நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. கமல் கிட்ட சொன்னாராமே.. மோடி வேற பேசினாராமே.. "பகீரை" கிளப்புதே திமுக
சென்னை: கூட்டணி தொடர்பாக, கமல்ஹாசன் எடுத்த முடிவில் அதிர்ந்து போயிருக்கிறது மக்கள் நீதி மய்யம்.. கமலின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்.. இதற்கு நடுவில் திடுதிப்பென்று என்ட்ரி தந்து, பகீரை கிளப்பிவிட்டுள்ளார் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. என்னவாம்?
- நேரடியாக திமுக கூட்டணி என்றில்லாமல், காங்கிரஸின் மூலம் சீட்டை பெறுவோம் என்று நினைத்து கணக்கு போட்டார் கமல். இதனாலேயே ராகுலின் நடைபயணத்துக்குகூட நேரடியாகவே டெல்லி சென்று வாழ்த்து சொன்னார். ஆனால், 10 சீட்டையும் பெற்றுக் கொண்ட காங்கிரஸ், கமலுக்கு ஒரு சீட் கூட ஒதுக்கவில்லை.

- முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைப்பதால் தனக்குரிய கவுரவம் தருவார்கள் என்று கமல்ஹாசன் எதிர்பார்த்தார்.. ஆனால், அது நடக்கவில்லை.
- திமுக கூட்டணியில் இடம் பெற்று நிச்சயம் ஒரு பாராளுமன்ற தொகுதியில் மய்யம் போட்டியிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.. ஆனால் அதுவும் நடக்கவில்லை.
- திமுக தரப்பில் பேசியபோது 1 சீட்தான் தருவோம், அதுவும் திமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையையும் கமலால் ஏற்க முடியவில்லை.
மக்கள் நீதி மய்யம்: இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, மேல்-சபை எம்.பி. பதவி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.. வேறுவழியின்றி கமல்ஹாசன் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
தேசத்திற்காக நாமெல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். இது அவசர நிலை. தமிழகம் மற்றும் தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு. எதிர்வாத சக்திகளுக்கு தற்போதைய சூழல் கைக்கூடி விடக்கூடாது என்பதற்காகவே திமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாகவும், தேச நலன் என்று வரும் போது சிறு சிறு விஷயங்களை விட்டுக்கொடுக்க தயார் என்றும் கமல் விளக்கம் தந்திருந்தார்.
திமுக கூட்டணி: அதுமட்டுமல்லலாமல், இப்போது திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப் போவதாகவும் அறிவித்து உள்ளார்.அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச போகிறார்.. இந்த பிரச்சாரத்தின்போது, மத்தியில் பாஜக அரசை கண்டித்தும், அதிமுகவை கண்டித்தும் நிறைய விஷயங்களை கமல்ஹாசன் எடுத்து வைத்து ஆதரவு திரட்ட இருப்பதாகவும் தெரிகிறது..

ஆனாலும், திமுக கூட்டணியில் கமல் இணைந்தது தொடர்பாக சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் குவிந்துவருகிறது.. மக்கள் நீதி மய்யம் தரப்பிலேயே சிலரால் இதை ஜீரணிக்க முடியாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகம்: "மோடி தமிழகத்துக்கு வருவதை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது, திமுக கூட்டத்துக்கு கமல் தேவை என்பதால் அவரை கூட்டணியில் சேர்த்துள்ளனர்" என்று பாஜகவின் குஷ்பு உட்பட பலரும் எதிர்வினையாற்றவும் துவங்கியிருக்கிறார்கள்.
இப்படி நாலாபுறமும் கமல் எடுத்துள்ள முடிவு, மிகப்பெரிய விவாதத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இந்த நிலையில் திடீரென என்ட்ரி தந்து, ஒரு பெரிய திரியை கொளுத்தி பாஜக பக்கம் வீசிவிட்டு போயுள்ளார் திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி.

கமல்ஹாசன்: கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, "கமல்ஹாசனே வந்துட்டாரு.. அவர் திமுகவுக்கு வருகிறார் என்று தெரிந்ததுமே, அவர்கிட்ட பிரதமர் மோடியே நேற்று பேசினாராம்.. நான் பேசுவதெல்லாம் இங்கே ரிக்கார்டு ஆகியிட்டுன்னு தெரியும்.. டிவியில போடறாங்கன்னும் தெரியும்.. அதனால நான் பொய் சொல்லல.. நிஜமாகவே பிரதமர் மோடி, கமல்ஹாசன் கிட்ட பேசியிருக்கார். நிர்மலா சீதாராமனும் கமல்கிட்ட பேசியிருக்காங்க.
ஆனால், அதையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு, கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்திருக்கிறார் என்றால், இது மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை உண்டுபண்ணியிருக்கிறதே என்று அர்த்தம்" என்றார் ஆர்.எஸ்.பாரதி.
விளக்கம்: ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுதான், இப்போது சோஷியல் மீடியாவில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. திமுக கூட்டணியில் ஏன் இணைந்தேன் என்பது குறித்து கமல்ஹாசன் விளக்கம் சொன்னாரே தவிர, பிரதமர் மோடியோ, நிர்மலா சீதாராமனோ தன்னிடம் பேசியது குறித்து, இதுவரை எந்த தகவலையும் கமல் வெளியிடவில்லை..
இப்படிப்பட்ட சூழலில், ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சு பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் கிண்டலடித்து பலவாறாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்..
கிண்டல்: "திமுக கூட்டணிக்கு போகாதீங்கன்னு கமல்ஹாசனுடன் நிர்மலா சீதாராமனை விட்டு பேசவச்சிருக்காங்க பாஜககாரர்கள்.. நிம்மி என்ன டோனில் கமலிடம் பேசியிருப்பார்ன்னு யோசிச்சு பார்த்த பிறகுதான் புரியுது, ஆண்டவர் ஒரு சீட்டு மட்டும் கொடுங்க இவனுங்களை ஓச்சுட்டு மறுவேலை பார்க்கிறேன்னு அறிவாலயம் புறப்பட்டு வந்திருப்பார்ன்னு" என்கிறார்.
வரப்போகும் தேர்தலில் பாஜகவை விமர்சித்து, கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகிவரும்நிலையில், பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுவது மிகப்பெரிய குழப்பத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது. இது உண்மையா? பொய்யா? அந்த "ஆண்டவருக்கே" வெளிச்சம்..!!
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications