"குலுங்குது" கூடாரம்.. எடப்பாடியின் பேர்கூட "தலைவர்" சொல்லலியே.. அதை கவனிச்சீங்களா.. அங்கே கமல் வேற
எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமலேயே அண்ணாமலை பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது
சென்னை: அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட பிரச்சாரம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.. இந்த பிரச்சாரம், கூட்டணி கட்சிக்கு பலமாக இருந்து வருவதுடன், சில சலசலப்புகளையும் ஏற்படுத்திவிட்டு போயிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது.. இதில், திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் என 4 பேர் போட்டியிடுகிறார்கள்.
தொகுதியில் உச்சக்கட்ட பிரச்சரம் நடந்து வருகிறது.. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என பலருமம் ஈரோடு கிழக்கில் ஐக்கியமாகி உள்ளனர்.

பாஜக டீம்
பாஜக கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவளித்து தன்னுடைய வேட்பாளரை திரும்பப் பெற்றார்.. அதேசமயம், இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது... மேலும், பிரச்சாரத்துக்கு ஓபிஎஸ் டீமை இதுவரை எடப்பாடி தரப்போ அல்லது பாஜக தரப்போ அழைக்காமலேயே உள்ளதும், கடும் அதிருப்தியை கூட்டி வருகிறது.. இந்த இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் டீமை, பாஜக நடத்திய விதம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது...

சிறுபான்மையினர்
அதனால்தான், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவாக அண்ணாமலை செயல்படுகின்றார் என்று பகிரங்கரமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்... தீர்மானமும் நிறைவேற்றினர். இப்படிப்பட்ட சூழலில், பாஜக பிரச்சாரம் செய்வதையே எடப்பாடி தரப்பு அவ்வளவாக விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது.. காரணம், சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காகவே, பாஜக முக்கிய தலைவர்கள் இல்லாமலேயே ஈரோட்டில் பிரச்சாரங்களை நடத்த மறைமுக உத்தரவுகள் பறந்ததாக சொல்லப்பட்டது.. மேலும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரச்சாரத்திலும் பேசியிருந்தார்.. அதற்கேற்றவாறு, அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரங்களில் பாஜகவில் யாரும் கலந்து கொள்ளவில்லை..

பச்சை கொடி
தேர்தலுக்கு ஆதரவு மட்டும் என்ற அடிப்படையில் மூத்த தலைவர்கள் ஒரு சிலர் மட்டுமே சென்று அடிக்கடி தலையை காட்டி வருகின்றனர். அதேபோல, பிரசாரங்களில் கூட்டணியின் முக்கிய கட்சியான பாஜக கொடிகள் கூட தென்படவில்லை என்றும் சொல்கிறார்கள். இதனிடையே, அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, 19, 20ம் தேதிகள் என 2 நாட்கள் பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார்.. ஆனால், அண்ணாமலையுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னதுமே, பாஜக தரப்பு கடுமையான அதிர்ச்சியை அடைந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அண்ணாமலை பிரச்சாரம் செய்ய வந்தார்.

செங்கோட்டையன்
இந்த பிரச்சாரத்தில் நடந்த சில விஷயங்களை கோடிட்டு காட்டுகிறார்கள் நடுநிலையாளர்கள்.. தொகுதியில் பிரச்சாரம் செய்ய அண்ணாமலை வருவதற்குமுன்பு, அதிமுக மற்றும் பொதுக்கூட்டம் அவ்வளவாக கூடவில்லையாம்.. இந்த விஷயம் அண்ணாமலை காதுக்கு எட்டியதுமே, அவர் சீனியர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி ஆகியோரை தொடர்பு கொண்டு கூட்டம் இல்லாதது பற்றியும், அதிமுகவினர் கூட்டத்திற்கு வராமல் இருப்பது பற்றியும் பேசினாராம்.. அதற்கு பிறகே, வேலுமணி தன்னுடைய ஆதரவாளர்களுடன் கொடியுடன் பிரச்சார கூட்டத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது...

புயல் கமல்
அதுமட்டுமல்ல, இந்த பாஜக பிரச்சார கூட்டத்திற்கு 100 அடி தூரத்தில்தான் கமலும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.. நீண்ட நேரமாகியும் அண்ணாமலை வராததால் கூட்டத்திற்கு திரண்டவர்கள், கமலை பார்க்க சென்றுவிட்டார்களாம்.. அதனால், அண்ணாமலையின் பிரச்சாரத்தின்போது, அதிமுகவினர் பெருமளவு திரள முடியாமல் போனதுடன், பிரச்சாரத்தையும் புறக்கணித்தது பாஜவினருக்கு மேலும் அதிர்ச்சியை தந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. இன்னொன்றையும் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த முதல்நாள் பிரச்சாரத்தில், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். மாஜிக்கள் உட்பட, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெயர்களை எல்லாம் மறக்கமல் சொன்ன அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லவில்லை என்கிறார்கள்..

விஜயதாரணி
அதுவும் எதிர்தரப்பில் உள்ள விஜயதாரணி உட்பட அனைவரையும் விமர்சித்த அண்ணாமலை, சொந்த கூட்டணியின் எடப்பாடி பற்றி சொல்லாததும், அவர் பெயரை ஒருஇடத்தில் கூட உச்சரிக்காததும், அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.. சுருக்கமாக சொல்லப்போனால், ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு, பிரச்சார வியூகத்தை முன்னெடுப்பதில் தமிழக பாஜக ஆர்வம் காட்டி வருகிறது.. மற்றொருபக்கம், பாஜகவை தவிர்த்துவிட்டு பிரச்சாரம் செய்ய அதிமுக ஆர்வம் கொண்டுள்ளது.. இதற்கு நடுவில், எடப்பாடி பெயரைகூட சொல்லாமல் பாஜக தரப்பு பிரச்சாரத்தை நடத்தி முடித்துள்ளது.. ஆக மொத்தம், அதிமுக -பாஜக கூட்டணிக்குள் உள்ள மோதலை இவைகள் எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டுவதாக முணுமுணுப்புகளும், சலசலப்புகளும் கிளம்பி உள்ளன..!!!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications