இல்லாத கவுன்சிலில் முக்கிய பதவி.. நமீதா கணவருக்கு விபூதி அடித்த புள்ளி.. கோடிக்கணக்கில் ஏமாந்தாரா?
சென்னை: எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பு, மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டது போல மோசடியில் ஈடுபட்டு அதில் பதவி தர கோடிக்கணக்கில் பணம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதில் மாநில தலைவர் ஆவதற்கு நமீதாவின் கணவர் சௌத்ரி கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சேலத்தில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் சிறு தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி அண்மையில் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமனும், தேசிய செயலாளரான பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ், தமிழ்நாடு தலைவரான பாஜகவை சேர்ந்த நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில், எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் தேசிய தலைவராக உள்ள முத்துராமன் என்பவர் இந்திய அரசின் சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், இவர் மோசடி வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், பதவி தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்து வருவதாகவும் புகார் வந்ததையடுத்து சூரமங்கலம் போலீசார் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் கோபால்சாமி என்பவர், எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சிலில் தமிழ்நாடு சேர்மன் பதவி பெறுவதற்காக தான் 50 லட்சம் கொடுத்ததாகவும், பின்னர் அந்தப் பதவியை நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பெற்றுக் கொண்டதாகவும், இதனால் தான் கொடுத்த ரூபாய் 50 லட்சத்தை திரும்ப தருமாறு கேட்டபோது ரூபாய் 9 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூபாய் 41 லட்சத்தை தராமல் ஏமாற்றி வருகின்றனர் என்றும், முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்றும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சூரமங்கலம் காவல்துறையினர் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன், பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் இருவரும் சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அவர்களைக் கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கோபால்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான நமீதாவின் கணவரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் சிறு, குறு தொழில் அமைப்பின் தமிழ்நாடு சேர்மன் பதவியை பெற நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்து போனது உண்மை தானா என காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் கவுன்சில் எனக் கூறி, பாஜகவின் முக்கிய புள்ளிகளை குறி வைத்தே, முத்துராமன் என்பவர் செயல்பட்டு, பதவி பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வாங்கி, மத்திய அரசால் அமைக்கப்படாத கவுன்சிலில் பதவியும் கொடுத்து மோசடி செய்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications