ரேஷன் கடையில் நிர்மலா சீதாராமன்.. மோடி போட்டோ எங்கே.. கொளுத்தி போட்ட சு.சாமி.. பற்றி எரியும் விவாதம்

ரேஷன் கடையில் பிரதமர் போட்டோ குறித்து நிதியமைச்சர் பேசியது விவாதத்தை கிளப்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிர்மலா சீதாராமன் ஒரு கருத்தை சொல்லி 4, 5 நாள் ஆன நிலையிலும், அது தொடர்பான விவாதங்களும், கருத்துக்களும் சோஷியல் மீடியாவில் உலா வந்து கொண்டேயிருக்கிறது.. இதற்கு காரணம், சாட்சாத் சுப்பிரமணிய சாமிதான்..!

பாஜகவில் இருந்தாலும், சேம் சைட் கோல் போட்டு கொண்டிருப்பவர் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி... ஏதாவது பெரிய பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று நீண்ட காலமாகவே எதிர்பார்த்து காத்திருந்தார்.

அதிலும் நிதியமைச்சர் பதவி மீது இவருக்கு ஒரு கண் 10 வருட காலமாகவே இருக்கத்தான் செய்தது.. ஆனால், மோடி அரசு அந்த பதவியை இவருக்கு தரவே இல்லை.

 ஆல் டைம் ஸ்பெஷல்

ஆல் டைம் ஸ்பெஷல்

இப்படி தனக்கு பதவி தராதது குறித்தும் ட்விட்டரில் எதிர்கருத்துதான் சொல்லியவாறே இருக்கிறார் சு.சாமி.. அதேபோல, நிதியமைச்சர் பதவியில் நிர்மலா சீதாராமனை நியமித்ததாலோ, என்னவோ, அவர் என்ன அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதையும் மறக்காமல் விமர்சித்தும் வருகிறார்.. எந்தவித நடவடிக்கையை நிர்மலா சீதாராமன் மேற்கொண்டாலும், அதற்கு எதிராகவே கருத்து சொல்வது சாமியின் ஆல்டைம் ஸ்பெஷல்!

 ஹேப்பி

ஹேப்பி

ஒருமுறை இப்படித்தான் பொருளாதார தீர்வு குறித்து நிதியமைச்சர் சில திட்டங்களை அறிவித்தார்.. அதற்கு முதல் ஆளாக வந்து விமர்சித்த சு.சாமி, "ஒன்று துணிவு இருக்க வேண்டும், அல்லது புத்திசாலித்தனம் இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க முடியும். ஆனால் என்ன செய்றது? நம்ம கிட்ட இரண்டுமே இல்லையே" என்று அட்டாக் செய்திருந்தார். அதிலும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கூட்டம் நடத்தும்போதெல்லாம் இணையவாசிகள், ஆர்வத்துடன் காத்துக்கிடப்பது சு.சாமியின் கமெண்ட்களுக்காகத்தான்..

 கடுப்பு + வெறுப்பு

கடுப்பு + வெறுப்பு

இப்போது மறுபடியும் நிர்மலாவை விமர்சித்துள்ளார் சுப்பிரமணியசாமி.. 4 நாட்களுக்கு முன்பு, தெலங்கானா மாநிலம் ஜகீராபாத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்குள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தார்... அவருடன் மாவட்ட கலெக்டர் ஜிதேஷ்ஸும் சென்றிருந்தார்.. அப்போது நிர்மலா சீதாராமன் அந்த ரேஷன் கடையில் பிரதமர் மோடி போட்டோ ஏன் வைக்கப்படவில்லை? என்று ஆவேசமாக கேட்டார்.. பிறகு, எங்கள் கட்சி தொண்டர்கள் வந்து பிரதமர் மோடி பேனர் வைப்பார்கள்..

 ஸ்ட்ரைட்டா கண்டிஷன்

ஸ்ட்ரைட்டா கண்டிஷன்

மாவட்ட கலெக்டராகிய நீங்கள் அந்த பேனரை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்... இங்கு பேனர் இல்லாவிட்டால் நான் மறுபடியும் வருவேன் என்று வார்னிங் தந்துவிட்டு போனார். ரேஷன் கடை ஊழியர்களை நிர்மலா கடிந்துகொண்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இதற்கு, வழக்கம்போல், சுப்பிரமணியன் சுவாமி ஒரு பதிவு போட்டு விமர்சித்திருந்தார்.. அதில், தெலங்கானாவில் மாவட்ட கலெக்டரிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்து கொண்ட விதம் வெட்கக்கேடானது என்று தடாலடியாக பதிவிட்டு விட்டார்..

கருத்தலைகள்

கருத்தலைகள்

வழக்கமாக சுப்பிரமணியசாமி, பாஜகவை கிண்டலடித்தாலும், குறை சொன்னாலும், அதை எப்போதுமே பெரிதுப்படுத்துவதில்லை.. சு.சாமியை எதிர்த்து கேள்வி கேட்டதும் இல்லை, அவரை கண்டித்ததும் இல்லை. அதேசமயம், அவருக்கு எந்தவிதமான போஸ்டிங்கையும் தருவதும் இல்லை.. எனினும், இந்த முறை நிதியமைச்சரை இப்படி காட்டமாக கூறியது பாஜக தலைமைக்கே சற்றுஷாக் தானாம். நிர்மலா சீதாராமன், ரேஷன் கடையில் தந்த வார்னிங் சம்பந்தமாக, சோஷியல் மீடியாவில் விவாதங்கள் வெடித்தபடியே உள்ளன.. அத்துடன், சொந்த கட்சியை சேர்ந்த சு.சாமியின் விமர்சனமும், சேர்த்தே கருத்தலைகளை எழும்பி வருகிறது..

 அனலடிக்கும் வாதம்

அனலடிக்கும் வாதம்

"ஒரு தேசத்தின் நிதியமைச்சருக்கு இதெல்லாம் தேவையா? இதுதான் இவரது வேலையா? ரேஷன் கடை ஏரியாவில் உள்ள தாசில்தாரா, கவுன்சிலரோ கேட்க வேண்டிய கேள்வியை, தேசத்தின் நிதியமைச்சராக பதவியை அலங்கரிப்பவர் கேட்கலாமா? கேபினட் அந்தஸ்தில் 2வது இடத்தில் உள்ளதைகூட மறந்து இப்படி செயல்பட்டால், அவருடைய பதவியின் பலம் அவருக்கே தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.. முதலில் ரேஷன் கடைக்கு இவங்க ஏன் போகணும்? ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளிடம் நிதி பெற்று ஆட்சி நடத்துகின்ற மத்திய அரசு மத்திய அரசின் அலுவலகங்களிலும் அனைத்து மாநில முதல்வர்களின் படத்தை வைக்குமா?

கணைகள்

கணைகள்

இதற்கு முன்பு எந்த பிரதமர் படமும் ரேஷன் கடைகளில் நடைமுறையில் இல்லாதபோது, இந்த சட்டம் எப்போது வந்தது? இரண்டு முறை தேர்தலை சந்திக்காமலே மத்திய அரசில் அமைச்சராக பொறுப்பில் உள்ள நிலையில், ரேஷன் அரிசி கடத்தலுக்கும் மத்திய அரசு பொறுப்பேற்குமா என்பதை நிர்மலா சீதாராமன் விளக்குவாரா? என்று கேள்வி கணைகள் இணையத்தை துளைத்தெடுக்கின்றன. மற்றொரு பக்கம், நிதியமைச்சரின் கருத்துக்கு ஆதரவும் தெரிவிக்கப்படுகிறது..

லெட்டர்

லெட்டர்

நிதி அமைச்சரின் இந்த சாதாரண கேள்விக்கு கூட பதில் தெரியாமல் கலெக்டர் இருப்பது சரியா? பிரதமர் போட்டோவைதானே கேட்டார்? தன்னுடைய படத்தை வைக்க வேண்டும் என்று சொல்லவில்லையே? இந்தியா முழுவதும் நியாயவிலை கடைகளில் பிரதமர் மற்றும் மாநில முதல்வர் படம் இருப்பது நியாயமானது தான். ஏனெனில் இரு அரசுகளும் சேர்ந்து தான் மான்யம் தருகின்றன.. நிதியமைச்சர் கேட்டது சரிதான், ஆனால், அதை பொது வெளியில் மாவட்ட கலெக்டரிடம் கேட்காமல், முதல்வருக்கு நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தெரியப்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்..

 சாஃப்ட் கார்னர்

சாஃப்ட் கார்னர்

இதற்கு நடுவில் இன்னொரு க்ரூப் உள்ளே நுழைந்து, நிர்மலா சீதாராமன் குறித்து ஊடகங்கள் இந்த செய்தி எதிர்மறையாக சென்றுவிடவும், வேறு வழியில்லாமல்தான் உள்ளே வந்து சு.சாமி, விமர்சித்து, விஷயத்தை சாஃப்ட் ஆக்கி சென்றுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.. ஆக மொத்தம், ரேஷன் கடை பிரச்சனை 4 நாட்களுக்கும் மேல் ஆகியும், சூடான விவாதத்தை முன்வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+