"கூட்டாளி" ராம்குமார்.. லைம்லைட்டில் பாஜக "புள்ளி".. வளைந்து நெளியும் "பேரறிஞர்".. முத்தரசன் பொளேர்
ராம்குமாருக்கு கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் அறிக்கை விட்டு பதிலடி தந்துள்ளார்
சென்னை: ஒன்றிய அரசின் அரசியல் செல்வாக்கின் அழுத்தங்களுக்கு ராம்குமார் வளைந்து, நெளியலாம். வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று மூத்த தலைவர் முத்தரசன் பதிலடி தந்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "நடிகர் திலகம் உயிருடன் இருந்திருந்தால், அவர் தான் வாங்கிய செவாலியர் விருதை மோடிக்கு வழங்கி இருப்பார்.. அந்த அளவுக்கு மோடி நடித்து வருகிறார்" என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பாஜகவின் ராம்குமார் கொந்தளித்து அறிக்கை விட்டிருந்தார்.. அதில், முத்தரசனை சரமாரியாக விமர்சித்திருந்தார்.

ராம்குமார் காட்டம்
மேலும், தனிப்பட்ட நபர்களை விமர்சனம் செய்வதற்காக என்னுடைய தந்தை சிவாஜி பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுடன், சிவாஜி இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடியையும், பாஜகவையும் ஆதரித்திருப்பார். உலக அரங்கில் மோடியால் பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்திருப்பார். பாரத நாட்டின் மண் சார்ந்த கொள்கைகளை பிரதமர் கடைப்பிடித்து வருகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இதே பாணியைப் பின்பற்றி வெற்றி நடைபோடுகிறார்" என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

முத்தரசன் பதிலடி
இந்நிலையில், ராம்குமாரின் அறிக்கைக்கு, முத்தரசன் பதிலடி தந்துள்ளார்.. அது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அதில், "நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் "பிரதமர் நரேந்திர மோடி" குறித்து எமது விமர்சனத்தை தரம் குறைந்ததாக மதிப்பிட்டு, இனிமேல் எமது "தந்தையின் பெயரை பயன்படுத்த வேண்டாம்" என்று ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக ராம்குமார்
ராம்குமார் சிவாஜி கணேசன் உயிரியல் வழி தந்தையாவார். ஆனால், என் போன்ற கோடிக்கணக்கானவர்கள் உள்ளத்தில் இன்றும் வாழ்ந்து வரும் "நடிப்புலகின் மேதையாவார்". எண்ணிலடங்கா பாத்திரங்களில் வாழ்ந்து வரும் அவரது நடிப்புத்திறன் எதிர்வரும் தலைமுறையும் கற்றறிய வேண்டிய கலைத்துறையின் இலக்கணமாகும் என்பதை எவரும் மறுக்க முடியாது. எட்டாண்டு கால ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வரும் பிரதமர் மோடியின் "உண்மை கலவாத சுத்தமான பொய் மூட்டை" வியாபாரத்துக்கு ராம்குமார் கூட்டாளியாகி இருப்பதை அவரது அறிக்கை வெளிப்படுத்துகிறது.

பிரதமர் மோடி
நடிகர் திலகத்தின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்ந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு வகுப்புவாத சக்திகள் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட நிலையில் "கருப்புப்பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.15 லட்சம் வைப்பு நிதியாக செலுத்துவோம்" என்று உணர்ச்சி பொங்க உறுதியளித்தார்களா? இல்லையா? விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாகவும், ஆண்டுக்கு 2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதாகவும் மேடைக்கு, மேடை முழங்கினார்களா? இல்லையா? கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்த்து, மாநில உரிமைகளைப் பறித்து, தனிநபரை மையப்படுத்திய, சர்வாதிகார வழியில், பாசிச ஆட்சிமுறைக்கு நாட்டை நகர்த்தி செல்வதை மறுக்க முடியுமா?

பேரறிஞர் ராம்குமார்
இவைகள் குறித்து சிந்தனை தெளிவு ஏற்படாமல் தடுக்க ராம்குமார் போன்றவர்களை பாஜக களம் இறக்கி வருகிறது. மாநில உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் சாரதியாக முன்னின்று செயல்படும், திமுகழகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது என்பதை 'அரைகுறை ஞானம்' கொண்டவர்களும் உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிந்து கொள்ளும்போது 'பேரறிஞர்' ராம்குமார் அறியாமையில் இருப்பது வரலாற்று துயரம்தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ராம்குமாருக்கு உயிரியல் தந்தையாவார் மறுக்கவில்லை. ஆனால், அந்த மாமனிதன் வாழ்ந்த வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு உணர்வில் கலந்து உறவில் இருந்து வந்தார்.

வளைந்து நெளியும் ராம்குமார்
மயிலாடுதுறையில் நாடகம் நடத்தி நிதி திரட்டி கொடுத்ததையும், காவிரி நதிநீர் பிரச்சனைக்காக மனித சங்கிலி போராட்டத்தை கட்சி முன்னெடுத்த போது ஆக்கம் கொடுத்து ஊக்கப்படுத்தியதையும் என்றென்றும் நினைவு கூர்ந்து வருகிறது. ஒன்றிய அரசின் அரசியல் செல்வாக்கின் அழுத்தங்களுக்கு ராம்குமார் வளைந்து, நெளியலாம். வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை ராம்குமாருக்கும் அவர் மூலம் அறிக்கை வெளியிட்ட சக்திகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
-
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications