எனக்குத்தான் சிக்கல்.. எடப்பாடிக்கு போன போன்கால்.. பாஜக யோசனையை ஏற்க மறுத்தாரா? என்ன நடந்தது?
இப்போது இடத்தை பாஜகவிற்கு கொடுத்தால் தங்களுக்குத்தான் சிக்கல் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக கொடுத்த முக்கியமான யோசனை ஒன்றை எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் எதிர்க்கட்சிகள் தரப்பில் பெரிய பிளவை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் சார்பாகவும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது. பாஜக இதனால் என்ன செய்யும், வேட்பாளரை களமிறக்குமா, இறக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக கோரிக்கை
இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பாஜக சார்பாக எடப்பாடியிடம் பேசப்பட்டு இருக்கிறதாம். அதாவது பாஜக சார்பாக ஒரு வேட்பாளரை இறக்குகிறோம். நீங்கள் அவருக்கு ஆதரவு கொடுங்கள். அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார். அவருக்கு எடப்பாடி தரப்பு அதிமுக ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறதாம். இதற்காக வேறு மாநிலத்தில் இருக்கும் பாஜக தலைவர் ஒருவர் எடப்பாடிக்கு போன் செய்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இரண்டு வேட்பாளர்கள் பெயரையும் அதில் எடப்பாடியிடம் அந்த தலைவர் கூறி இருக்கிறாராம்.

சின்னம் முடங்கும்
ஆனால் இது அதிமுக வலுவாக இருக்கும் தொகுதி. இதை விட்டுக்கொடுக்க முடியாது. கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை இருக்கிறது. என் கட்சிக்காக நான்தான் நிற்க வேண்டும். இப்போது இடத்தை பாஜகவிற்கு கொடுத்தால் எனக்குத்தான் சிக்கல் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து.. நீங்கள் போட்டியிட்டால் ஓ பன்னீர்செல்வமும் வேட்பாளரை களமிறக்குவார். அப்படி நடந்தால் சின்னம் முடங்கும். சின்னம் முடங்கினால் அது திமுகவிற்குத்தான் சிக்கல். திமுக கூட்டணியின் வெற்றியை இது பெரிதாக்கும் என்று பாஜக தலைவர் அந்த போன் காலில் சொல்லி இருக்கிறாராம்.

எடப்பாடி உறுதி
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு கண்டிப்பாக வேட்பளாரை களமிறக்குவோம் என்றும் அவர் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஈரோடு கிழக்கில் சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவோம் என்ற எடப்பாடி இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

சின்னம் - வழக்கு - வேட்பாளர்
இந்த மோதலில்தான் நேற்று புதிய கூட்டணியை உருவாக்குவதாக எடப்பாடி தரப்பு போஸ்டர் ஒட்டி பாஜகவை சீண்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக வேட்பாளரை களமிறக்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இங்கே எடப்பாடி ஏற்றுக்கொண்டால் பாஜக வேட்பாளரை பொதுவாக களமிறக்கி திமுகவிற்கு கடும் எதிர்ப்பு கொடுத்து இருக்கலாம் என்று பாஜக கணக்கு போட்டு இருக்கிறது. ஆனால் பாஜக இங்கே போட்டியிட்டால் அந்த கட்சிதான் எதிர்க்கட்சி என்ற பிம்பம் ஏற்பட்டுவிடும் என்பதால் எடப்பாடி அதற்கு அனுமதிக்கவில்லை. தற்போது எடப்பாடி தரப்பு இங்கே போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதனால் பாஜக தரப்பிற்கு பிரஷர் எகிறி உள்ளது. இதையடுத்தே என்ன செய்யலாம்.. என்ன முடிவு எடுக்கலாம் என்று ஆலோசனை செய்ய அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளார். இன்று அவர் பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.












Click it and Unblock the Notifications