கமலின் கறார்.. திமுக சொன்னதை கேட்டு மலைத்த கட்சிகள்.. கூட்டணி லேட்டாகும் போலயே.. "கைமாறுதா கணக்கு"?
சென்னை: ஒருவழியாக மக்கள் நீதி மய்யத்துடன், திமுகவுடனான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அந்தவகையில், இது தொடர்பான சுமூக முடிவு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில காலமாகவே, திமுக கூட்டணியில் மநீம இணைய முயற்சித்து வருகிறது. கூட்டணி வைத்து போட்டியிட 2 + 1 சீட்டுகளை ஒதுக்கவும் கோரி வருகிறது... திமுக 2 சீட்டுக்களை ஒதுக்காமல் போனால், ஒரு பாராளுமன்ற தொகுதி + மேல்சபை எம்பி பதவியையாவது கேட்டு பெற வேண்டும் என்பதும் மய்யத்தினரின் திடமாக முடிவாக இருந்து வருகிறது.

மக்கள் நீதி மய்யம்: காரணம், கடந்த தேர்தல்களில் 7.35% முதல் 9.62% வரை வாக்குகள் பெற்றுள்ளதால், இந்த புள்ளிவிவரங்களை காட்டியே, 2 தொகுதிகளை மய்யம் கேட்கிறதாம்... ஆனாலும் 1 சீட் மட்டுமே கமலுக்கு ஒதுக்க திமுகவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எப்படியாவது 2 சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் கமல் தரப்பு உறுதியாக இருக்கிறதாம்..
இதுவரை அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை மய்யம் - திமுக தரப்பில் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போதுதான் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல்களும் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக 2 விதமான தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன..
காங்கிரஸ்: காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மநீம கட்சியினரை போட்டியிட வைக்கலாம் என்ற கருத்துக்கு காங்கிரஸ் உடன்படவில்லையாம்.. அதனால்தான், இதுவரை எந்த உடன்பாடும் கூட்டணியில் எட்டப்படவில்லை என்கிறார்கள்.
அதேபோல, கோவை அல்லது மதுரை தொகுதியை தரப்பு கேட்டு வருவதாக தெரிகிறது. இந்த 2 தொகுதிகளுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் உள்ளதால், இவைகளை இழக்க மனமில்லை.. அதுவும் இல்லாமல், இந்த 2 சொந்த தொகுதிகளிலும் பல்வேறு திட்டப்பணிகளை கம்யூனிஸ்ட்கள் செய்து வந்திருப்பதால், இந்த தொகுதிகளை கமலுக்கு ஒதுக்கிவிட வேண்டாம் என்று திமுக மேலிடத்திடம் கேட்டுக் கொண்டதாம்.
களப்பணிகள்: இதற்கு நடுவில், கோவை தொகுதியில் குழு அமைத்து கடந்த 6 மாதத்துக்கு முன்பேயே களப்பணிகளை துவக்கி விட்டதால், கோவையை ஒதுக்க வேண்டும் என்று, திமுக மேலிடம் கமல் தரப்பில் சொல்லப்பட்டதாம்.
இரு தரப்பிலிருந்தும் இப்படி சொல்வதால், திமுக மேலிடம் கையை பிசைந்து நிற்கிறது. எனினும், கமல் கட்சி நிர்வாகிகளும், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் ஒன்றாக கலந்து பேசி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு, திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.
பேச்சுவார்த்தை: அந்தவகையில், இதுதொடர்பான ஆலோசனைகள் நடந்து வருவதாக தெரிகிறது.. அதனால்தான், கடந்த 29-க்குள் கூட்டணி பேச்சை முடித்துவிட்டு ஷுட்டிங்கிற்கு வெளிநாடுகளுக்குச் செல்ல கமல்ஹாசன் திட்டமிட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தை தொடங்கப்படாததால் பயணம் ஒத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஓரிரு நாளில் இதுகுறித்த முடிவும் எட்டப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications