"பூஜை ரூமில்" ராகவன்.. நடிகையின் பர்சனல், கண்ணாடி கதவு, சீனியர்கள் வாய் திறக்கலயே.. ஷர்மிளா நறுக்

கேடி ராகவன் விவகாரம் விசாரிக்க கமிட்டி போட்டது என்னவாயிற்று என்று ஷர்மிளா கேள்வி எழுப்பி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதாரண தொண்டர்கள் பேசியதற்கே இப்படி குஷ்பு கொதிக்கிறார் என்றால், பாஜகவை சேர்ந்த பெரிய பெரிய தலைவர்கள் சோனியா காந்தியை கொச்சையாக பேசலையா? மம்தா பானர்ஜியை பேசவில்லையா? எச்.ராஜா, விபி துரைசாமி போன்ற சீனியர்களை யார் கண்டிப்பது?" என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார் திமுக ஆதரவாளர் டாக்டர் ஷர்மிளா.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஆர்கே நகரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் இருக்கும் நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை சர்ச்சையாகவும், கொச்சையாகவும் பேசியிருந்தார்.

இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியா? என்று குஷ்பு கேள்வி கேட்டு, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியையும் டேக் செய்திருந்தார்.

 நடிகை நமீதா

நடிகை நமீதா

இதையடுத்து, கனிமொழியும், அந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.. அதேபோல சாதிக்கும் மன்னிப்பு கேட்டிருந்தார்.. ஆனால், சாதிக்கின் மன்னிப்பை ஏற்க மறுத்து விட்ட குஷ்பு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.. குஷ்புவின் இந்த நிலைப்பாடு குறித்து, திமுக ஆதரவாளரான டாக்டர் ஷர்மிளா ஒரு தனியார் டிவிக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், அவர் குஷ்புவை சரமாரியாக கேள்வி எழுப்பிஉள்ளார்.. அத்துடன் பாஜக தலைவர்கள் குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதன் சுருக்கம்தான் இவை:

 2 அடி + 4 அடி

2 அடி + 4 அடி

திமுகவில் சாதிக் பேசியது தவறுதான்.. யார் ஆபாசமாக பேசினாலும் தப்பு தப்புதான்.. அவர் மீது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்.. அந்த நடவடிக்கையை கட்சியும் எடுக்கும்.. திமுக இப்படி பொறுப்புணர்வுடன் நடப்பதால்தான் கனிமொழி அவர்களும் மன்னிப்பு கேட்கிறார்.. அதுக்காக அண்ணாமலை எல்லாம் அவருக்கு கிளாஸ் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.. முதல்வர் நடந்து முடிந்த திமுகவின் பொதுக்குழுவில் வெளிப்படையாகவே தன் கட்சிக்காரர்களை கண்டித்தார்.. அறிவுரை சொன்னார். அப்படி இருந்தும் சில தொண்டர்கள் அவர் சொன்னதை உள்வாங்கவில்லை என்றால் அதுக்கு என்ன செய்வது? முதல்வர் 2 அடி எடுத்து வைத்தால், ஒருசிலர் செய்யும் இதுபோன்ற கீழ்த்தரமான காரியத்தினால்தான், 4 அடி அவர் பின்னுக்கு போகும்படி ஆகிவிடுகிறது.

 பூஜை ரூமில்

பூஜை ரூமில்

கேடி ராகவன் விவகாரம் வந்தபோது, அண்ணாமலை என்ன சொன்னார்? "நான் தலைவனான பிறகு கட்சித் தலைவர் அறையின் கதவை கண்ணாடி கதவாக மாற்றிவிட்டேன். இந்த அறைக்குள் என்னென்னவோ நடக்கிறது. இப்போது உள்ளே நுழையும் யாரும் தலைவரைப் பார்க்கலாம். நான் என் அறைக்கு எந்த பெண்ணையும் தனியாக நுழைய அனுமதிப்பதில்லை. குஷ்பு உள்பட யாராக இருந்தாலும் சரி. ஒரு சிறிய புரட்சியை செய்துள்ளேன்" என்றெல்லாம் இதே குஷ்புவின் பெயரை சொல்லியே சொன்னார்.

 கண்ணாடி கிளாஸ்

கண்ணாடி கிளாஸ்

இப்படி அண்ணாமலை சொல்வதில் உள்அர்த்தங்கள் என்ன தெரியுமா? இதுக்கு முன்னாடி இதுபோன்ற தவறுகள் பாஜகவில் நடந்ததை ஒப்புக் கொள்வதாகவே தெரிகிறது.. இரண்டாவதாக, தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக நினைத்து பேசுவதால், அந்த கட்சியில் உள்ள மற்ற பெண்களுக்கு பாதுகாப்பு? மற்றும் அவர்களை எந்த அளவில் அண்ணாமலை மதிப்பீடு செய்திருக்கிறார் என்பதையும் நம்மால் தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது.. இதுக்கெல்லாம் குஷ்பு, காயத்ரி ரகுராம் ஏன் கேள்வி கேட்கவில்லை?

 பூஜையறையில் ராகவன்

பூஜையறையில் ராகவன்

இதே கேடி ராகவன் மீதான புகார், பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.. அந்த சர்ச்சை குறித்து கமிட்டி போட்டு விசாரிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.. அந்த கமிட்டி என்ன ஆனது என்றே தெரியவில்லை.. அதே பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகியின் ஆடியோவெல்லாம் வெளியே வந்ததே, இவங்க என்ன செய்தார்கள்? அவருக்கு எம்எல்ஏ சீட் தந்தது தான் மிச்சம்.. "பாஜகவில் பெண்களை தவறாக பயன்படுத்துகிறார்கள், பாதுகாப்பு இல்லை, இதுகுறித்து விசாகா கமிட்டி போட வேண்டும்" என்று இதே பாஜகவை சேர்ந்த ஒரு தலைவர்தான் சொன்னார். அப்போவெல்லாம் இவங்க என்ன செய்தார்கள்?

"திராவிடன் ஸ்டாக்"

இதே எச்.ராஜா, கனிமொழியை பற்றி எவ்வளவு தரக்குறைவாக பேசினாரே.. கோபாலகிருஷ்ணன் என்ற இதே கட்சி உறுப்பினர், கனிமொழி அவர்களை பற்றி தரக்குறைவாக பேசினாரே.. குஷ்பு அப்போதும் இதை பற்றி கேள்வி கேட்டார் என்பதை மறுக்க முடியாது.. கடந்த வாரம் ஒருத்தர் சோஷியல் மீடியாவில்.. குஷ்பு பற்றி தவறாக கமெண்ட் செய்திருந்தார்.. அவருடைய புரொபைலை பார்த்தால், "திராவிடன் ஸ்டாக்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.. உடனே நான் அவரை அப்போதே கண்டித்தேன்.. நான் கண்டித்தபிறகு, திமுகவினரும் திரண்டு வந்து, இப்படி தரக்குறைவாக பதிவுகளை போடக்கூடாது என்று சொந்தகட்சிக்காரரையே கண்டித்துவிட்டு போனார்கள்..

ஜோதிமணி

ஜோதிமணி

இப்போது குஷ்புவை அவமானப்படுத்திவிட்டார்கள் என்றதுமே தேசிய ஊடகம் வரை பேசப்படுகிறது.. அருணாப் கோசுவாமி, அரைமணி நேரம் மூச்சுபிடிச்சிட்டு பேசுகிறாரே, கனிமொழியை அன்று அவமானப்படுத்தி பேசியபோது மட்டும் இவர்கள் எல்லாம் ஏன் வாய் திறக்கல? ஜோதிமணியை அவமானப்படுத்தினால்கூட ஒருத்தரும் வாய் திறப்பதில்லையே.. குஷ்புவை நான் ஒன்று கேட்கிறேன், இதே பாஜகவை சேர்ந்த சசிகலா புஷ்பாவுக்கு தொல்லை என்றாலும் நீங்க அதை தட்டி கேட்பதில்லை.. உங்க கட்சியை சேர்ந்த மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி, நயன்தாரா பற்றி மேடையில் அசிங்கமாக, கொச்சையாக பேசினாரே? அப்போதும் ஏன் வாய் திறக்கல?

அந்தரங்கம்

அந்தரங்கம்

பத்திரிகையாளர் என்று தன்னை சொல்லிக் கொண்டு, நீங்கள் சார்ந்த சினிமாதுறையின் நடிகைகளின் அந்தரங்கம் பற்றி தினம், தினம் ஒருத்தர் வீடியோ போட்டு கொச்சைப்படுத்துகிறாரே, அப்போவெல்லாம் ஏன் வாய் திறக்கல? குஷ்பு கணவர் சுந்தர் சி, மட்டும் என்ன? பெண்களை அரைகுறை ஆடையுடன் சினிமாவில் சுற்ற விடலயா? அப்போவெல்லாம் மட்டும் அது வியாபாரமா? ஏன் அதை கண்டிக்கணும்னு தோணல? இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதை நீங்களே வெளிப்படுத்துகிறீர்கள்.. இவங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம்.. மத்தவங்களுக்கு தக்காளி சட்னியா?

 கொச்சை கொச்சையாய்..

கொச்சை கொச்சையாய்..

உங்க கட்சியை சேர்ந்தவர்களுக்கும் பேச மாட்டேங்கறீங்க.. உங்கள் திரைத்துறையை சேர்ந்தபெண்களுக்கும் வாய் திறக்க மாட்டேங்கறீங்க.. உங்களுக்கென்றால் மட்டும் எல்லாரும் வந்து மன்னிப்பு கேட்கணும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்? சாதாரண தொண்டர்கள் பேசியதற்கே இப்படி கொதிக்கிறார்கள் என்றால், பாஜகவை சேர்ந்த பெரிய பெரிய தலைவர்கள் சோனியா காந்தியை கொச்சையா பேசலையா? மம்தா பானர்ஜியை பேசவில்லையா? எச்.ராஜா, விபி துரைசாமி போன்ற சீனியர்களை யார் கண்டிப்பது?" என்று காட்டமாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+