அந்த 1 சொல்.. சீமான் பற்றி கேட்டதுமே டக்குனு சொன்ன ஈவிகேஎஸ் இளங்கோவன்.. கடுப்பான எடப்பாடி டீம்.. ஏன்
சீமான் கருத்துக்கெல்லாம் நான் முக்கியத்துவம் தருவதில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்
சென்னை: சீமான் கருத்துக்கெல்லாம் நான் முக்கியத்துவம் தருவதில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.. அத்துடன், இரட்டை இலையுடன் களத்தில் குதித்துள்ள அதிமுக குறித்தும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 தேர்தலில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றன
இதுவரை தனித்து தேர்தல்களை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளதை மறுக்க முடியாது,.

ஆக்ஷன்
கடந்த முறை, இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடித்திருந்தது நாம் தமிழர் கட்சி.. பாஜகவை போலவே, காங்கிரஸையும் பொதுவான அரசியல் எதிரியாக கருதி வருகிறது நாம் தமிழர் கட்சி.. "பாஜக - காங்கிரஸ் இவங்க 2 பேரும் ஒன்றுதான்" என்று அடிக்கடி சொல்லி வருபவர் சீமான்.. "இரண்டு கட்சிகள் இடையே கொள்கை ஒன்றுதான்.. ஆனால் கட்சிகள் மட்டுமே வேறு.. பணமதிப்பிழப்பீடு தவிர்த்து சிஏஏ, என்ஆர்சி, என்ஐஏ, ஜிஎஸ்டி, நீட் தேர்வு இவைகளை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அவற்றை செயல்படுத்தியது பாஜக. 2 பேருமே பேராபத்தை நோக்கி நாட்டை நடத்துபவர்கள்" என்று மேடைக்கு மேடை சீமான் முழங்கி வருகிறார்.

அதிரடி சீமான்
அதனால்தான், மற்ற தொகுதிகளைவிட, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும், எப்போதுமே கூடுதலாக கவனம் செலுத்தி, பிரச்சாரங்களிலும் ஈடுபடும் நாம் தமிழர் கட்சி. அந்தவகையில், ஒவ்வொரு தேர்தலிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வாக்குகளையும் பிரிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது நாம் தமிழர் கட்சி.. அதுவும், இந்த முறை இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாத சூழலில், நாம் தமிழர் கட்சி 2வது அல்லது 3வது இடத்தை கூட தக்கவைக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. அதுவும் இல்லாமல், காங்கிரஸுடன் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது, நாம் தமிழர் கட்சிக்கான களத்தை எளிதாக்கி உள்ளது.

சரிப்பா அங்கேயே இரு
அதனால்தானோ என்னவோ, முதல்நாளே இந்த தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நேரடியாகவே ஈவிகேஎஸ் மீதான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். "தம்பி திருமகனை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன். தம்பி திருமகன் ஈவெரா முதலில் நம் கட்சியில் இணைவதற்காக என்னை வந்து பார்த்தார். பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ன சொன்னாரோ அவர் வரவில்லை. நானும் சரிப்பா நீ அங்கேயே இருந்து விடு என்றேன். அவர் இறந்ததில் எனக்கு மிகவும் துயரம். ஒன்றரை வருடங்களாக மக்கள் பிரதிநிதியாக இருந்த தம்பி திருமகன் இதுவரை மக்கள் பிரச்சினையை தீர்த்துள்ளாரா? அவரே தீர்க்க முடியாதபோது அவரது அப்பா ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் வந்து என்ன செய்துவிட முடியும்? என்று கேட்டிருந்தார் சீமான்.

அபாண்டம்
திருமகன் ஈவேரா பற்றி சீமான் சொன்னது, இணையத்தில் பேசுபொருளானது.. ஆனால், மூத்த தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக வந்து இதற்கு மறுப்பு தந்திருந்தார்.. "சீமான் கட்சியில் இணைவது பற்றி திருமகன் கண்டிப்பாக ஒருபோதும் பேசியிருக்கமாட்டார். அவருடைய தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் எதுவும் செய்யவில்லை என்று போகிற போக்கில் அபாண்டமாக பழி சுமத்தியிருக்கிறார் சீமான்.. எப்போதும் சீமான் இறந்து போனவர்கள் பற்றியும், அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதனால் இதுபோன்ற கருத்துக்களை சொல்லிவருவதே இவரது வாடிக்கையாகிவிட்டது.. இதுதான் இவரின் லட்சணம்" என்று கண்டனம் தெரிவித்திருந்தார்..

பாசத்துக்குரியவர்
ஆனால், ஈவிகேஎஸ் அப்போதும் சீமானை பெரிதாக விமர்சிக்கவில்லை.. செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோதும், சீமான் உணர்ச்சிவசப்படக் கூடிய மனிதர். என்னை பொறுத்தவரை அவர் மீது எனக்கு பாசம் உண்டு. ஆனால் அவர் அடிக்கடி சொன்னதையே மாற்றி மாற்றி சொல்லக்கூடியவர். ஆங்கிலத்தில் கன்சிஸ்டென்சி இல்லாதவர் என்று சொன்னால் அது சீமான் தான்... இருந்தாலும் தன்னுடைய பாசத்துக்குரியவர். அவர் என்னதான் என்னை இகழ்ந்தாலும், என்னுடைய மகனை பற்றி சொன்னாலும் நான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அன்பின் மிகுதியால் சொல்லுகின்றார் என்று நினைத்துக் கொள்வேன், வேறு ஒன்றும் சீமானை பற்றி சொல்வதற்கு இல்லை என்று கூறியிருந்தார்.

கன்சிஸ்டென்சி
இந்நிலையில், மீண்டும் சீமான் குறித்து ஈவிகேஎஸ் கருத்து கூறியுள்ளார்.. ஒரு பிரபல சேனலுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் சிறப்பு பேட்டி தந்துள்ளார்.. அதில், "என் மகன் திருமகன் ஈவெரா, சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொகுதி மக்களுக்கு நல்ல காரியங்களை செய்துள்ளார். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த பணிகளை நான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற முனைப்பில் போட்டியிடுகிறேன். என்னுடைய பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

சான்ஸஸ்
இங்கே மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் இங்கே இருக்கின்றன. அந்த பணிகளை செய்வதற்கு வாய்ப்பை தாருங்கள் என்று மக்களோடுதான் பேசிக்கொண்டிருக்கிறேனே தவிர, சீமான் போன்றவர்கள் சொல்லும் கருத்துக்கெல்லாம் நான் முக்கியத்துவம் தருவதில்லை... என்னைப் பொறுத்தவரை அதிமுவில் அவர்கள் பிரிந்து இருந்தாலும் சரி, இணைந்து இருந்தாலும் சரி ஒன்றுதான். ஈரோடு மக்களின் தேவைகளை நான் பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது. அதனால், எதிரணியில் எப்படி போட்டியிட்டாலும் எனக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications