனது.

அந்த படத்தின் அரசியலை புரிந்து கொள்ள.. அது சரியா.. தவறா என்பதை புரிந்துகொள்ள எனக்கு பல காலம் ஆனது. அதனால் எனக்கு புரிய முடியாத வலி ஏற்பட்டது. தேவர் மகனில் இருக்கும் இசக்கிதான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னன் ஆனால் என்ன ஆகும் என்பதுதான் மாமன்னன் படம்.

 Devar Magan 2: Why Maari Selvarajs Maamannan Rathinavelu character backfired against the theme?

அதைவைத்துதான் இந்த படத்தை இயக்கி இருக்கிறேன்".. இது மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனுக்கு முன்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் பேசிய வார்த்தைகள். தேவர் மகன் படம் தென் மாவட்டங்களில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை மாரி செல்வராஜ் தனக்கு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் பேசி வருகிறார். அந்த படத்திற்கு பதிலடியாக.. அல்லது குறைந்தபட்சம் ஒரு spin - off போல மாமன்னன் எடுக்கப்பட்டு இருந்தது.

படத்தின் தீம்: அந்த படத்தின் இசக்கி பாத்திரம் மாமன்னன் போல ஆகி இருந்தால் எப்படி இருக்கும் என்ற தீமில்தான் படத்தை அவர் இயக்கி இருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி உள்ளது மாமன்னன் படம். ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், தனித்தொகுதி அரசியல், இடஒதுக்கீடு என்று பல்வேறு அரசியல்களை வலுவாக இந்த படம் பேசுகிறது.

 Devar Magan 2: Why Maari Selvarajs Maamannan Rathinavelu character backfired against the theme?

முக்கியமாக என்னதான் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியலில் மேலே வந்தாலும், தனித்தொகுதியில் நின்று எம்எல்ஏ ஆனாலும் கூட அவர்களால் கடைசி வரை அதிகார வர்க்கத்தில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர்கள் மேலே வந்தாலும் கூட அவர்களை ஒடுக்க அங்கேயும் சாதி இருக்கிறது என்பதை வலுவாக இந்த படம் காட்டி இருக்கிறது. தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

சமூக நீதி, தனித்தொகுதியில் வென்றாலும் தலித் எம்எல்ஏக்களுக்கு முழு அதிகாரம் இல்லை, முழு அரசியல் உரிமைகள் இல்லை என்பதை காட்டும் விதமாக இந்த படம் இதுவரை சொல்லப்படாத தீமை சொல்லி வெளியாகி இருந்தது. ஆனால் மாரி எதை சொல்ல நினைத்தாரோ.. எந்த அரசியலை பேச நினைத்தாரோ.. அதற்கு அப்படியே எதிர்பதமாக, படத்தின் குறிக்கோளுக்கு நேர் எதிராக தற்போது படத்தின் வில்லன் ரோலான ரத்தினவேல் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

கொண்டாடப்படும் ரத்தினவேல்: ஆதிக்க சாதியை சேர்ந்த ரத்தினவேல் என்னும் மாவட்ட செயலாளர் கேரக்ட்ரில் நடித்து இருந்தார் பகத் பாசில். ரத்தினவேலுவின் கொடூர குணத்தை விமர்சனம் செய்யாமல் பலரும் அதை கொண்டாடி வருகின்றனர். தேவர் மகன் படத்தில்.. புள்ளை குட்டிகளை படிக்க வையுங்கடா என்று கமல் சொன்னதை மறந்துவிட்டு.. அவர் அருவாள் தூக்கியதை மட்டுமே பலரும் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டது போல.. இங்கே மாமன்னன் பேசிய அரசியலை மறந்துவிட்டு.. ரத்தினவேலுவின் வில்லனிசத்தை பலரும் எடுத்துக்காட்டாக பார்க்க தொடங்கி விட்டனர்.

தங்கள் ஜாதிக்கான ரோல் மாடலாக, ஒரு இமேஜாக ரத்திவேலுவை கொண்டாட தொடங்கிவிட்டனர். உதாரணமாக ராஜராஜ சோழலை பல சாதியினரும் உரிமை கொண்டாடுவது வழக்கம். அப்படிதான் இவரையும்.. ரத்திவேலு எங்கள் ஜாதி என்று கூறி வீடியோ எடிட், வாட்ஸ் ஆப் டிபி, ஸ்டோரி என்று வைக்க தொடங்கிவிட்டனர்.

அண்டர்பிளே செய்த ப்ரோட்டோகனிஸ்ட்: ரத்தினவேல் பாத்திரம் மிக வலுவாக, சிறப்பாக உருவாக்கப்பட்டது இதற்கு காரணம். ரத்தினவேல் பாத்திரத்தை வலுவாக காட்டிவிட்டு மாமன்னன் வடிவேலுவை பெரிய சக்தி இல்லாத, கையாலாகாத நபர் போல காட்டி இருப்பார்கள். அவர் எம்எல்வாக இருந்தும் கூட வீட்டில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். பெரிதாக மக்கள் கூட்டம் இருக்காது. ஆனால் ரத்தினவேலுவிற்கு எப்போதும் படை பலம் இருப்பது போல காட்டி இருப்பார்கள். உதயநிதி சொல்லவே வேண்டாம்.. அவரும் படம் முழுக்க அண்டர்பிளே செய்து இருப்பார். அப்படி இருக்க இயல்பாக படத்தை பகத் பாசில் தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

இந்த கதாபாத்திரமாக நடிக்காமல் அவர் அப்படியே வாழ்ந்து இருந்தார். ஜாதி ஆட்களுக்கு அதுவே தீனியாகவும் மாறிவிட்டது. இதனால் மற்ற கேரக்டர்கள் செய்த நடிப்பு கவனிக்கப்படாமல் ரத்தினவேல் பாத்திரம் அதிகம் கவனிக்கப்படுகிறது.

வில்லன்கள் கொண்டாப்படுவது இயல்பு - ஆனால்?: பொதுவாக படங்களில் வில்லன் கொண்டாடப்படுவது இயல்பு. மார்க் ஆண்டனி தொடங்கி பேட்மேன் ஜோக்கர் வரை பலரும் கொண்டாடப்பட்டு இருக்கிறார்கள். மங்காத்தாவில் அஜித் கூட வில்லன்தான். ஆனால் இந்த படத்தில் வில்லனை கொண்டாடுவது என்பது நடிப்பு தாண்டி ஜாதி என்ற விஷயத்திற்காகவும் என்பதுதான் கவலைகொள்ள வேண்டிய விஷயம்.

சமூக நீதி படம் எடுக்கிறேன் என்ற பெயரில் மாரி தெரிந்தோ தெரியாமலோ ஜாதி ஆட்களுக்கு என்று இன்னொரு "ரோல் மாடல்" ஹீரோவை கொடுத்துவிட்டார் என்பதுதான் சோகமான செய்தி. தேவர் மகனை விமர்சனம் செய்த அவர்.. அவருக்கே தெரியாமல் அதன் பார்ட் 2 வை கொடுத்துவிட்டார் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

தேவர் மகனை இப்போது எடுத்திருக்க மாட்டேன் என்று கமல் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.. அதன் பாதிப்பை பார்த்த பின் கமல் மனம்மாறி சொன்ன வார்த்தைகள் அவை. ஆனால் அதன் பின்விளைவுகளை
பார்த்தும் கூட அதேபோல் வலுவான ஒரு பாத்திரத்தை உருவாக்கி.. ஜாதி அமைப்புகளுக்கு ஒரு தீனி போட்டு பெருந்தவறு செய்துவிட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+