சோலி முடிஞ்சுது.. தனுஷ் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்ட அமலாக்கத்துறை! நோ சொன்ன ‘தல’.. கை சுத்தம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார் தனுஷ், தொடர்ந்து தான் இயக்கிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் வாழ்க்கையிலேயே கிடைக்காத ஒரு வாய்ப்பு கிடைத்ததாக எண்ணி மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் தனுஷின் எண்ணத்தில் மண்ணை அள்ளி போடுவது போல இருந்திருக்கிறது என்கின்றனர். உச்ச நடிகர் ஒருவரை இயக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைக்க இருந்ததாகவும், அமலாக்கத்துறை நடவடிக்கையில் சிக்கிய ஆகாஷ் பாஸ்கரனால் தான் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

டாஸ்மாக் நிறுவனத்தை குறி வைத்து அமலாக்கத்துறை நடத்திய சோதனை தற்போது திரைத்துறையில் வந்து நிற்கிறது. டாஸ்மாக் எம்டி விசாகன் ஐஏஎஸ் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக விசாகனின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சென்னை எம்ஆர்சி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ரத்தீஷ் என்பவர் உடன் நெருக்கமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் டாஸ்மாக்கில் எந்த வகையான மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது குறித்தும் விசாகனுக்கு அறிவுறுத்தியதாக சில ஸ்கிரீன்ஷாட்களும் வெளியானது.

Dhanush Ajith Kumar ED

லேப்டாப்பில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ரத்தீஷ் மற்றும் பிரபல தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனை அமலாக்கத்துறை துரத்தியது. துணை இயக்குனராக இருந்து திடீரென டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தவர் தான் ஆகாஷ் பாஸ்கரன். தற்போது தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, மற்றும் சிம்புவின் அடுத்த படத்தை தயாரிப்பதாக அறிவித்தது திரை உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மிகப்பெரிய நிறுவனங்கள் கூட ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்காத நிலையில், புதிதாக வந்த ஒருவர் எப்படி இத்தனை நாயகர்கள், அதுவும் முன்னனி நாயகர்களை வைத்து படத்தை இயக்குகிறார் என ஆச்சரியத்தில் மூழ்கினர். இந்த நிலையில் திமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கு ஆகாஷ் பாஸ்கரனுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அவர் மூலமாகவே திரைத்துறையில் திடீரென இப்படி ஒரு வளர்ச்சியை பெற்றிருக்கிறார் என கூறுகின்றனர்.

மேலும் பராசக்தி படத்தில் நடித்ததற்கு ஈடாக ஆகாஷ் பாஸ்கரன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வீடு கட்டி தருவதாக அதுவும் 70 கோடி ரூபாய்க்கு கட்டித் தருவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதாகவும், விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பராசக்தி, இட்லி கடை ஆகிய படங்களை வெளியிடுவதிலும் சிக்கல் இருக்கிறது.

இந்த நிலையில் தான் மற்றொரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது தனுஷ் இயக்கத்தில் ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது அவர் இட்லி கடை படத்தைத் தான் நம்பிதான் இருக்கிறார். அந்த படம் இன்னும் வெளியாகாத நிலையில் ஆகாஷ் பாஸ்கரனால் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு வந்த வாய்ப்பு, அதுவும் மிகப்பெரிய வாய்ப்பு தனுசுக்கு கிடைக்காமல் போனதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களின் தற்போதைக்கு முதலிடத்தில் இருக்கிறார் அஜித்குமார். கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அவர் அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் மூலமாக தனுஷ் அஜித் குமாரிடம் ஒரு கதையை சொன்னாராம். அதுவும் அஜித்துக்கு பிடித்து போக 20-க்கும் மேற்பட்ட முறை தொலைபேசி மூலம் டிஸ்கஷன் நடந்திருக்கிறது. ஒரு சில முறை நேரிலும் சந்தித்து இருக்கிறார்.

இதற்கிடையே ஆகாஷ் பாஸ்கரனின் தயாரிப்பு நிறுவனம் மீது அமலாக்கத்துறை பார்வை விழுந்திருப்பதை அடுத்து அஜித் அந்த படத்தை முழுக்கு போட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. எப்போதும் தனது கை சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புபவர் அஜித். தனது படங்களும் தனது தயாரிப்பாளர்களும் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார். அந்த வகையில் தான் ஆகாஷ் பாஸ்கரன் மீது குற்றம் இல்லாவிட்டாலும் அல்லது நிரூபிக்கப்படாவிட்டாலும் இன்னும் அவர் மீது சந்தேகம் இருக்கிறது. மேலும் அவர் தலைமறைவாகவும் இருக்கிறார்.

எனவே டான் பிக்சர்ஸ் மூலம் இனி படத்தில் நடிக்கப் போவதில்லை எனவும் தனுஷிடம் அந்த ப்ராஜெக்ட்டை கைவிட்டு விடுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. தானே ஒரு பெரிய நாயகனாக இருந்தாலும் அஜித் போன்ற ஒரு பெரிய நடிகரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தும், தற்போது அமலாக்க துறையால் நழுவி போனதால் மிகுந்த அப்செட்டில் இருக்கிறார் தனுஷ் என்கின்றனர் திரையுலகினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+