Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ச்சே.. தலைதலையா அடித்து கொண்ட ரஜினி.. நாலாபக்கமும் சறுக்கல்.. நேரத்தை பார்த்தீங்களா..!

ஐஸ்வர்யா தனுஷ் விவகாரத்தில் ரஜினியை அதிகமாக பாதித்திருக்கும் என தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் - ஐஸ்வர்யாவின் திருமணமும் சரி, விவாகரத்தும் சரி, இரண்டுமே தம்பதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்பால் எடுக்கப்பட்ட முடிவுகள் என்றாலும், ஒரு தகப்பனாக ரஜினியின் நிலைமை பரிதாபத்தையே ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது..!
தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் முறைப்படி பிரிந்துள்ளனர்.. அதை அறிவித்தும் விட்டனர்.. இந்த விவாகரத்துக்கான காரணம் உறுதியாக தெரியவில்லை.. அதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியமும் இவர்களுக்கு இல்லை.

Recommended Video

    Array

    அதேசமயம், லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளவர் தனுஷ் என்பதால், விவாகரத்துக்கான காரணங்கள் தெரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.. அதனால், யூகத்தின் பேரிலும், அனுமானத்தின் பேரிலும், சந்தேகத்தின் பேரிலும், கற்பனையின் பேரிலும், எண்ணற்ற தகவல்கள் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

     கிசுகிசுக்கள்

    கிசுகிசுக்கள்

    இருவரும் தாங்களாகவே விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதுபோல், தாங்களாகவே விருப்பப்பட்டு பிரிந்தும் உள்ளனர் என்றாலும், ரஜினி என்ற மையப்புள்ளியை தவிர்த்துவிட்டு இவர்களை பார்க்க முடியாது.. காரணம், இவர்களின் திருமணமே ரஜினி என்ற புகழ், செல்வாக்கு மிக்க தனிநபரை அடிப்படையாக வைத்துதான் அமைந்தது.. ரஜினியின் மகள் ஐஸ்வர்யா என்ற அடைமொழியுடன்தான் தனுஷுடனான கிசுகிசுக்கள் அன்று வட்டமடித்தன..

     சூப்பர் ஸ்டார்

    சூப்பர் ஸ்டார்

    ஆரம்ப காலத்தில் சில சர்ச்சைகளில் ரஜினி சிக்கியிருந்தாலும்கூட, தனக்கென இமேஜை தமிழகத்தில் அவர் அரும்பாடு பட்டு உருவாக்கி கொண்டார்.. சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்க, எத்தனையோ அக்னி பிரவேசங்களை ரஜினி இந்த நிற அரசியலில் நிகழ்த்தி காட்ட வேண்டி இருந்தது. இது அத்தனையையும் சுக்குநூறாக உடைத்தது ஐஸ்வர்யாவின் காதல் கிசுகிசுக்கள்தான்.. உண்மையை சொல்லப்போனால், இவர்களின் திருமணத்தை முதன்முதலில் எதிர்த்தது ரஜினிதான் என்று அன்று பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன..

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யாவும் தனுஷின் சகோதரியும் நெருங்கிய தோழிகளாக அன்று இருந்திருக்கிறார்கள்.. இவர்களின் நட்பு பிற்காலத்தில் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையே காதல் மலர அடித்தளம் அமைத்தது என்று சொல்லப்பட்டது.. மற்றொருபுறம் தனுஷ் படத்தை ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்துவிட்டு, ஆல்பர்ட் தியேட்டரிலேயே தனுஷ் மீது ஐஸ்வர்யாவுக்கு காதல் வந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.. இந்த காதல் எப்படி அவருக்கு வந்தது என்பதைவிட, இந்த திருமணத்தை எப்படி ரஜினி ஏற்றுக் கொண்டார் என்ற ஆவல்தான் அதிகமாக எதிரொலித்தது.

     தனுஷ்

    தனுஷ்

    2 நாளைக்கு முன்பு பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், தனுஷ் ரஜினிக்கு மாப்பிளையான கதை குறித்து ரஜினியே சொன்னதாக கூறியிருந்தார்.. அதாவது, தனுஷ் -ஐஸ்வர்யா காதல் குறித்து அதிக கிசு கிசுக்கள் வெளியானதால்தான், வேறு வழியில்லாமல் திருமணம் செய்து வைத்ததாக கூறியுள்ளார். பயில்வான் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், ஐஸ்வர்யாவின் பிடிவாதம்தான், ரஜினியின் மனமாற்றத்துக்கு காரணம் என்று சினிமா வட்டாரத்தில் அப்போது பேசப்பட்டது.

     பிடிவாதம்

    பிடிவாதம்

    மற்றொருபுறம், மகள் ஐஸ்வர்யாவைவிட தனுஷ் வயதில் சிறியவர் என்பதால், ரஜினி இந்த திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றார்கள்.. அளவுக்கு அதிகமாக வெளிவந்த கிசுகிசுக்களா? வயது வித்தியாசமா? மகளின் பிடிவாதமா? தனுஷை ரஜினி வேண்டாம் என்று சொல்ல எது காரணம் என்று தெரியாமலேயே இந்த திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்தது..

    விஐபி

    விஐபி

    தென்னக திரையுலகின் முக்கிய புள்ளியாகவும், தமிழகத்தின் மிக முக்கிய விஐபியாகவும் கருதப்படுகிற ரஜினிகாந்த் வீட்டு திருமணத்தை அவரது குடும்பத்தினர் அறிவிக்கவேயில்லை.. மாறாக வெகு சாதாரணமாக அந்த செய்தி வெளியானது பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.. இதற்கு பிறகும் தனுஷினால் ரஜினியின் மானம் கப்பலேறியதாக செய்திகள் மீண்டும் கிசுகிசுத்தன.. தனுஷ் இயல்பாகவே கிசுகிசுக்களுக்கு பெயர் பெற்றவர்... அதிலும் அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசு கிசுக்கப்படுபவரும்கூட.. அதிலும், சில நடிகைகளின் விவாகரத்துக்கு காரணம் தனுஷ் தான் என்ற பேச்சம் தொடர்ந்து கிசுக்கப்பட்டு வருவது இயல்பாகிவிட்டது..

     வாரிசு நடிகர்

    வாரிசு நடிகர்

    இதில் முதலில் சிக்கியது "நம்பர் பெயர்" கொண்ட படத்தில் நடிக்கும் போது வாரிசு நடிகையுடன்தான்.. இந்த படத்தில் இருவரும் மிக நெருங்கி பழகியதாகவும், ஒரு கட்டத்தில் தனுஷை விட்டு பிரிய மாட்டேன் என பிடிவாதமாக அந்த நடிகை இருந்ததாகவும், இந்த பிரச்சனையை ரஜினிகாந்த் கவனத்துக்கு ஐஸ்வர்யா கொண்டு சென்றதாகவும், உடனே தன்னுடைய நெருங்கிய நண்பரை தொடர்பு கொண்டு, மகளை கண்டித்து வைக்க ரஜினிகாந்த் வலியுறுத்தியதாகவும், கிசுகிசுவின் முதல் நெருப்பு பற்றி கொண்டது.

     லிஸ்ட்

    லிஸ்ட்

    இதற்கு பிறகு, நடிகை "பால்" நடிகை, சமீபத்தில் விவாகரத்து பெற்ற நடிகை, வெளிநாட்டு நடிகை, என்று அந்த லிஸ்ட்கள் நீண்டு கொண்டே இருக்க, இவை அனைத்துமே ரஜினியின் கவனத்துக்கும் விடாமல் சென்று கொண்டிருந்துள்ளது.. எல்லாவற்றையும் கேட்டு ரஜினி நொந்து போனதாகவும் கூறப்பட்டது.. இப்படி ஆரம்பத்தில் இருந்தே தனுஷ் மீதான பார்வை ரஜினிக்கு வேறு மாதிரியாக அமைந்துவிட்டது என்பதா? அல்லது தனுஷ் மீதான வெளிவந்த செய்திகள் எல்லாம் வதந்தியா என்று தெரியவில்லை.. எப்படி இருந்தாலும் ரஜினியை இந்த விவகாரம் நிறையவே உலுக்கி போட்டுள்ளது எனலாம்.

    உடல்நிலை

    உடல்நிலை

    சமீப காலமாக ரஜினிக்கு உடம்பு சரியில்லை.. இதனாலேயே அரசியலுக்கு வராமலேயே, அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுக்க வேண்டியதாகிவிட்டது.. அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக ரஜினி எடுத்த முடிவு, அவருக்கு மனரீதியான பாதிப்பையும், தாக்கத்தையும் நிறையவே ஏற்படுத்தியிருந்ததை நம்மால் மறுக்க முடியாது.. ஆயிரம் பிரச்சனைகள் வீட்டிற்குள் இருந்தாலும், உடலில் ஆயிரம் தொந்தரவுகள் இருந்தாலும், தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதை மட்டும் ரஜினி ஒருபோதும் நிறுத்தி கொள்ளவில்லை.. இப்போது புத்தாண்டு அன்றைக்குகூட ரசிகர்களை மகிழ்ச்சியுடன் சந்தித்தார் ரஜினி.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    அதேசமயம், வீட்டிற்குள் இத்தனை நாளும், இத்தனை புயல் வீசிக் கொண்டிருந்ததை ரஜினி எப்படி சமாளித்திருப்பார் என்பதை நினைத்து பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.. எது எப்படியோ, ஒருவரது புகழானது, எங்கோ உச்சாணி கொம்பில் அவர்களை உயர்த்தி வைத்தாலும், சில சமயம் யோசிக்காமல் எடுக்கும் முடிவுகளானது, எதிர்பாராமல் விதமாக அவர்களை சறுக்கி கொண்டு வந்து மண்ணில் தூசி படிய விட்டுவிடும் என்பதற்கு ரஜினியும் ஒரு உதாரணம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+