சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சைலண்ட்டாக சந்தித்த "அந்த" 2 பேர்.. திட்டமிட்டதா.. எதேச்சையானதா.. புரியலையே.. வலம் வரும் டவுட்!

பூங்குன்றத்தை ஓஎஸ் மணியன் சந்தித்து பேசினார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் அரசியல் புள்ளிகள் 2 பேர் சந்தித்து கொண்டுள்ளனர்.. ஆனால் இது எதற்கான சந்திப்பு? திட்டமிட்ட சந்திப்பா? அல்லது யதேச்சையான ஒன்றாக என்ற சந்தேகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

சசிகலா விடுதலையின் தாக்கம் கடந்த மாதத்தில் இருந்தே துவங்கிவிட்டது.. சசிகலா விஷயத்தில் பாஜக தரப்பு கனகச்சிதமாக காய்களை நகர்த்த, அதிமுக தரப்போ அலறி கிடக்க, அமமுக தரப்போ குஷியில் மிதக்க, திமுகவோ எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு வருகிறது.

அதனால், உச்சக்கட்ட கவலையும், கலக்கமும் அடைந்துள்ள எடப்பாடியார், சசிகலா சம்பந்தமாக யாரும் கருத்து சொல்ல கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அத்துடன் யாரெல்லாம் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிறார்களோ, அவர்களையும் கண்காணிக்கும்படி உளவுத்துறைக்கு சொல்லப்பட்டுள்ளதாம்.

 பூங்குன்றன்

பூங்குன்றன்

இதன்காரணமாகவே, சசிகலாவுக்கு ஆதரவானர்கள், அவரை பற்றி அவ்வளவாக பேசாமல் உள்ளனர்.. கருத்தும் வெளிப்படையாக சொல்லாமல் உள்ளனர்.. இந்த சமயத்தில்தான் ஒரு நியூஸ் பரபரத்து வருகிறது.. மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்.. இவர் ஜெ.வின் அதீ நம்பிக்கைக்குரியவர்.. சசிகலா குடும்பத்துக்கும் நெருக்கமானவர்.

 எடப்பாடியார்

எடப்பாடியார்

ஆனால், சசிகலா ஜெயிலுக்கு சென்றபிறகு, இவரை எடப்பாடியார் தரப்பு அவ்வளவாக கண்டு கொள்ளாமலேயே இருந்தது.. அதற்கேற்றபடி, பூங்குன்றனும் முன்புபோல அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.. அடிக்கடி ஜெ.வின் நினைவுகளை மட்டும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்வார்.. "ஜெ.இல்லாத அதிமுக, சிங்கம் இல்லாத காடு போல என்று சொல்லி கொண்டே இருப்பார்.

 சந்திப்பு ஏன்?

சந்திப்பு ஏன்?

இந்நிலையில், வடலூரில் உள்ள வள்ளலார் கோவிலுக்கு பூங்குன்றன் சென்றிருக்கிறார்.. அதே கோயிலுக்கு அதே நேரத்தில் அமைச்சர் சம்பத்தும் வந்திருக்கிறார்.. 2 பேருமே கோயிலில் நடந்த அந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனராம்.. 2 மணி நேரம் கோயிலில் இருந்துள்ளனர்.. இது தான் எதேச்சையாக நடந்ததா? அல்லது ஏதாவது வேறு காரணம் இருக்கிறதா? என்று தெரியவில்லை..

சந்தேகம்

சந்தேகம்

அதேசமயம், இது தொடர்பான செய்திகளும் வெளிவரவே இல்லை. என்பதும் மேலும் சந்தேகத்தை கிளப்பி வருகிறது. சசிகலா வெளியே வந்துள்ள சமயம், அதிமுகவில் எந்த ஒரு சின்ன அசைவுகள் நடந்தாலும், அது திட்டமிட்டு நடந்தாலும், அல்லது எதேச்சையாக நடந்தாலும், பரபரப்பாகவே பேசப்படுவது ஆரம்பமாகிவிட்டது..!!

English summary
Did ADMK Minister and Poonkundram meet in Temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X