கறுப்பு ஆடு சிக்குது? அண்ணாமலை வரகூடாது.. தீயாய் களமிறங்கியும் சென்னை சொதப்புதா? டோஸ் விட்ட எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டியதாகவும், பணத்தை சுருட்டியதாகவும் எழுந்த புகாரை தொடர்ந்து சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 15 மாவட்ட நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி கடுமையாக திட்டி அனுப்பியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுக்காக தமிழகம் காத்து கொண்டிருக்கிறது.. இதில், தேமுதிகவுக்கு 5, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, மிச்சமுள்ள 32 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டுள்ளது..

Did Edappadi Palanisamy scold AIADMK Chennai Executives and What are the Major Instructions to the District Secretaries

கவனம்: விட்டதை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தமிழகமெங்கும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.. மற்றொருபக்கம் தேர்தல் வேலைகளிலும் பிரத்யேகமாக கவனம் செலுத்தியிருந்தார்.

ஆனால், தேர்தலின்போது நிர்வாகிகள் பலரும் சரியாக வேலை செய்யவில்லையாம்.. கடமைக்கு சிலபேர் தொகுதியில் வந்துசென்றாலும். கட்சி செலவுக்காக தலைமை கொடுத்த நிதியை, யாருக்கும் பகிர்ந்தளிக்கவில்லையாம்.. மொத்த பணத்தையும், மேல்மட்ட நிர்வாகிகளே பகிர்ந்து கொண்டதாகவும், பூத் செலவுக்கே கஷ்டப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் புகார்கள் எடப்பாடிக்கு சென்றதாக தெரிகிறது.

மாவட்ட செயலாளர்கள்: இதையடுத்து, சென்னையில் 15 மாவட்ட செயலாளர்கள், தென் சென்னை, வடசென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் என அனைவருடனும் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி..

பிறகு அங்கிருந்த நிர்வாகிகளிடம் செம டோஸ் விட்டிருக்கிறார்.. அதிமுக மீது ஏன் பற்று குறைந்துவிட்டது? அம்மா காலத்தில் காட்டப்பட்ட வேகம் இப்போது ஏன் குறைந்துவிட்டது? தலைமை மீது விசுவாசம் இல்லாமல் போக என்ன காரணம்? மாற்று கட்சி வேட்பாளர்களிடம் விலைபோனீர்களா? திமுக தொண்டர்களை போல உங்களால் ஏன் இரவு, பகல் என அர்ப்பணிக்க முடியவில்லை? கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என்றெல்லாம் சத்தம் போட்டாராம் எடப்பாடி.

சீனியர்கள்: இதற்கு சில சீனியர்கள் மட்டும் பதிலளித்தார்களாம்.. "கட்சியில் சேர்ந்ததுமே, புதியவர்களுக்கு பதவி தர்றீங்க, ஆனால் அவர்கள் எங்களை மதிப்பதேயில்லை" என்று புகார் சொன்னார்களாம்.

அதற்கு எடப்பாடி, "புதியவர்களுக்கும் வாய்ப்பு தரணும்தானே? அப்பதானே கட்சி உயிரோட்டமாக இருக்கும்? இன்னும் பழைய காலத்து ஆட்களையே பதவியில் வைத்திருந்தால் கட்சிக்கு சரியாக இருக்காது.. கட்சி வளரணும் என்றால், புதுரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்... என் கையில் முழுமையான ரிப்போர்ட் வந்ததும், தேர்தலில் சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள்" என்று எச்சரித்துவிட்டு போனாராம் எடப்பாடி.

லிஸ்ட் ரெடி: இதையடுத்து, யாரெல்லாம் தேர்தல் பணியில் ஈடுபடவில்லையோ அந்த லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளதாம்.. மற்றொருபுறம், மாவட்ட செயலாளர் மீதும் புகார் கிளம்பியிருக்கிறதாம். எப்படி பார்த்தாலும், அதிமுகவில் விரைவில் களப்பணி இருக்கும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்..!!

எனினும், இந்த முறை ரிசல்ட் எப்படி வரப்போகிறது என்று தெரியவில்லை.. இத்தனைக்கும் கோவையில் அண்ணாமலை, தேனியில் டிடிவி தினகரன், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் 2வது இடத்துக்கு வரவே கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், அதிமுக நிச்சயமாக 3வது இடத்தையே பிடிக்கும், பல இடங்களில் டெபாசிட் பறிபோகவும் வாய்ப்புள்ளதாகவும் பாஜக கூட்டணிகள் கூறிவருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+