சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆதீனத்தின் பல்லக்கு- தி.க., பெரியார். தி.க. அமைப்புகளை தடை செய்ய கொங்கு மக்கள் முன்னணி வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் வலியுறுத்தி உள்ளார்.

Recommended Video

    கொதித்தெழுந்த Mannargudi Jeeyar | Pattina Pravesam Issue | Dharmapuram Adheenam | Oneindia Tamil

    இது தொடர்பாக சி.ஆறுமுகம் இன்று வெளியிட்ட அறிக்கை: இன்று வரை தமிழ் பணியை செய்வதோடு சைவ சமய பக்தர்களுக்கு சமய வகுப்புகள்,
    மாணவர்களுக்கு கல்வி, பொதுமக்களுக்கு மருத்துவ உதவி,தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி அளிப்பது,ஆதி சைவ சிவாச்சாரியார்களுக்கு
    பாட சாலை, தேவாரம், திருவாசகம் வகுப்புகள், அன்னதானம், வேளாளர் ஆதீனங்களுக்கே உண்டான 32 அறங்களையும் திறம்பட செய்து வருகிறார் தருமைப்புர சன்னிதானம் அவர்கள்!

    பல்லக்கு தூக்குவதை ஆதரிப்போரின் கொள்கை.. இதுதான் பார்ப்பனியம்! இதுதான் இந்துத்துவம் - திருமாவளவன் பல்லக்கு தூக்குவதை ஆதரிப்போரின் கொள்கை.. இதுதான் பார்ப்பனியம்! இதுதான் இந்துத்துவம் - திருமாவளவன்

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை

    இப்படிப்பட்ட பழம்பெருமை வாய்ந்த சன்னிதானத்தை பல்லக்கில் வைத்து தோளில் சுமந்து பட்டிண வழிபாட்டிற்கு அழைத்து வருவது சைவ சமய தொண்டர்கள் வழிபாட்டு முறையில் ஒன்றாகும்! ஆனால், தமிழர் வழிபாட்டின் மீதும், வேளாளர் ஆதினங்களின் மேலும் காழ்ப்புணர்ச்சி கொண்டும், குறிப்பிட்ட பிரிவு மக்களிடம் தன்னிருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் திக,விசிக, தந்தை பெரியார் திராவிடர் கழகம்,போன்றவை ஆதீனத்திற்கு எதிராக போராட்டம் செய்வோம் என பேசி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டி விடுவதை கொங்கு மக்கள் முன்னணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்!

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை

    இப்படிப்பட்ட பழம்பெருமை வாய்ந்த சன்னிதானத்தை பல்லக்கில் வைத்து தோளில் சுமந்து பட்டிண வழிபாட்டிற்கு அழைத்து வருவது சைவ சமய தொண்டர்கள் வழிபாட்டு முறையில் ஒன்றாகும்! ஆனால், தமிழர் வழிபாட்டின் மீதும், வேளாளர் ஆதினங்களின் மேலும் காழ்ப்புணர்ச்சி கொண்டும், குறிப்பிட்ட பிரிவு மக்களிடம் தன்னிருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் திக,விசிக, தந்தை பெரியார் திராவிடர் கழகம்,போன்றவை ஆதீனத்திற்கு எதிராக போராட்டம் செய்வோம் என பேசி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டி விடுவதை கொங்கு மக்கள் முன்னணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்!

    திகவுக்கு தடை

    திகவுக்கு தடை

    பகுத்தறிவு என்ற போர்வையில் மேற்கத்திய தனிமனித ஒழுங்கீன கலாச்சார வாழ்வியலை பரப்பியும், தமிழர் வழிபாட்டு நெறியியல் கட்டமைப்பை சீர்குழைத்திட பல்வேறு வகையில் தொடர்ந்து செயல்பட்டும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தும் வரும் திராவிடர் கழகம்,பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்!

    இதை பேசுவீங்களா?

    இதை பேசுவீங்களா?

    சமூக நீதி பேசுகின்ற இந்த அமைப்புகள் எல்லாம் எப்போதாவது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 200,100, என திரையரங்கு போல இறைவனை வணங்க கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து பேசாதது ஏன்? அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பாரளுமன்ற உறுப்பினர், ஆளும்கட்சி பிரமுகர் திரைப்பட நடிகர் நடிகைகள் என அனுமதிக்கப்படும் சிறப்பு வழி தரிசனங்களை எதிர்க்காதது ஏன்? சாதிய தீண்டாமையை எதிர்ப்பதாக வேடமிட்டு கொண்டு நவீனமயமாக அதிகார, பொருளாதார தீண்டாமைகளை கட்டமைத்தது ஏன்? பனமும், அதிகாரமும் உடையவன் கருவறை அருகிலும், ஏழை 50 அடி தூரத்திலும் இறைவனை கானும் அவலம் ஏன்? 50 அடி தூரத்தில் நின்று இறைவனை பார்த்தாலும் அவனை தள்ளிவிட்டு அவமதிப்பது ஏன்??? இது அவர்கள் கண்களுக்கு தெரிந்தும் பேசாதது ஏன்??

    வழிபாடு மீதான வன்மம்

    வழிபாடு மீதான வன்மம்

    இதையெல்லாம் கண்டிக்காத, எதிர்க்காத இவர்கள் எல்லோரையும் சமமாக இறைவனை வழிபட அனுமதிக்கும் ஆதீனங்களுக்கு எதிராக போராடுவது தமிழர் வழிபாட்டின் மீது கொண்ட வன்மமே ஆகும்!இவர்கள் ஆதினங்களுக்கு எதிராக போராடினால் கொங்கு வேளாளர்கள் சமூகம் ஆதினங்களுக்கு ஆதரவாகவும், போராடுபவர்களுக்கு எதிராகவும் இருக்கும் என்பதை கொங்கு மக்கள் முன்னணி சார்பாகவே தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு சி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Kongu Makkal Munnani has urged to ban DK, PDK in the Dharmapuram adheenam row.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X