Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பிச்சிட்டாரு சுப்பிரமணிய சாமி.. ஸ்டிரைட்டா மேட்டருக்கும் வந்துட்டாரு.. கடுப்பில் பாஜக.. போச்சுடா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலில் போட்டியிட பணமில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னதிலிருந்தே, எதிர்க்கட்சிகள் பிஸியாகிவிட்டன.. நிதியமைச்சரின் கருத்துக்கு, தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அல்லது கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்திய தொகுதிகளில் போட்டியிடுவார் என்று கடந்த 6 மாத காலமாகவே, பல்வேறு தகவல்கள் வட்டமடித்து கொண்டேயிருந்தன..

Did Nirmala Sitharaman say about contesting Lok Sabha Election 2024 and BJP subramanian swamy criticized Finance Minister

எதிர்பார்ப்பு: ஒருவேளை தன்னுடைய சொந்த மாநிலம் தமிழ்நாடு அல்லது கணவரின் மாநிலமான ஆந்திராவில் நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் கசிந்தன. ஆனால், இந்த கணிப்புகள் எல்லாமே நொறுங்கிவிட்டன.

2 நாட்களுக்கு முன்பு, ஒரு தனியார் டிவி சேனலுக்கு பேட்டி தந்திருந்த நிர்மலா சீதாராமன், "தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்கிட்ட பணம் இல்லை. அதுவும் இல்லாமல், தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், சாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளில் பிரதானமானதாக பார்க்கப்படும்.. அதனால் நான் போட்டியிடவில்லை" என்றார்..

விளக்கம்: ஒரு நாட்டின் நிதியமைச்சராக இருந்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என்று சொல்கிறீர்களே? என்று கேள்வி எழுப்பப்பட்டது... அதற்கு நிர்மலா சீதாராமன், "நான் கையாளும் நிதி இந்தியாவுக்கானது... அது எனக்கானது இல்லை. என்னுடைய சம்பளம், வருமானம், சேமிப்பு மட்டுமே எனக்கானது. மற்றவை எல்லாம் இந்தியாவுக்கான நிதி'' என்று கூறி விளக்கம் தந்திருக்கிறார்.

நிர்மலா சீதாராமன் இப்படி சொன்னதுமே, தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "அப்படின்னா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விட, தமிழிசை, எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? வெயிலில் சுத்தாமல், எந்தவித சிரமமும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்கு நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இவர்கள் எல்லாம் ஆசைப்படுகிறார்கள்" என்று விமர்சித்திருந்தார்.

பணமில்லையா: நிர்மலா சீதாராமன் தேர்தலில் நிற்க பணமில்லை என்றால் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் நிறைய பணம் இருக்கிறதா? நிர்மலா சீதாராமன் தேர்தலில் நிற்கவும், மக்களை சந்திக்கவும் பயந்துபோய் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி போட்டியிடாமல் தப்பிக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தவாறே உள்ளன.

அந்தவகையில், பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணிய சாமியும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம். 2004-05 மற்றும் 2022-23க்கான வருமான வரி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை நிர்மலா சீதாராமன் கூறியிருக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

என்ன காரணம்: சுப்பிரமணிய சாமியை பொறுத்தவரை, பாஜகவில் ஏதாவது பெரிய பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று நீண்ட காலமாகவே எதிர்பார்த்து காத்திருந்தார். அதிலும் நிதியமைச்சர் பதவி மீது சாமிக்கு ஒரு கண் இருக்கத்தான் செய்தது. ஆனாலும், பெரிய பதவிகள் எதுவுமே ஒதுக்கப்படவே இல்லை.. இதற்கு பிறகுதான் பாஜகவை அதிகமாக அட்டாக் செய்ய துவங்கினார்.

அதிலும், நிதியமைச்சர் பதவியில் நிர்மலா சீதாராமனை அன்று நியமித்ததாலோ என்னவோ, அவர் வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளையும், பட்ஜெட் தாக்கல்களையும் விமர்சித்தபடியே இருக்கிறார்.. இப்படித்தான் ஒருமுறை, நாட்டின் பொருளாதாரத்தை சமாளிக்க 10 வங்கிகளை இணைப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தார் நிதியமைச்சர்.

விமர்சனம்: உடனே சு.சாமி, "புதிய பொருளாதார கொள்கை எதுவுமே வராத நிலையில், 5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு விடை கொடுக்க தயாராக இருங்கள். ஒன்று துணிவு இருக்க வேண்டும், அல்லது புத்திசாலித்தனம் இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க முடியும். ஆனால் நம்மிடம்தான் இந்த இரண்டுமே இல்லையே" என்று தாக்கி பதிவிட்டிருந்தது பெரும் பரபரப்பை அப்போது உண்டுபண்ணியிருந்தது.

அந்தவரிசையில், இப்போது மீண்டும், நிதியமைச்சரின் கருத்தை விமர்சித்தும், கிண்டலடித்தும் சுப்பிரமணிய சாமி ட்வீட் பதிவிட்டுள்ளது, பாஜகவுக்கு மறுபடியும் எரிச்சலை கூட்டி வருகிறதாம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+