தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி கேள்வி.. கடுப்பான கஸ்தூரி ராஜா! 27ம் தேதி தீர்ப்பு
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதியான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவதாக அறிவித்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் இருவரும் விவாகரத்துக்கு முழு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுவதால், மீண்டும் இணைய வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது.
இந்த நிலையில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கடுமையாக பதிலளித்துள்ளார். "இது நமக்கு சம்பந்தமில்லாத கேள்வி. நீங்கள் கேட்கக்கூடாது" என்று கூறி, பத்திரிகையாளர்களை சந்திப்பதை கூட தவிர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஏன் பிரிந்தனர்?: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தனுஷின் செயல்பாடுகள், ரஜினிகாந்த் குடும்பத்தினர் தனுஷின் குடும்பத்தை மதிக்காதது போன்ற காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. தனுஷ், போயஸ் கார்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை கட்டியது, ரஜினிகாந்த் இருவரையும் இணைக்க விரும்பினார் போன்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
ரசிகர்களின் ஏமாற்றம்: இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக நம்பிய ரசிகர்கள், தற்போதைய நிலவரத்தால் ஏமாற்றமடைந்துள்ளனர். வரும் 27ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
கஸ்தூரி ராஜா கோபம்: கஸ்தூரி ராஜாவின் கோபமான பதில், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து அவரது குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளதைக் காட்டுகிறது. மகனின் பிரிவு குறித்து அவர் மிகவும் கவலைப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்விகளுக்காகத்தான் நான் நிருபர்களையே சந்திப்பது இல்லை என்று தெரிவித்துள்ளார் அவர்.
இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications