Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனாவசியமாக பேசாதீங்க.. டெல்லி தந்த அட்வைஸ்.. அண்ணாமலை நடைபயணம் நிறுத்தமா? ப்ரியன் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் அனாவசியமாக சர்ச்சையை உண்டாக்க வேண்டாம், கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்கள் என்று டெல்லி பாஜக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கூறி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக இடையிலான மோதல் மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. டெல்லி பாஜகவோடு அதிமுக தலைவர்கள் நட்பாகவே உள்ளனர். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் அதிமுகவிற்கு அவ்வளவு சுமுகமான உறவு இல்லை.

முக்கியமாக அண்ணாமலை - எடப்பாடி இடையே அவ்வளவு நட்பான உறவு இல்லை. இந்த நிலையில்தான் தனது நடைபயண யாத்திரைக்கு இடையே பேட்டி அளித்த அண்ணாமலை, ஓ பன்னீர்செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. என்டிஏ கூட்டணி குறித்து முடிவு செய்வோம். அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல விஷயங்களை செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கவே நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்குத்தான் பாஜகவில் இணைந்தேன்.

கட்சியின் தொண்டனாக தலைமை சொல்வதை கேட்பேன். அவர்கள் சொல்வதை கேட்டு அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லி போவதில், அங்கே பதவி பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமிழ்நாட்டில்தான் நான் அரசியல் செய்வேன், என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

Did Annamalai stop his Yatra in Tamil Nadu? What did Delhi BJP say to him?

அண்ணாமலை பிரேக்: இந்த நிலையில்தான் அண்ணாமலை தனது நடைப்பயணத்தில் பிரேக் எடுத்துள்ளார். இன்று மதுரையில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டிய அண்ணாமலை பிரேக் எடுத்துள்ளார். அண்ணாமலை டெல்லிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அண்ணாமலை சென்னை சென்று உள்ளார். அங்கே அண்ணாமலை ஓய்வு எடுத்து வருகிறார்.

பேட்டி: இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பிரேக் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், அண்ணாமலை பயணத்திற்கு இடையே ஏன் ரெஸ்ட் எடுக்க வேண்டும். அந்த அளவிற்கு அவர் நடக்கவே இல்லையே. அந்த அளவிற்கு அவர் நடக்காத போது ஏன் ஓய்வு. 120 -150 கிமீ அவர் நடந்தாரா? இல்லையே? அவர் மொத்தமாக நடந்ததே 30 - 40 கிலோ மீட்டர் தூரம்தான்.

அதற்கு மேல் அவர் நடந்திருக்க முடியாது. அவர் நடப்பதே இல்லையே. கேரவனில்தான் செல்கிறார். ஒருநாளுக்கு அதிகபட்சம் 3-4 கிலோ மீட்டர்தான் நடக்கிறார். டவுன் எல்லை வரை பேருந்தில் வந்துவிட்டு அதன்பின் உள்ளே நடந்து வருகிறார். மீண்டும் கேரவனில் செல்கிறார். அவர் செய்வது யாத்திரை என்று சொல்கிறார்கள். நடைபயணம் இல்லை என்கிறார்கள். அதேபோல் அண்ணாமலைக்கு எதிராக டெல்லி புகார் சொல்லி இருக்கிறது.

Did Annamalai stop his Yatra in Tamil Nadu? What did Delhi BJP say to him?

நீங்கள் அனாவசியமாக சர்ச்சையை உண்டாக்க வேண்டாம், கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்கள் என்று டெல்லி அவரிடம் கூறி உள்ளது. ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை மதுரையில் பேசியது சர்ச்சை ஆகி உள்ளது. இதை பற்றி நட்டாவிடம் டெல்லியில் அதிமுக வேலுமணி, தங்கமணி மற்றும் எடப்பாடி கூட புகார் சொல்லி உள்ளனர். தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறார் என்று புகார் சொல்லி உள்ளனர்.

ஓபிஎஸ் பற்றி எல்லாம் அண்ணாமலை ஏன் பேசுகிறார். நீங்கள் ஒருமாதிரி பேசுகிறீர்கள்.. அண்ணாமலை ஒரு மாதிரி பேசுகிறார் என்று நட்டாவிடம் அதிமுகவினர் புகார் சொல்லி உள்ளனர். அண்ணாமலை பேச்சு காரணமாக அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதை டெல்லியில் அதிமுகவினர் பேசி உள்ளனர்.

இதனால் அண்ணாமலையிடம் நீங்கள் அனாவசியமாக சர்ச்சையை உண்டாக்க வேண்டாம், கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்கள் என்று டெல்லி அவரிடம் கூறி உள்ளது., என்று ப்ரியன் கூறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+