Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு கை பார்த்தரலாம்.. புது கட்சியுடன் சசிகலா அதிரடி பிளான்.. உண்மையை உடைத்த திவாகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சசிகலா புதிய கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க இருப்பதாகவும், தேர்தலுக்கு பிறகு அதிமுக அவர் வசம் செல்லும் என்று அவரின் சகோதரர் திவாகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. ஆனாலும் கூட்டணி, உள்கட்சி பிரச்சனை என்று அதிமுக பல்வேறு நெருக்கடிகளில் தத்தளித்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக திமுகவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டது.

Dhivakaran

காட்சிகள் மாறும் [Dhivakaran]

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இருக்கும் கூட்டணியில் அமமுக தனி டிராக்கில் பயணித்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும் தீவிரம் காட்டி வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் திமுக அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது. தற்போது எடப்பாடிக்கு அடுத்த சிக்கல் எழுந்துள்ளது.

சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேக நேர்காணல் வழங்கியுள்ளார். அதில், "டிடிவி தினகரன் பொய் புரட்டுக்கு சொந்தக்காரர். அவர் என்ன சொன்னால் என்ன. அரசியல் பிராடு சொல்வதையெல்லாம் என்னிடம் கேள்வியாக கேட்க வேண்டாம். முதலில் ஜா அணி ஜெ அணி பிரிந்திருந்து எப்படி ஒன்றாக இணைந்ததோ அப்படி இதுவும் மாறும்.

வாழ்வோ.. சாவோ..

எடப்பாடி வராவிடினும் அதிமுக ஒன்றாக வந்துவிடும். தேர்தலுக்கு பிறகு அதிமுக சசிகலா வசமாகும். எடப்பாடி மட்டுமே அதிமுக இல்லை. இங்கு நிறைய பேர் இருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக இணைய வாய்ப்பில்லை. அதிமுக வாக்கு பிளவுபட்டால் திமுகவுக்கு சாதகம் என்பது கட்சி யாரிடம் இருக்கிறதோ, அவர்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்க வேண்டும்.

இரட்டை இலை யாரிடம் இருக்கிறதோ, கட்சியை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு தான் இருக்க வேண்டும். நாங்கள் காத்திருந்து பார்த்தோம். முடியவில்லை. அதனால் களமிறங்க முடிவு செய்துவிட்டோம். சசிகலா புதிய கட்சியை தொடங்கவுள்ளார். வேட்பாளர்களை களமிறக்கி தேர்தலை சந்திக்கவுள்ளார். வாழ்வா சாவா என ஒரு கை பார்க்க துணிந்துவிட்டோம். கட்சியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+