"அசையுது" அஸ்திவாரமே.. ஸ்டாலினுக்கு திடீர்னு வந்த "மேலிட" போன்.. அரண்டு போன பாஜக.. ஹைலைட்டே வேற போல
சென்னை: பாஜக அல்லாத கட்சிகளை, ஒன்றுதிரட்டும் முயற்சி துரிதமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.. பாஜகவுக்கு எதிரான அணி படுவேகத்தில் ஒன்று தயாராகிவருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. அதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. மேலும், பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணியை அமைப்பதிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றன.

"பாஜக எதிர்ப்பு" என்ற விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து உறுதியாக இருப்பதால், அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
சித்தாந்தம்: திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.. தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது என்றாலும், தேசிய அரசியலிலும் முதல்வர் ஸ்டாலினின் கவனம் குவிந்து வருவதை மறுக்க முடியாது.. அந்தவகையில், பாஜகவுக்கு எதிரான வலிமையான கூட்டணியை அமைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்..
சமூகநீதி: சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் விழா கூட்டத்தின்போதும், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, யார் பிரதமராக வேண்டும் என்பது முக்கியமல்ல; யார்...வரக்கூடாது என்பது தான் முக்கியம்" என்று பேசியிருந்தார். 'ஆமா, ஸ்டாலின் ஏன் பிரதமராகக் கூடாது.. அவர் பிரதமராவதில் என்ன தவறு? என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் பேச்சும் பலரது கவனத்தையும் பெற்றது.. சமீபத்தில், சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதையில் நம்பிக்கை கொண்ட அனைவரும், சமூக நீதிக்கருத்தியலில் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என்று பாஜக அல்லாத தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
கூட்டமைப்பு: அந்தவகையில், சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, கடந்த வாரம் நடந்தது முடிந்தது.. வீடியோ கான்பரன்ஸ்மூலம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி உட்பட, 18 தலைவர்கள் பங்கேற்றிருந்தது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு போனது.
மேலிட பாஜக: பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சியில் ஸ்டாலின் இவ்வாறு இறங்கிவர, இதேபோன்ற முயற்சியை, காங்கிரஸ் மேலிடமும் மேற்கொண்டு வருகிறது.. ஏற்கனவே, இப்படி ஒரு முயற்சியை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்தார்.. ஆனால் அது தோல்வியை தழுவிவிட, அடுத்து மம்தா பானர்ஜி எடுத்தார்.. அது எந்த அளவுக்கு பலனை தந்துள்ளது என்று தெரியவில்லை.. இப்போது கார்கே களமிறங்கி உள்ளார்.. வரப்போகும் எம்பி தேர்லை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவால் உள்ளது..
அதிரடி கார்கே: ஏற்கனவே, 2 பொதுத் தேர்தல்களில் மண்ணை கவ்விய நிலையில், இந்த முறை ஆட்சியை பிடித்தே தீருவது என்ற நெருக்கடி காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜகவுக்கு எதிரான கூட்டணியை கட்டமைப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்.. நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டினால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று காங்கிரஸ் நம்புவதால், இதற்கான முயற்சிகளில் முதலில் அவர் ஈடுபட்டார்.

ஆனால் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் அவருக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை. இதனால் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்று திரளுமா? என்பதில் சந்தேகம் இருந்து கொண்டே வந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ராகுல் காந்தியின் பதவி பறிப்பு விவகாரம் விஸ்வரூபமெடுத்தது.. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளுமே திரண்டு வந்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன.. குறிப்பாக 19 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாராளுமன்றத்திலும், பாராளுமன்ற வளாகத்திலும் போராட்டங்கள் நடத்தின...

ராகுல் பதவி பறிப்பு விவகாரத்தில் கைகோர்த்த எதிர்க்கட்சிகளை அப்படியே பாராளுமன்றத் தேர்தல் வரை ஒருங்கிணைத்து கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக உள்ளதாம்.. இந்த வேலையும் தற்போது ஆரம்பமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.. அந்தவகையில், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கார்கே பேசத்தொடங்கி விட்டாராம்.. அதாவது, மாநிலங்களில் பலத்த செல்வாக்குடன் இருக்கும் கட்சிகளுடன் கார்கே பேசி இப்போதே ஒரு முடிவுக்கு வர திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் இந்த வார தொடக்கத்தில் இருந்து பேச்சுவார்த்தையையும் தொடங்க போவதாக இன்னொரு தகவல் வட்டமடிக்கிறது..
அந்தவகையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடனும் கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.. அப்போது நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும்போது ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும் ஸ்டாலினுடன் கார்கே விவாதித்ததாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, தெலுங்கானா கட்சிகளை எப்படி பேசி சமாளிப்பது என்றும் விவாதித்ததாக சொல்கிறார்கள்.. அப்போது, கார்கேயிடம் சில பிளான்களை, ஸ்டாலின் சொன்னாராம்..
அதனால், எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் காங்கிரசுக்கு மிக முக்கிய பலமாக முதல்வர் திகழ்வார் என்று நம்பப்படுகிறது.. முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய பிறகு பீகார் முதல்வர், நிதிஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடனும் கார்கே போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதைவிட இன்னொரு ஹைலைட் இருக்கிறது.. நாடெங்கிலுமுள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய கூட்டம் நடத்த கார்கே ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிகிறது... ஆக, பாஜகவுக்கு மிகப்பெரிய தலைவலியை காங்கிரஸ் விரைவில் உண்டுபண்ணும் என்றும் சொல்கிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பாப்போம்..!!
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி!












Click it and Unblock the Notifications