“எனக்கு எதுவும் தெரியாது”.. ஆன்லைன் ரம்மி சிஓக்களை ஆர். என் ரவி பார்த்தாரா? அண்ணாமலை சொன்ன பதில்
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்ததாக கூறப்படும் செய்திகள் பற்றிய கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பதில் அளித்தார்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டம் தமிழ்நாட்டில் காலாவதியாகி உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு மூலம், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம்களை தடை செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

காலாவதியான சட்டம்
இந்த அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அவர் இன்னும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன்லைன் தடை சட்டத்தை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாத நிலையில் அந்த அவசர சட்டம் காலாவதி ஆகி உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவி இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை. ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும் அதன்பின்பும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இந்த சட்டம் காலாவதி ஆகி உள்ளது.

மீட்டிங்
இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு உண்மையில் நடைபெற்றதா என்று தெரியவில்லை. சந்திப்பில் என்ன பேசப்பட்டு என்பது தொடர்பான விவரங்களும் வெளியாகவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிலுவையில் இருக்கும் நிலையில் ஆளுநரின் சந்திப்பு தொடர்பாக வெளியான இந்த உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கடும் விமர்சனங்களை சந்தித்தன. முக்கியமாக திமுக நிர்வாகிகள் பலர் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தனர்.

அண்ணாமலை விளக்கம்
இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். அதில், ரம்மி நிறுவன சிஇஓக்களை ஆளுநர் ரவி சந்தித்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது பற்றி பேச முடியாது. ஆன்லைன் சூதாட்டம் கொடுமையானது. அதை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை. அதில் பாஜக உறுதியாக உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டார். முன்னதாக இந்த அவசர சட்டம் காலதாமதம் ஆன போது பேட்டி அளித்த அண்ணாமலை, ஆளுநரிடம் ரம்மி ஆன்லைன் தடை சட்டம் பற்றி பேசினோம். எங்கள் கருத்தை தெரிவித்தோம். ஆன்லைன் ரம்மி என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

என்ன நடந்தது?
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை இதுவரை நடைமுறைபடுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஆளுநர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. சட்டம் காலாவதியாகிவிட்டது என்று திமுக கூறுகிறது. ஆனால் ஆளுனர் ஏற்கனவே ordinanceக்கு அனுமதி கொடுத்து இருந்தார். அப்படி இருக்கும் போது ordinanceயை தமிழ்நாடு நடைமுறைப்படுத்தவில்லை. அரசு உத்தரவிற்கு ஆளுநர் அனுமதி அளித்த பின் திமுக அரசு அரசாணையை வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதை திமுக செய்யவில்லை. தமிழ்நாடு அரசை பொறுத்தவரை அவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் ஆன்லைன் ரம்மி வழக்கில்தான் இருந்தது.

கேள்வி
இரண்டாவதாக அவசர சட்டம் வரும் போது ஆளுநர் அதில் சில கேள்விகளை கேட்கிறார். மாநில அரசு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளது. இதில் மிக முக்கியமாக இருப்பது கோர்ட் ஆர்டர். சைபர் பிரிவு என்பது மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. ஆனால் மாநில அரசு அதில் சட்டம் இயற்றி உள்ளது. இதற்கு எல்லாம் கவர்னர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் கேட்டுள்ளனர். மாநில அரசு இதற்கு விளக்கம் கொடுத்து உள்ளது. சட்டம் என்பது சரியாக இருக்கிறதா? அரசு சரியாக சட்டத்தை நிறைவேற்றி உள்ளதா என்று பார்க்க வேண்டும். தப்பாக இயற்றப்பட்ட சட்டம் இயற்றப்படாத சட்டத்திற்கு சமம். அப்படி இருக்கும் போது மாநில அரசு மத்திய அரசின் அதிகாரத்தில் தலையிட்டதாக ஆளுநர் கேள்வி கேட்டு இருக்கலாம். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். அதை விடுத்துவிட்டு ஆளுநர் மீது பழி போட பார்க்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஆளுநர் மீது குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
-
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்!












Click it and Unblock the Notifications