சித்தாளிடம்.. கொத்தனாருக்கு "குபீர்" ஆசை.. சென்னை கே.கே.நகர் பழைய வீட்டில் "ஒரு நொடி" சபலம்.. ஆண்டவா
சென்னை: 2 நாட்களுக்கு பிறகு கே.கே.நகர் சம்பவத்தில் குற்றவாளியை பிடித்து, ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள் சென்னை போலீசார்.. என்ன நடந்தது?
சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் வசித்து வருகிறார் அந்த பெண்.. தன்னுடைய வீட்டை பழுதுபார்க்கும், புதுப்பித்து தருவதற்காக, சந்துரு என்ற கட்டிட கொத்தனாரை அணுகியிருக்கிறார்.

சந்துரு: உடனே சந்துரு, கடந்த 29ம் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு ஒரு கொத்தனாரை அனுப்பினார்.. அந்த கொத்தனார் பெயர் வேல்முருகன்.. திருவொற்றியூரை சேர்ந்தவர்.
கொத்தனார் வேல்முருகனும், கே.கே.நகர் சூளைப்பகுதியிலுள்ள சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு பழுதுபார்க்கும் வேலைக்காக, சென்றிருக்கிறார். அப்போது உதவிக்காக, 30 வயதுடைய சித்தாள் பெண்ணையும் தன்னுடன் வேலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பழைய வீடு: பழைய வீட்டை புதுப்பிக்கும் பணி என்பதால், அந்த வீட்டில் யாருமே தங்கவில்லை.. சித்தாளும், கொத்தனாரும் மட்டுமே, பணியில் ஈடுபட்டுள்ளனர்.. இதுதான் கொத்தனாருக்கு வசதியாக போய்விட்டது.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சித்தாளுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.. அத்துடன், இந்த விஷயத்தை சித்தாள், வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதறக்க, தன் கையில் வைத்திருந்த சுத்தியலால், சித்தாளின் தலையில் ஒரே போடாக போட்டுவிட்டு, தப்பிவிட்டதாக தெரிகிறது.
இதில் வலிதாங்க முடியாமல் சித்தாள் அலறி துடித்து, அதே இடத்தில் மயங்கி விழுந்துவிட்டார்.. இதற்குபிறகுதான், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்கள்.
விசாரணை: தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும்கூட, சித்தாளை காப்பாற்ற முடியவில்லை.. 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நேற்று பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் சித்தாள்.. இதற்கு பிறகு, எம்ஜிஆர் நகர் தனிப்படை போலீசார் வேல்முருகனை தேட துவங்கினார்.. ஆனால், அதற்குள் வேல்முருகன், ராத்திரியோடு ராத்திரியாக திருப்பூருக்கு எஸ்கேப் ஆகிவிட்டிருந்தார்.. உடனே சென்னை போலீசார், திருப்பூருக்கே சென்று வேல்முருகனை சுற்றி வளைத்து கைது செய்தனர். இப்போது வேல்முருகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சித்தாள் பெயர் சரண்யா.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. கணவர் பெயர் ஆறுமுகம்.. சம்பவத்தன்று., வீடு பழுதுபார்க்கும் பணியினை வேல்முருகனுடன் சேர்ந்து சரண்யா செய்துள்ளார்.. பகல் முழுவதும் ஒழுங்காகத்தான் வேலை பார்த்தாராம் வேல்முருகன்..
பாலியல் டார்ச்சர்: சாயங்காலம் டியூட்டி முடிந்ததுமே, சரண்யாவிடம் பாலியல் டார்ச்சர் தந்துள்ளார்.. தன்னிடம் நெருக்கமாக இருக்கவும் வற்புறுத்தினாராம்.. இதைக்கேட்டு சரண்யா அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.. கிட்ட நெருங்கி வந்தால், "வெளியே ஓடிச்சென்று சத்தம்போட்டு ஊரைக்கூட்டுவேன்" என்று எச்சரித்திருக்கிறார்.
இதைக்கேட்டுதான் வேல்முருகன் பயந்துவிட்டாராம். எப்படிப்பார்த்தாலும், வெளியே சென்று தன்னை சரண்யா காட்டிக்கொடுத்து விடுவார் என்ற பீதியில்தான், சுத்தியலால் சரண்யாவின் பின்தலையிலேயே ஓங்கி அடித்துள்ளார்.. இதில் மயங்கி கீழே விழுந்த சரண்யா, நீண்ட நேரமாக அப்படியே கிடந்திருக்கிறார்..
சித்தாள்: கொத்தனாரும், சித்தாளும் வேலைகளை முடித்துவிட்டு சாயங்காலமே கிளம்பி சென்றிருப்பார்கள், வீட்டை சுற்றி பார்க்கலாம் என்று நினைத்து, அந்த வீட்டின் ஹவுஸ்ஓனர் வந்திருக்கிறார்.. அப்போதுதான், சரண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.. சரண்யாவுக்கு பக்கத்திலேயே அந்த ரத்தக்கரையுடன் சுத்தியலும் கிடந்திருக்கிறது. அதற்கு பிறகுதான் போலீசுக்கு போயிருக்கிறார் ஹவுஸ் ஓனர்..
ஒரே ஒரு செகண்ட் சபலப்பட்டு, மொத்த வாழ்க்கையையும் இழந்து ஜெயிலுக்கு போயுள்ளார் வேல்முருகன்.. இனிமேல்தான் விசாரணை அவரிடம் நடத்த போகிறார்கள் போலீசார்..!!












Click it and Unblock the Notifications