ஈரோடு கிழக்கு: திமுகவுக்கு ஃபர்ஸ்ட் பிளேஸ்! ஆனால் நாதகவுக்கு 2வது இடம்னு சொல்ல முடியாதே! ஏன்?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் உயர்ந்துள்ள போதிலும் அக்கட்சி இரண்டாவது இடம் பிடித்துவிட்டது என சொல்ல முடியாது. ஏன் தெரியுமா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் வி.சி.சந்திரகுமார், நாதக சார்பில் எம்.கே.சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

இதில் பெரும்பாலானோர் எதிர்பார்த்தது போல் திமுகவே வெற்றி பெற்றது. அதிலும் சாதாரண வெற்றி இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற கட்சி திமுக என்றும் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் என்றும் சாதனை படைக்கப்பட்டது.
அதாவது வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகளையும் நாதக சந்திரகுமார் 24,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நோட்டா 6,109 வாக்குகளை பெற்றது. 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவில் இருந்த சந்திரகுமார் 69,166 வாக்குகளை பெற்றிருந்தார்.
அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 64,879 வாக்குகளையும் 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சந்திரக்குமார் வென்றதற்கு பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் அவர் எடுத்த வாக்குகளை யாரும் பெற முடியவில்லை. இதனால் அவரே அதிக வாக்குகளை பெற்று வென்றவர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
இதன் பிறகு 2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகளை பெற்றிருந்தார். இதனால் இதுவரை அவரே அதிக வாக்குகளை பெற்றவர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடந்த தேர்தலில் ஈவிகேஎஸ் சாதனையை சந்திரக்குமாரே முறியடித்து 1.15 லட்சம் வாக்குகளை பெற்று தனது சாதனையை திரும்ப பெற்றார். இதில் திமுகவின் வாக்கு சதவீதம் 74.70 ஆக உள்ளது.
அது போல் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியின் வாக்கு சதவீதம் 15.59 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த தேர்தலை காட்டிலும் 9.24 சதவீதம் கூடுதலாகும். இந்த தொகுதியில் போட்டியிட்ட நாதக கடந்த 2021 ஆம் ஆண்டு 7.65 சதவீத வாக்குகளையும் 2023 ஆம் ஆண்டு 6.35 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
இந்த முறை 9.24 சதவீதம் கூடுதலாக பெற்றிருந்தாலும் டெபாசிட்டை இழந்துவிட்டது நாதக. டெபாசிட்டை திரும்ப பெற வேண்டுமானால் ஒரு கட்சி 16 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அது போல் இந்த தேர்தலில் போட்டியிட்ட பிரதான கட்சிகள் என பார்த்தால் திமுகவும், நாதகவும்தான்.
இவர்களில் திமுகவுக்கு முதலிடம் என்றால் நாதகவுக்கு இரண்டாவது இடம் என சொல்ல முடியாது. ஏனென்றால் 20 சதவீத வாக்குகளை பெற்றால் மட்டுமே இரண்டாவது இடம் என அதிகாரப்பூர்வமாக சொல்லலாம். எனவே இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடாதது நாதகவுக்கு பலமாக கருதப்பட்டிருந்தாலும் பெர்ஃபார்மன்ஸ் என பார்த்தால் அதில் டெபாசிட்டும் போச்சு, 2ஆவது இடமும் காலி என்றே சொல்லலாம்.
நாதகவுக்கு இந்த முறை 24 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளதுதான். ஆனால் அதில் அவர்களுக்கான வாக்குகள் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரைதான். மற்ற வாக்குகள் எல்லாம் அதிமுக, பாஜக, தேமுதிக, திமுக எதிர்பார்ப்பாளர்களின் வாக்குகளாகத்தான் இருக்க முடியும் என சொல்லப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications