Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காவி" திராவிடம்?.. அவர் அங்கே.. இவர் இங்கே.. நடுவில் தமிழக பாஜக.. கனவு காணும் வாழ்க்கை யாவும்..?

பாஜக அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் அரசியல் பேசியது எல்லாம் அரசியல் ஸ்டண்ட்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக - அதிமுக இடையே உறவில் எந்தவிதமான விரிசலும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து சொல்லி உள்ளார்.. அப்படியானால், கடந்த வாரம், பாஜக - அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் எல்லாம் ஏன் பொங்கி எழுந்தார்கள்? உண்மையிலேயே என்ன நடக்கிறது தமிழக அரசியலில் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்ற முழக்கத்தோடு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழக பாஜக தீவிரத்தை முன்னெடுத்தது.. இந்த 3 மாதங்களில், பாஜக மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் சற்று அதிகம்தான்.

ஆரம்பத்தில் பாஜகவை கண்டுகொள்ளாமல் நகர்ந்து கொண்டிருந்த திமுகவின் அரசியல், சமீபகாலமாக, பாஜகவுக்கு பதிலளிக்கும் நிலைமைக்கு ஆளாகி உள்ளதை மறுக்க முடியாது.

 நயினார்?

நயினார்?

கடந்த வாரம், ஒரே நாளில் 2 விஷயங்கள் நடந்தன.. ஒருபக்கம் பாஜகவின் நயினார் நாகேந்திரன் ஒரு பேட்டி தந்தார்.. மறுபக்கம் அதிமுகவின் பொன்னையன் இன்னொரு பேட்டி தந்தார். "சசிகலா வந்தால் வரவேற்போம்" என்றார் பாஜகவின் நயினார்.. பாஜக வளர்வது தமிழகத்துக்கு ஆபத்து என்றார் பொன்னையன். இவர்கள் 2 பேரும் ஏன் இப்படி சொல்கிறார்? நயினார் ஏன் அதிமுகவை எரிச்சலுட்டும் வகையில் பேட்டி தருகிறார்? பொன்னையன் ஏன் பாஜகவை எரிச்சலூட்டும் வகையில் பேட்டி தருகிறார்? என்ற குழப்பங்கள் வட்டமடித்தன..

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

நயினார் மீது எடப்பாடி தரப்பு கோபம் கொண்டது.. எடப்பாடி தரப்பு மீது பாஜக கோபம் கொண்டது.. இரு தரப்பிலும் அதிருப்திகள், வருத்தங்கள் வெளிப்பட்டன.. இருவருமே ஒருவரையொருவர் குற்றம் சாட்டி கொண்டார்கள்.. ஒருவேளை பாஜக - அதிமுக கூட்டணி முறிகிறதோ? என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால், நயினார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அண்ணாமலை சொல்லிவிட்டார்.. பொன்னையன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று எடப்பாடி, ஓபிஎஸ் இருவருமே சேர்ந்து சொல்லிவிட்டனர்..

 2ம் கட்ட தலைவர்கள்

2ம் கட்ட தலைவர்கள்

அப்படியானால், மறுபடியும் பாஜக - அதிமுக உறவு தொடர்கிறதா என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில் அதை தற்போது தெளிவுபடுத்தி உள்ளார் அண்ணாமலை.. பாஜக குறித்து அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சொல்வது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் சொல்வதே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.. அதிமுக - பாஜக இடையிலான உறவில் எவ்வித குழப்பமும் இல்லை என்று நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் சொல்லி உள்ளார்.

 ரிப்போர்ட்கள்

ரிப்போர்ட்கள்

எனினும், கசப்புகள் எதுவுமே இவர்களுக்குள் இல்லையா? திமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை அதிமுக சப்போர்ட் செய்து மெய்ப்பித்து வருகிறதா? எதற்காக கடந்த வாரம், 2 கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கருத்துக்களை பதிவிட்டார்கள் என்பது குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவைதான்:

 ஸ்டண்ட்கள்

ஸ்டண்ட்கள்

இதெல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்தான்.. கூட்டணி முறியாது.. இன்னும் எம்பி தேர்தல் இருக்கு.. எப்போதுமே ஒரு சிக்கல் என்றால், அதை நேரடியாக எந்த கட்சியின் மேலிடமும் டீல் செய்யாது.. 2ம் கட்ட தலைவர்களை வைத்துதான் ஆழம் பார்க்கும்.. அல்லது பதிலடி தரும்.. முக்கிய பிரதான தலைவர்கள் இதில் தலையிட மாட்டார்கள்.. கடந்த வாரம்கூட, தமிழக பாஜகவைதான் எதிர்த்தார்களே தவிர, ஒருத்தரும் டெல்லி மேலிடம் பற்றி பேசவில்லையே ஏன்? இவர்கள் அண்ணாமலையை மட்டும்தான் எதிர்ப்பாங்க.. ஆனால், மோடி அமித்ஷா குறித்து வாய் திறக்க மாட்டார்கள்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

2ம் கட்ட தலைவர்களே, மேலிடத்தை தொடாமல் பேசும்போது, கட்சியை நடத்தக்கூடியவர்கள் எப்படி பேசுவார்கள்? திமுகவுக்கு மாற்று அதிமுக என்பது பலகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள அரசியல் உண்மை.. ஆனால், அண்ணாமலையின் அதிரடிகளை பார்த்து, மக்களே இப்போது குழம்பி விட்டனர்.. எதிர்க்கட்சி யார் என்று கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.. இதற்காகவே 2ம் கட்ட தலைவர்கள் அப்படியெல்லாம் பேட்டி தந்து, நிலைமையை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

மாற்று

மாற்று

ஆனால், ஒன்று, தமிழக பாஜக என்ன நினைத்தாலும், திமுகவுக்கு மாற்றாகிவிட முடியாது.. காரணம், திமுகவைவிட, ஒரு படி மேலதான் அதிமுகவுக்கு வாக்கு வங்கி உள்ளது.. எவ்வளவுதான் குட்டிக்கரணம் அடித்தாலும், திமுக, அதிமுகவின் வாக்கு வங்கியை பாஜக நெருங்கவும் முடியாது.. அதேசமயம்,அதிமுக இல்லாமல் பாஜக தமிழகத்தில் நகராது.. இது பாஜகவுக்கும் தெரியும்.. பாஜகவை பகைத்து கொண்டு அதிமுக மேலிடத்தினால் நிம்மதியாக இருக்கவும் முடியாது.. ஆனால், பாஜக அதிமுகவுக்கு தேவை.. பாஜகவுக்கு அதிமுக தேவை..

சகஜநிலை

சகஜநிலை

தமிழக அளவில் காழ்ப்புணர்ச்சிகள், வந்து போவது சகஜம் என்றாலும் நிஜம் அதுவல்ல.. வேண்டுமானால் பாஜகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியை மேலும் உயராமல் திராவிட கட்சிகள் தடுக்கலாம்.. அல்லது மத நல்லிணக்கம் சீர்கெட்டுவிடாமல், கரம் கோர்த்து மறைமுகமாக கூட செயல்படலாம்... இப்படி இருந்தால் மட்டுமே பாஜக தலைதூக்காது.. மற்றபடி, அதிமுக தனிப்பட்ட முறையில் பாஜகவுடன் கூட்டணியை நிச்சயம் தொடரவே வாய்ப்புள்ளது" என்றார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+