முதல்வர் ஸ்டாலின் அப்படி என்ன வார்த்தையில் திட்டினாரு? கோபப்பட்ட ஆளுநர்.. புட்டு புட்டு வைத்த புள்ளி
சென்னை: எரிச்சலூட்டும் வார்த்தைகளை கொண்ட கடிதத்தை தனக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியதாக ஆளுநர் ஆர்.என் ரவி கூறி இருந்த நிலையில் அது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் இரா குமார் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர். என் ரவி சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தான் எடுத்த நடவடிக்கைக்கான காரணங்களை விளக்கி இருந்தார். அதில், அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாகவும், அவர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்.

அவர் அமைச்சராக தொடர்ந்தால் விசாரணையை தடுப்பார். கரூரில் நடந்த ஐடி சோதனையின் போது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதமே விசாரணை தடுப்புக்கு உதாரணம். ஐடி அதிகாரிகள் தாக்கப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களும் பறிக்கப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் ஆரோக்கியமற்ற முறையில் பாரபட்சமாக செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்படுகிறார்.
நான் அவரை நீக்கும்படி ஆலோசனை சொன்னேன். ஆனால் என்னுடைய ஆலோசனையை ஏற்காமல் எரிச்சலூட்டும் வார்த்தைகளை கொண்ட கடிதத்தை எழுதி நான் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக மிதமிஞ்சிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனங்களை வைத்து இருந்தார். இதனால் நான் சட்ட 154, 163 & 164 பிரிவுகள் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குகிறேன், என்று ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டு உள்ளார்.

ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இந்த நிலையில் சரியாக 5 மணி நேரத்தில் ஆளுநர் ஆர். என் ரவி தனது முடிவை மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார்.
அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார்.

எரிச்சலூட்டும் வார்த்தைகளை கொண்ட கடிதத்தை தனக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியதாக ஆளுநர் ஆர்.என் ரவி கூறி இருந்த நிலையில் அது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் இரா குமார் பேட்டி அளித்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், செந்தில் பாலாஜியை மாற்றவும், மாற்றாமல் இருக்கவும் ஸ்டாலினுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரை இலாக்கா மாற்ற ஸ்டாலின் என்ன காரணம் சொல்கிறாரோ அதை ஏற்றுக்கொள்வதே ஆளுநர் பொறுப்பு.
ஸ்டாலின் சொல்லும் காரணத்தை ஏற்றுக்கொள்வதே ஆளுநரின் வேலை, ஆளுநரின் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாம் காரணம் சொல்ல முடியாது. முதல்வருக்குத்தான் அமைச்சரவையில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆளுநர் யார் இதில் முடிவு எடுக்க? செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ஆளுநர் எடுக்கட்டும். இவர் யார் அதை எடுப்பதற்கு.

இந்தியாவிலேயே இதுவரை எந்த ஆளுநரும் எடுக்காத நடவடிக்கையை இவர் எடுத்துள்ளார். ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் வரம்பு மீறிய வார்த்தைகள் இருந்தது என்று ஆளுநர் ரவி கூறுகிறார். என்ன வார்த்தைகளை ஸ்டாலின் பயன்படுத்தினார்? தகாத வார்த்தை எது என்று சொல்லுங்கள்? அவருக்கு தகுமா தகாதா என்பதை அவர் எப்படி சொல்ல முடியும். அதை பொதுவில் விடட்டும் , முதல்வர் ஸ்டாலின் அப்படி என்ன வார்த்தையில் திட்டினாரு என்று ஆளுநர் சொல்லட்டும் என்று மூத்த பத்திரிகையாளர் இரா குமார் பேட்டியில் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications