விஜய் வீட்டு வாசலில் சேலம் ரசிகர் குமுறிய அந்த 2 நிமிட வீடியோவை எடுத்து போட்டு வைஷ்ணவி விமர்சனம்
சென்னை: நடிகர் விஜய் "ஒரு வேளை நேற்றைய தினம் முருகர் மாநாட்டில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டிருந்திருப்பாரோ, அதனால்தான் வீட்டுக்கு வந்த ரசிகர்களை அவர் பார்க்கவில்லையா" என வைஷ்ணவி கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய் பிறந்தநாளுக்காக அவரை தேடி நீலாங்கரை வீட்டிற்கு சென்ற ரசிகர்களை அவர் பார்க்கவில்லை என கூறி சேலம் ரசிகர் ஒருவர் கொந்தளித்தார். இந்த வீடியோவை குறிப்பிட்டுத்தான் வைஷ்ணவி ஒரு பதிவை போட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு வேளை முருகர் மாநாட்டிற்கு "Online" மூலம் கலந்து கொண்டு இருந்திருப்பாரோ!? மக்களை நேசிக்கும் தலைவராக இருந்திருந்தால் வந்திருப்பார். இவர் @TVKVijayHQ தான் மக்களை சந்திக்க விரும்பாத "Online அரசியல்வாதி" ஆயிற்றே!! இவ்வாறு விமர்சித்துள்ளார்.
நேற்று விஜய்யின் 51 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் விஜய் ரசிகர்கள் தங்கள் பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை செய்தனர். அது போல் விஜய் பிறந்தநாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு அவரை பார்ப்பதற்காக நேற்று அதிகாலை முதலே தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்தனர். ஆனால் வீட்டுக்குள்ளேயே இருந்த விஜய், ரசிகர்களை தூரத்தில் இருந்து கூட பார்க்கவில்லை என கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் ரசிகர்கள் "விஜய் எப்போது வருவார்" என கேட்டபோது அங்கிருந்த விஜய் தரப்பினர், 12 மணிக்கு வருவார், 1 மணிக்கு வருவார் என தெரிவித்து வந்தனர். ஆனாலும் அவர் வராததை அடுத்து மீண்டும் ரசிகர்கள் கேட்டதற்கு விஜய் வெளியே சென்றுவிட்டார்கள் என்றார்களாம்.
ஆனால் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஒரு காரில் விஜய் இல்லை என்கிறார்கள். குழந்தைகளுடன் மிகவும் தூரத்தில் இருந்து வந்த பல்வேறு மக்கள் கால்கடுக்க காத்திருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து பைக்கிலேயே 6 மணி நேரம் பயணம் செய்து வந்த இளைஞர் ஐயப்பன் கொந்தளித்தார்.
அவர் கூறுகையில், நான் சேலத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு பைக்கிலேயே கிளம்பி இன்று காலை 6.30 மணிக்கு நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வந்தோம். அவரை பார்க்கவே முடியவில்லை. வெளியே வரவே இல்லை. இப்படியெல்லாம் செய்தால் ரசிகர்கள் மாறத்தான் செய்வார்கள்.
நான் என் வண்டியில் இருந்து விஜய்யின் போட்டோவை எடுக்கலாம் என நினைக்கிறேன். எனக்கு வெறுத்தே போய்விட்டது. இவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லத்தானே இத்தனை வந்திருக்கிறோம்.
ஒரு 2 நிமிடம் வெளியே வந்து பார்த்தால் விஜய்க்கு என்னவாகிவிடும். 12.30 மணிக்கு வந்து பார்ப்பார் என்றார்கள் வரவில்லை, சரி 1 மணிக்கு வருவார்னு சொன்னாங்க, அதுவும் வரவில்லை. அப்புறம் கேட்டால், காரில் கிளம்பி போய்விட்டார் என்றார்கள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். காரில் யாருமே போகவில்லை.
அவர் வந்து எங்களை பார்க்க விருப்பமில்லை. 2026 இல் அவரை பார்க்க எங்களுக்கும் விருப்பமில்லை. தவெகவுக்கு ஓட்டு போட மாட்டேன். இதுவரை திமுக, அதிமுகவுக்கு போடலை, இப்ப தவெகவுக்கும் போடமாட்டேன். எப்போதும் போல் நோட்டாவுக்குத்தான் போடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் விஜய் மீது அதிருப்தியில் உள்ளனர்.
ஒரு வேளை முருகர் மாநாட்டிற்கு “Online” மூலம் கலந்து கொண்டு இருந்திருப்பாரோ!?
— Vaishnavi (@vaishnavi_cbe) June 22, 2025
மக்களை நேசிக்கும் தலைவராக இருந்திருந்தால் வந்திருப்பார். இவர் @TVKVijayHQ தான் மக்களை சந்திக்க விரும்பாத “Online அரசியல்வாதி” ஆயிற்றே!! https://t.co/BSHt2XGnD8
இதைத்தான் திமுக வைஷ்ணவியும் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்ஸ்டாவில் தவெக வைஷ்ணவி என்றால் மிகவும் பிரபலம். இவருக்கு 20 வயதாகிறது. இவர் தவெக சார்பில் கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார்.
இவ்வாறு இவர் செய்யும் நலத்திட்டங்களை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டு வந்தாராம். ஆனால் அது போல் சமூகவலைதளங்களில் போஸ்ட் போடக் கூடாது என தவெக சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவி, தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அங்கு ஐடி விங்கில் உள்ளார். அவர் அண்மைக்காலமாக விஜய்க்கு பதிலடியை கொடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications