Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாரா இருந்தாலும் ரூல்ஸ் ரூல்ஸ்தான்.. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் சஸ்பெண்ட்! போலீசுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பைக்கில் செல்லும் போது போலீஸ்காரர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்களை சஸ்பெண்ட் செய்யலாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை போலீஸ்காரர்களே மீறக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் விதிக்கப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதி உள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு விதிமீறலுக்கு அபராதம் போடப்படுகிறது.

dgp-shankar-jiwal-orders-police-to-suspend-drivers-for-driving-without-helmet

அதேவேளையில், முன்னுதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரே பல நேரங்களில் ஹெல்மெட் அணியாமல் சாலையில் பயணிப்பது என போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்க விட்டு செல்கிறார்கள். இது தொடர்பாக சில நேரங்களில் வாகன ஓட்டிகள் அவ்வப்போது வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விடுகிறார்கள். ஒரு சில போலீசாரின் இந்த போக்குவரத்து விதி மீறல் காவல்துறையினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.

போலீசார் சில நேரங்களில் அபராதம் விதிக்கும் போது கூட அந்த வழியாக சில போலீஸ்காரர்கள் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வதையும் அதை சுட்டிக்காட்டி வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்வது என போக்குவரத்து போலீசாருக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், போலீசார் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் போக்குவரத்து விதிகளை மீறும் போலீசார் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:- காவல்துறையில் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண காவலர்கள் வரை அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். காரில் செல்லும் போது முறையாக சீட் பெல்ட் அணிய வேண்டும். பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும். இத்தகைய உத்தரவை காவலர் நிலையில் உள்ள சில போலீசார் பின்பற்றுவது இல்லை.

இவர்களால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். காலை 7 மணிக்கு போலீசார் தங்களின் வருகை பதிவு செக் செய்யப்படும் ரோல் காலின் போது, போலீசார் பைக்கில் வருபவர்களாக இருந்தால் தங்களிடம் ஹெல்மெட் இருப்பதை காட்டி உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஹெல்மெட் இல்லாத போலீசாரை பைக் ஓட்ட அனுமதி அளிக்க கூடாது. அவர்கள் ஹெல்மெட் வாங்கி வந்து ரசீதை காட்டிய பிறகே பைக் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக கூறினர்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+