சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரி பண்ணலாம்! இலவச இணைப்பாக வரும் ஆளுநர் பதவி! ஆனா 2 "கண்டிஷன்".. ஓபிஎஸ்சுக்கு டெல்லி விறுவிறு ஆஃபர்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்புகிறார். டெல்லி சென்ற அவர்.. கிட்டத்தட்ட பாதி வெற்றி, பாதி தோல்வியுடன் மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார்.

Recommended Video

    சிரிப்போடு வந்த OPS! Delhi Hotel-ல் நடந்தது என்ன?

    அதிமுக பொதுக்குழு நேற்று முதல்நாள் மிகப்பெரிய களேபரங்களுக்கு இடையில்தான் நடந்தது. பொதுக்குழுவிற்கு வந்த ஓ பன்னீர்செல்வம் கடுமையாக அவமதிக்கப்பட்டார். அவரை மேடையில் கூட ஏற விடாத எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வெளியே போயா, வெளியே போயா என்று கூறியதோடு வசை சொற்களையும் கூறினர்.

    இதனால் உடைந்த மனதோடு.. சங்கீதாவில் சாப்பிட்டுவிட்டு ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு திரும்பினார். அன்று மாலையே அவர் டெல்லிக்கும் சென்றார்.

    அதிமுக பொதுக்குழுவில் அவமானம்... இன்று இரவு டெல்லி செல்லும் ஓ பன்னீர் செல்வம்! பரபர பின்னணி அதிமுக பொதுக்குழுவில் அவமானம்... இன்று இரவு டெல்லி செல்லும் ஓ பன்னீர் செல்வம்! பரபர பின்னணி

    அண்ணாமலை

    அண்ணாமலை

    அன்று மாலை பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சிடி ரவி ஆகியோரை ஓ பன்னீர்செல்வம் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்பே அவருக்கு டெல்லி செல்லும் திட்டம் வந்துள்ளது. அதிமுகவை மீண்டும் தன் பக்கம் கொண்டு வர டெல்லியை அணுகலாம் என்று அவர் முடிவு செய்து இருக்கிறார். டெல்லி மூலம் மத்தியசம் பேசினால் எல்லாம் சரியாக வரும் என்று அவர் நினைத்து இருக்கிறார். இதற்காக தன் மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார்.

     சந்திக்க முடியவில்லை

    சந்திக்க முடியவில்லை

    இந்த டெல்லி பயணத்தில் ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார். குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் திரௌபதி முர்மு பாஜக கூட்டணி சார்பாக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அதன்பின் பிரதமர் மோடியை சந்திக்க அவர் முயன்றார். ஆனால் பிரதமர் அலுவலகம் அவருக்கு நேரம் தரவில்லை. எவ்வளவு முயன்றும் பிரதமர் மோடி தரப்பு இவருக்கு நேரம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

     ஆலோசனை

    ஆலோசனை

    இதையடுத்து சில பாஜக நிர்வாகிகளை மட்டும் அவர் சந்தித்து பேசி இருக்கிறார். டெல்லியில் ஒரு முக்கிய பாஜக புள்ளியையும் அவர் சந்தித்து உள்ளார். இன்று மாலையே சென்னை திரும்பும் திட்டத்தில் ஓபிஎஸ் இருக்கிறார். டெல்லியில் பேசிய விஷயங்களை அவர் சென்னையில் தனது ஆதரவாளர்களிடம் பேச இருக்கிறார். இதில் பாஜக பெரிதாக மத்தியசம் செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. ஓரளவிற்கு சமாதானம் செய்ய முயல்கிறோம்.. முடிந்த அளவு மட்டுமே சரி பண்ணலாம் என்று மட்டுமே டெல்லி மேம்போக்காக கூறி உள்ளதாம்.

    ஆஃபர்

    ஆஃபர்

    ஆனால் வேறு ஒரு ஆஃபரை டெல்லி இவருக்கு வழங்கி இருக்கிறதாம். அரசியலில் நீங்கள் அதீத அனுபவம் கொண்டவர். நீங்கள் ஏன் ஆளுநர் ஆக கூடாது. மற்ற மாநிலங்களில் ஆளுநராக உயர் பதவியில் இருக்கலாம். விரைவில் ஆளுநர்களை நாடு முழுக்க பல மாநிலங்களில் கூட மாற்ற இருக்கிறோம். தெலுங்கானாவில் கூட மாற்ற வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஏன் ஆளுநர் ஆக கூடாது என்று டெல்லி தரப்பு இவரிடம் ஆஃபர் கொடுத்துள்ளதாம்.

    கண்டிஷன் 1

    கண்டிஷன் 1

    அதோடு இரண்டு கண்டிஷன்களையும் கொடுத்துள்ளதாம். அதிமுக விவகாரத்தில் நீங்கள் ஆளுநர் ஆன பின் கருத்து சொல்ல கூடாது. அதிமுகவில் இப்போது உங்களுக்கு ஆதரவு இல்லை. அதனால் நீங்கள் விலகி இருக்க வேண்டும் என்பது போல பேசி இருக்கிறதாம். இரண்டாவது கண்டிஷன், உங்கள் மகன்கள், தேவர் சமூகத்தை சேர்ந்த உங்களின் ஆதரவாளர்கள் எங்கள் கட்சியில் இணைய வேண்டும். அவர்களுக்கான பதவி குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறி இருக்கிறதாம் டெல்லி.

    விருப்பம் இல்லை

    விருப்பம் இல்லை

    ஆனால் ஓபிஎஸ் தரப்பு இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆளுநர் பதவி ஆஃபர் என்பதை வெறுமனே ஐடியா போலவே கொடுத்துள்ளனர். அதனால் அதை ஓபிஎஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இப்போதைக்கு ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகும் எண்ணம் கிடையாது. அதிமுகவில் இன்னும் எனக்கு ஆதரவு இருக்கிறது என்று பாஜக தரப்பிடம் ஓபிஎஸ் தெரிவித்து இருக்கிறாராம். இன்று சென்னை வரும் அவர் முக்கியமான சில ஆலோசனைகளை செய்ய இருக்கிறாராம்.

    English summary
    Did Delhi give 2 options and 1 offer to O Panneerselvam on his trip against Edappadi Palanisamy? அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்புகிறார். டெல்லி சென்ற அவர்.. கிட்டத்தட்ட பாதி வெற்றி, பாதி தோல்வியுடன் மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X