ச்சீ.. என் மூஞ்சிலேயே முழிக்காதே.. ஓபிஎஸ்ஸிடம் சொன்ன ஜெ? மேடையில் புட்டு புட்டு வைத்த நத்தம்!
சென்னை: ஓ பன்னீர்செல்வம் ஒரு துரோகி, அவரை ஜெயலலிதாவே விரும்ப மாட்டார், பல முறை ஜெயலலிதாவே ஓ பன்னீர்செல்வத்தை கடுமையாக திட்டி இருக்கிறார் என்று நத்தம் விசுவநாதன் இன்று அதிமுக பொதுக்குழுவில் பேசினார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு, செயற்குழு தற்போது சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவருவாக பேசி வருகிறார்கள்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில், தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதில் பேசிய மூத்த உறுப்பினர் நத்தம் விசுவநாதன் ஓ பன்னீர்செல்வம் மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.

எடப்பாடி
நத்தம் விசுவநாதன் தனது பேச்சில், எடப்பாடி பழனிசாமி இப்போது இடைக்கால பொதுச்செயலாளர். விரைவில் அவர் முழு நேர பொதுச்செயலாளர் ஆகிவிடுவார். ஒருவர் இரட்டை தலைமையில் இருந்தார். ஓ பன்னீர்செல்வம் பற்றி எனக்கு கூடுதலாக தெரியும். உங்களை விட எனக்கு அவரை பற்றி அதிகம் தெரியும். எனக்கு அருகில்தான் அமர்ந்து இருப்பார். அவர் எனக்கு பக்கத்து மாவட்டம்தான்.

ஓ பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொடூரமான முகம் உள்ளது. மகா நடிப்புடா சாமி என்று சொல்லும் அளவிற்கு அவர் நடிப்பார். நடிகர் திலகம் என்ற பட்டமே ஓ.பன்னீர் செல்வத்திற்கு தரலாம். அவரின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே கிடையாது. ஓ.பன்னீர் செல்வம் யாரையும் நம்பமாட்டார் தன்னையே நம்பமாட்டார். பொறாமை, சூழ்ச்சி பிடித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.

நத்தம் விசுவநாதன்
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பழக்கம் கொண்டவர் ஓ பன்னீர்செல்வம். பேசுவதும், செய்வதும் வேறு வேறாக இருக்கும். துரோகத்தின் முழு உருவம் .ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவிடம் பலமுறை ஓ.பன்னீர் செல்வமும் திட்டு வாங்கி உள்ளார். என் முகத்திலேயே விழிக்காதே என்று ஓ. பன்னீர் செல்வத்தை திட்டியுள்ளார் ஜெயலலிதா. தேனியில் நாம் தோற்கவே நீதான் காரணம் என்று ஓ பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா திட்டி இருக்கிறார்.

ஜெயலலிதா
ச்சீ என் முகத்திலேயே முழிக்காதே என்று ஓ பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா திட்டி இருக்கிறார். இதனால் 6 மாதம் ஓபிஎஸ் -ஜெயலலிதா பேசவில்லை. துரோகி ஒழியட்டும் என்று ஜெயலலிதாவே ஓ பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்து இருக்கிறார். மக்களை பல காலம் ஏமாற்ற முடியாது. துரைமுருகனை சட்டசபையில் பாராட்டி பேசியவர் ஓ.பன்னீர் செல்வம்.

கருணாநிதி
கருணாநிதியின் பராசக்தி வசனத்தை எல்லாம் மனப்பாடம் செய்துள்ளார் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் ஓ.பன்னீர் செல்வத்தை மன்னிக்காது. கருணாநிதியை தீயசக்தி என்று சொன்னவரை பாராட்டினால் எம்ஜிஆர் ஆன்மா மன்னிக்காது. எதிரியைக் கூட மன்னித்து விடலாம் துரோகியை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. அதிமுக ஆட்சியில் வருவதற்காக இருந்த ஓபிஎஸ் என்ற தடை நீங்கி விட்டது என்று நத்தம் விஸ்வநாதன் மேடையில் பேசினார்.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ்












Click it and Unblock the Notifications