"பூனைக்கு மணி".. அப்ப நாங்களும் ஆரம்பிக்கட்டுமா.. "கருப்பு" வீசிய வெடி.. விழிபிதுங்கும் எடப்பாடி டீம்
பாஜக அதிருப்தியாளர்கள் அதிமுகவில் இணைந்தது குறித்து கருப்பு முருகானந்தம் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழக பாஜகவுக்குள் ஏராளமான பூசல்கள், அதிருப்திகள் வெடித்து வரும் நிலையில், இதற்கான காரணங்களை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். என்ன நடக்கிறது பாஜகவில்?
பாஜக ஐடி விங் தலைவராக இருந்த, நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் நேற்றுமுன்தினம் இணைந்துள்ளார்...
அத்துடன், இடத்துக்கு ஏற்ப நடித்து ஏமாற்றிவரும் அண்ணாமலையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அளிப்பதாகவும், '420 மலை' என்றும் கடுமையாக விமர்சித்துவிட்டு போயுள்ளார்..

டோட்டல் காலி
சொந்த கூட்டணி கட்சி என்றும் பாராமல், பாஜகவுக்கே செக் வைத்து கிலியை கிளப்பி விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. நிர்மல்குமாரை தன்பக்கம் எடப்பாடி இழுப்பதன்மூலம், "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற பேச்சுக்கே இடமில்லை என்று, பாஜகவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டு வருகிறது. அதேபோல, காயத்ரி ரகுராம் முதல் ஒவ்வொரு நிர்வாகியும் பாஜகவில் இருந்து விலகி வரும் சூழலில், இன்னொரு நிர்வாகியும் விலகியுள்ளதுடன், கடந்த 2019-ல் இருந்து பாஜகவின் கட்டமைப்பில், இப்போது 20% கூட இல்லை என்றும் நிர்மல்குமார் தெரிவித்துள்ளது, பாஜக சீனியர்களுக்கு கலக்கத்தை தந்துவந்தது.. இந்த அதிர்ச்சி முடிவதற்குள்ளேயே அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக மாநில செயலாளர் திலீப் கண்ணன் கட்சியில் இருந்து விலகியுள்ளார்..

மோசம் மோசம்
இவரும் அண்ணாமலை மீது விமர்சனங்களை தூவிவிட்டு சென்றுள்ளார்.. "தன்னைத் தவிர வேறு யாருக்கும் மீடியா வெளிச்சம் வரக் கூடாது என பாஜகவினரை டிவி விவாதங்களுக்கு அனுப்புவதில்லை. தன்னை நேர்மையானவர் எனக் கூறிக் கொள்ளும் அண்ணாமலை ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார். தான் வந்த பிறகு எல்லாம் செய்தது போல் அண்ணாமலை பேசுவதாகவும், சொந்தக் கட்சியில் பல ஆண்டுகளாக உழைப்பவர்களை வேவு பார்ப்பது அண்ணாமலையின் வேலை என்றும் புட்டு புட்டு வைத்துவிட்டு போயுள்ளார்..

66000+
கடந்த 2 நாட்களாகவே, பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை குறை சொல்லிவந்த நிலையில், நேற்றைய தினம், பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி பதிலடி தந்தார்.. ஆனால் கட்சியை விட்டு பிரிந்துசென்றவர்களை பற்றி விமர்சிக்காமல், கட்சியில் இவர்களை இணைத்து கொண்ட எடப்பாடி பழனிசாமி பற்றி காட்டமாக சீறியுள்ளார்.. அமர்பிரசாத் அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமாவார்.. கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு, எடப்பாடி இப்படி செய்திருக்கக் கூடாது என்றும், 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்திருப்பது அங்கு துளியும் செல்வாக்கு இல்லை என்பதை காட்டுகிறது என்றும் அமர்பிரசாத் விமர்சித்துள்ளதும், கூட்டணிக்குள் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது.

கருப்பு + கருப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜகவின் இன்னொரு மூத்த தலைவரான கருப்பு முருகானந்தம் இதுகுறித்து விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. கட்சி தாவல்கள் குறித்தும், எடப்பாடி பழனிசாமி குறித்தும் தன்னுடைய கருத்தையும் பதிவு செய்துள்ளார்.. செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "தமிழக பாஜக நிர்வாகிகளை, அதிமுகவுக்கு இழுப்பதால், பாஜகவை பலவீனப்படுத்தி விடலாம், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கின்றனர்.. அப்படி நினைத்து செயல்பட்டால், எங்களுக்கும் எல்லாம் தெரியும்.. அவர்களைப் போல, பாஜகவும் செயல்பட்டால், அதிமுகவின் நிலை என்ன?.

மோசமான வார்த்தைகள்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் போன்றவர்கள் பாஜகவில் இணைந்தது உண்மைதான்.. அதுபோல, இதற்கு முன்பு பாஜக நிர்வாகிகள் சிலரும், அதிமுகவில் இணைந்துள்ளனர்.. அதையெல்லாம் மறுக்க முடியாது.. ஆனால், அவர்களில் யாரும் நிர்மல்குமாரைபோல, கட்சி தலைமையை களங்கப்படுத்தவில்லை.. மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.. எடப்பாடி கூடாரத்துக்கு பாஜக தரப்பில் பதிலடிகள் தரப்பட்டாலும், கூட்டணி கட்சிகளான அதிமுக - பாஜக இடையிலான மோதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

ஓவர் அப்செட்
மூத்த தலைவர்கள், நாராயணன் திருப்பதி, வெங்கடேசன், கோவர்த்தன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சிலருக்கு, சமீபத்தில் மத்திய அரசு பதவிகள் வழங்கப்பட்டன.. அந்தவகையில், தனக்கு எந்த பதவியும் கிடைக்காத அதிருப்தியில் தான், நிர்மல்குமார், அதிமுகவுக்கு தாவிவிட்டதாக பாஜக தரப்பில் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது.. அதுமட்டுமல்ல, இதுபோன்ற கட்சி தாவல்களினால், பாஜகவுக்கு பெரிதாக எந்தவிதமான இழப்பும் ஏற்பட போவதில்லை என்கிறார்கள்.. காரணம், நிர்மல்குமார் என்பவர், ஐடி தளத்தில் பணியாற்றியவரே தவிர, களத்தில் இறங்கி பணியாற்றிய பிரமுகர் கிடையாது. அதனால், அவரது பங்களிப்பு என்பது கட்சிக்கு பெரிதாக தாக்கத்தை இதுவரை ஏற்படுத்தியது கிடையாது.

பூனைக்கு மணி
களரீதியாக செயல்பட்டவர்கள், வேறு கட்சிக்கு தாவினால் மட்டுமே ஒரு கட்சி பாதிக்கப்படும்.. ஆனால், ஐடி விங் என்பது சோஷியல் மீடியாவை கையாளக்கூடிய ஒரு பிரிவு.. அவ்வளவுதான்.. அதுமட்டுமல்லாமல், இவர் ஏற்கனவே 2, 3 கட்சிகளில் இருந்தவர் என்பதால், இப்போதைய கட்சி தாவல் என்பதும் ஒரு சாதாரண நிகழ்வுதான்.. ஒரு தனி நபர், சொந்த விருப்பு காரணமாக, கட்சியில் இருந்து விலகி, இன்னொரு கட்சிக்கு சேர்ந்துவிட்டதாகத்தான் இதை பார்க்க வேண்டுமே தவிர, தமிழக பாஜகவை பொருத்திப்பார்க்க கூடாது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்...

கருவாடு மீன்
ஆனால், மாநில தலைமை மீது கடந்த ஒரு வருட காலமாகவே பல நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்ததாகவும், மேலிடம்வரை புகார் கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான், பூனைக்கு மணி கட்டி, கட்சி தாவல்கள் துவங்கி விட்டதாகவும், இந்த விலகல்கள் இனி அதிகமாகவே நடக்க போகிறது என்றம் சிலர் முணுமுணுக்கிறார்கள்.. பாஜக நிர்வாகிகள் விலகலுக்கு உண்மை காரணம் எதுவென்று தெரியாவிட்டாலும், அதுகுறித்த யூகங்களும், கணிப்புகளும், சலசலப்புகளும் கடந்த 2 நாட்களாகவே இணையத்தை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கின்றன..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications