கையை நீட்டி பேசிய உதயநிதி.. வணக்கம் வைத்த அண்ணாமலை.. உண்மையில் அங்கே என்ன நடந்தது? கதையே வேறங்க
சென்னை: அமைச்சர் உதயநிதியும் பாஜக அண்ணாமலையும் பேசுவது போல காட்சித் தந்த புகைப்படம் ஒன்று ரிலீஸ் ஆகி கடந்த 2 நாட்களாக வைரலாகியிருந்தது. அதாவது, கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடுவதற்காக சென்னை வந்திருந்தார் ராஜ்நாத்சிங். அந்த விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாஜக தலைவர் அண்ணா மலை உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
கருணாநிதியை மிகச் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவர் மாநில அரசியல்வாதி இல்லை.. தேசிய தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். பாஜக - திமுக நிர்வாகிகள் நெருக்கமாக காணப்பட்டனர். பாஜக இப்படி திமுகவுடன் நெருக்கமாக இருக்க வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுகவின் தயவை பாஜக நாடுகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கலைவாணர் அரங்கம்: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கலைவாணர் அரங்கத்திற்கு ராஜ்நாத் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் உதயநிதியும் அண்ணாமலையும் பேசிக்கொண்டிருந்தனர். அது தொடர்பான ஃபோட்டோ ஒன்று ரிலீஸாகியிருந்தது. அந்த புகைப்படத்தில், உதயநிதி ஒரு விரலை நீட்டி கையை உயர்த்தியிருப்பார் .
அண்ணாமலை இருகரம் கூப்பி நின்றிருப்பார். இந்த புகைப்படம், இது ஏதோ உதயநிதி எச்சரிக்கை செய்வது போலவும், அதற்கு இரு கரம் கூப்பி அண்ணாமலை கும்பிடுவது போலவும் திமுக தரப்பில் பரப்பியிருந்தனர். உண்மையில் நடந்தது என்ன? உதயநிதியும் அண்ணாமலையும் சந்தித்தபோது பரஸ்பரம் இருவரம் கைகளைக் கூப்பி வணக்கம் செலுத்திக்கொண்டனர்.
நலம் விசாரித்துக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் டெல்லிக்கு செல்கிறேன் என இயல்பாக அண்ணாமலை சொல்ல, அதற்கு உதயநிதியும், நீங்க டெல்லி சென்றாலே ஏதேனும் விசேசம் இருக்கும் என இயல்பாக சொல்லியிருக்கிறார். இரண்டு பேர் பேசும்போது கைகளை உயர்த்தியும் நீட்டியும் பேசுவது இயல்பு. அப்படித்தான் உதயநிதி பேசிக் கொண்டிருந்தார்.
உண்மையில் என்ன நடந்தது?: அதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் அண்ணாமலை. அப்போது, நிகழ்ச்சிக்குச் செல்ல அரங்க வளாகத்துக்கு வந்தார் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன். அண்ணாமலை நிற்பதைப் பார்த்ததும், அவருக்கு வணக்கம் சொல்ல அவரை நோக்கி வந்தார். உதயநிதிக்கு பின்னால் இருந்து வந்தார் கராத்தே தியாகராஜன். கராத்தே வணக்கம் சொல்ல, அதற்கு பதில் வணக்கம் சொல்ல இருகரம் கூப்பினார் அண்ணாமலை.
யாருக்கு சொன்னது?: அப்போது சரியாக க்ளிக் செய்திருக்கிறார்கள். கராத்தே தியாகராஜனுக்கு அண்ணாமலை வணக்கம் சொன்னதும், யார் வந்துள்ளார் என உதயநிதி திரும்பிப் பார்க்க, கராத்தே தியாகராஜனை பார்த்ததும், வணக்கம் அண்ணே என அவருடன் கைக்குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார் உதயநிதி. ஆக, அண்ணாமலை சொன்ன இரு கரம் கூப்பிய வணக்கம், கராத்தே தியாகராஜனுக்குச் சொன்னது. ஆனால், புகைப்பட காட்சியோ, உதயநிதியை பார்த்து கும்பிடுவது போல இருக்கும். அதை தங்களின் அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டது திமுக விங்க் என்று புகைப்படக் காட்சியின் உண்மைத் தன்மையை விளக்குகிறார்கள் பாஜக வினர். எதிரும் புதிருமான அரசியலில் ஒவ்வொரு நொடியிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது உதயநிதி-அண்ணாமலை சந்திப்பு காட்சி !
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications