Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காகிதத்தில் மட்டுமா.. கடலிலும் அனல் கக்கும் கருணாநிதி "பேனா!" போராட்டம் வெடிக்கும்.. திரண்ட கட்சிகள்

கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பதற்கு எதிர்ப்பு காட்டும் அரசியல் கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதிக்கு பேனா சிலையை மட்டும் நிறுவினால், பார்த்து கொண்டு சும்மா இருக்காது என்றும் நிச்சயம் போராட்டம் நடத்துவோம் என்றும் இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.. இந்த பேனா சிலை நிறுவுவது தொடர்பான விவகாரம், அரசியல் களத்தில் காட்டமாக எதிரொலித்து வருகிறது.

Recommended Video

    பேனா சிலை வைத்தால் மக்கள் போராட்டம் நடக்கும் - அர்ஜூன் சம்பத் *Politics

    தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில், அவருடைய நினைவிடம் அமைந்துள்ள இடத்திலிருந்து மெரினா கடற்கரையில் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடலோர மண்டல மேலாண்மை ஆணையமும் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், இந்த நினைவு சின்னத்தை மெரீனா கடற்கரையில் அமைக்க வேண்டாம் என்று சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தனர்.

     இந்து மக்கள் கட்சி

    இந்து மக்கள் கட்சி

    மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தன் முடிவை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.. அந்தவகையில், இந்து மக்கள் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு இல்லத்திற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்று, அங்கிருந்த காமராஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

     அர்ஜுன் சம்பத்

    அர்ஜுன் சம்பத்

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் சொன்னதாவது: காமராஜர், ஓமந்தூரார், குமாரசாமி ராஜா ஆகிய முதல்வர்களை கொடுத்தது இந்த விருதுநகர். ஒன்றியமல்ல இந்தியா, திராவிடமல்ல தேசியம் என்ற குறிக்கோளுடன் "இல்லம்தோறும் தேசியக்கொடி, உள்ளம் தோறும் தேசபக்தி" என்ற அடிப்படையில் இந்த யாத்திரை நடக்கிறது... ஈ.வே.ராமசாமி திராவிட இயக்கத்தினால் தான் காமராஜர் முதல்வர் ஆனார் என்று அவரின் வரலாற்றை திரித்து சொல்வதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.

     தலையில் தட்டுவது ஏன்?

    தலையில் தட்டுவது ஏன்?

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியை மையமாக வைத்து பட்டாசு தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. சமீபத்தில் பட்டாசு தொழிலில் ஏற்பட்டு வரும் விபத்துக்கள், புதியதாக கொண்டு வரப்பட்ட சட்டங்களால் பட்டாசு தொழில் நலிந்து விட்டது. இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்... வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் தட்டுவது, அவரது வேற்றுமை மனப்பான்மையை காட்டுகிறது.

     கிறிஸ்தவர்கள்

    கிறிஸ்தவர்கள்

    சதுரகிரி மகாலிங்கசுவாமி கோயிலில் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை திரும்ப பெற வேண்டும்.. சபாநாயகர் அப்பாவு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் தமிழர்களின் வளர்ச்சிக்கு காரணம் என்று சொல்வது கண்டனத்திற்குரியது.. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்று ஏகப்பட்ட பிரச்னைகள் இங்கே இருக்கும்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சமாதி அருகே பேனா நினைவு சின்னம் அமைப்பது தேவையற்றது... அப்படி மட்டும் திமுக அமைக்க முயன்றால், இந்து மக்கள் கட்சி சும்மா இருக்காது.. நிச்சயம் போராட்டத்தில் ஈடுபடும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் அர்ஜூன் சம்பத்...

     எரிச்சலில் திமுக

    எரிச்சலில் திமுக

    தற்சமயம் திமுக ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும்போது, விரைவில் காமராஜரின் தேசிய ஆட்சியை பாஜக அமைக்கும் என்பதுடன், பேனா நினைவு சின்னத்தை அமைத்தால் வெகுண்டெழுந்து போராடுவோம் என்றும் அர்ஜுன் சம்பத் சொல்லி உள்ளது திமுகவை எரிச்சலாக்கி வருகிறது. ஆனால், இந்த பேனா சிலை விவகாரத்தில், சுற்றுச்சூழல் அமைப்பினர், இயற்கை ஆர்வலர்களை தவிர, தமிழக கட்சிகளும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து இதை அரசியலாக்கி வருகின்றனர்.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    இந்த பேனா சிலை வைப்பதால் யாருக்கு லாபம்? கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற நினைவுச்சின்னங்கள் இருக்கும் நிலையில் மெரினாவில் மீண்டும் நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமற்றது... அப்படியே, நினைவுச்சின்னம் அவசியம் என்றால் திமுகவின் அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து அமைக்க வேண்டியதுதானே? மக்கள் வரிப்பணத்தை எடுத்து எதற்காக வீணடிக்க வேண்டும்?" என்று தேமுதிக காட்டமாக கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.

     பென்சில் - சேட்டை தானே?

    பென்சில் - சேட்டை தானே?

    ஆனால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானோ, வெளிப்படையாகவே திமுகவை கிண்டல் செய்து பேட்டி தந்திருந்தார்.. "இப்போ பேனாவை வைப்பீங்க. அப்பறம் கண்ணாடி வெப்பீங்க.. ஒருவேளை உதயநிதி முதலமைச்சராகி விட்டால், எங்க அப்பா விக் வைத்திருந்தார் என்று கடலுக்குள் விக் வைப்பீங்களா? ரூ. 39 கோடிக்கு சமாதி அமைக்கிறார்கள்... அந்த ரூ.39 கோடியில் மட்டும் இவங்க கட்டி முடிச்சிடுவாங்களா? அதுக்கு முறையாக கணக்கு காட்டுவாங்களா? ரூ.39 கோடியில் கட்டிமுடித்துவிட்டேன் என்று அறிக்கை விடுவாங்களா? யார் காசு இது? அரசு காசில் பேனா வைக்கிறேன்.. அவர் பென்சில் வைச்சிருந்தார் பென்சில் வைக்கிறேன்... என்பதெல்லாம் சேட்டை தானே" என்று கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+