பச்சைக்கொடி.. "அந்த" வார்த்தையை ஸ்டாலின் சொன்னதுமே.. படக்குனு பார்த்த பாமக.. உள்துறையே சொல்லிடுச்சே

வன்னியர் என்ற வார்த்தையை முதல்வர் பயன்படுத்தியதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - பாமக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக சலசலப்புகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு தகவல் ஒன்று தமிழக அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. என்ன அது?

4ஆக உடைந்து கிடக்கிறது அதிமுக, பிளவுபட்ட அதிமுக என்றெல்லாம் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துவரும்நிலையில், அதிமுகவுடனான கூட்டணி முடிவுக்கு வரும் என்றே தெரிகிறது.

மற்றொருபக்கம் இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைக்கவே பாமக விரும்புகிறதாம்.. இதற்கு அமைச்சர் துரைமுருகன் மூலம் காய்நகர்த்தல்கள் நடந்து வருகிறதாம்..

 சித்திரை முழு நிலவு

சித்திரை முழு நிலவு

அதற்கேற்றவாறு, பாமகவின் செயல்பாடுகளும் சமீபகாலமாகவே, திமுகவை அனுசரித்தே நடந்து கொள்வதாக தெரிகிறது.. ஆளுநரைக் கண்டித்து அனைவரும் வெளிநடப்பு செய்ய, 'ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக' பாமகவும் காரணத்தை சொல்லிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. அதேபோல, பாமக சார்பில் மாமல்லபுரத்தில் 'சித்திரை முழு நிலவு' திருவிழா நடக்க உள்ளது.. இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தருமா? தராதா? என்ற சந்தேகமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

 அந்த வார்த்தை

அந்த வார்த்தை

இப்படிப்பட்ட சூழலில், அதுகுறித்த சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.. தமிழக சட்டமன்றத்தில், முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த சம்பவங்கள் பற்றி லிஸ்ட் போட்டு பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.. அதில், பல்வேறு சம்பவங்களை பட்டியலிட்ட அவர், வன்னியர் சங்க மாநாட்டை தொடர்ந்து எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையில், நூறு வாகனங்கள் எரிப்பு, ஆயிரம் வாகனங்கள் உடைக்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.. இதற்கு பாமக உறுப்பினர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

 ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா

ஆனால், 'வன்னியர்' என குறிப்பிட்டதை ஸ்டாலின் தவிர்த்திருக்கலாமே என்று, வன்னியர் சமூக தலைவர்கள் மத்தியில் ஒரு கருத்து பரவி வருகிறதாம்.. அதாவது, வன்னியர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதாக வன்னியர்கள் மத்தியில் பரவி வருகிறது. அந்த சம்பவத்தை சொல்லித்தான் ஆக வேண்டுமெனில், "ஒரு குறிப்பிட்ட" சமூகத்தின் மாநாட்டை தொடர்ந்து நடந்த சம்பவத்தில் என்று குறிப்பிட்டிருக்கலாமே என்றும் வன்னியர் சங்க தலைவர்கள் பேசிக்கொள்கின்றனர்.

 கவனிச்சீங்களா

கவனிச்சீங்களா

முன்புபோல என்றால், இப்படி ஒரு வார்த்தையை திமுக தரப்பு சொன்னதற்கு, பாமக நிச்சயம் எதிர்த்திருக்கும். ஆனால், தற்போது சட்டமன்றத்தில் பாமக எதிர்க்கவில்லை... அதாவது, திமுக கூட்டணிக்குள் நுழைவதற்கும், மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா பொதுக்கூட்டம் நடத்தவும் பாமக திட்டமிடுகிறது.. இதில் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த திமுக அரசு அனுமதிக்காது என்பதை உணர்த்தவே, இதே பொதுக்கூட்டம் நடந்தபோதுதான் வன்முறை வெடித்தது என்பதை முதல்வர் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்கிறார்கள்.. ஆனால், ஒரு சமூகத்தை சித்தரிப்பதற்காக அவர் அப்படி குறிப்பிடவில்லை என்று சொல்கிறது தமிழக அரசின் உள்துறை வட்டாரம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+