"ஓவர்.. ஓவர்".. யாரு வைத்திலிங்கமா?.. எடப்பாடிக்கு போனை போட்ட ஓபிஎஸ் மகன்.. இது எப்போ.. பரபர அதிமுக
பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது
சென்னை: பொதுக்குழுவை கூட்டிவிட வேண்டியதுதான் என்று, தன்னுடைய அடுத்தக்கட்ட நகர்வுக்கு ஓபிஎஸ் தயாராகிவரும் நிலையில், அது தொடர்பான சில விஷயங்கள் அதிமுகவுக்குள் சுற்றி கொண்டிருக்கின்றன.
Recommended Video
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இடைக்கால பொதுச்செயலாளர், புதிதாக நியமிக்கப்பட்ட அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் செல்லாததாகி விட்டன.
இதனால் அதிமுகவில் விவகாரம் முற்றி உள்ளது.. இருவரில் யார் இறங்கி வருவார்கள், இணங்கி போவார்கள் என்று தெரியவில்லை.. இதனால் இரு தரப்பிலுமே பரபரப்புகள் தொடர்ந்து வருகின்றன.

ஸ்டிராங் எடப்பாடி
அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை நடத்தலாம் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்.. ஆனால், ஒற்றைத் தலைமை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி , இரட்டை தலைமையில் இயங்கலாம் என்ற ஓபிஎஸ்ஸின் அழைப்பை நிராகரித்துவிட்டார்.. மாறாக, ஓபிஎஸ் மீதே பழிகளை சுமத்தி விமர்சித்தும் வருகிறார்.. அதனால், இந்த 2 நாளும் காத்திருந்த ஓபிஎஸ் தரப்புக்கு இது ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது.. எடப்பாடி பழனிசாமி ஒத்து வராததால் வேறு வழி இன்றி பொதுக்குழுவை கூட்ட முடிவெடுத்து இருக்கிறார் ஓபிஎஸ்... இந்தப்பொதுக்குழு தொடர்பான சில தகவல்கள் வட்டமடித்து வருகின்றன..

வைத்திலிங்கம்
முதலாவதாக, பொதுக்குழுவை நடத்துவதற்கு, நீதிமன்ற அறிவுரைப்படி ஆணையரை கோருவது தொடர்பாக ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்... இதுவரை அனைத்து விஷயங்களும் சட்டப்படியே அவர் மேற்கொள்வதால், இனியும் எந்த சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ஆலோசனைகள் நேற்று முதல் துவங்கி உள்ளன. அடுத்ததாக, நடக்க போகும் பொதுக் குழுவிற்கு எடப்பாடிக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.. இதற்காக, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமே எடப்பாடியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்..

அசைன்மென்ட்
ஆனால், வழக்கமான தன் பிடிவாதத்தில் இருந்து எடப்பாடி மாறவில்லையாம்.. எனவே, எடப்பாடி ஆதரவாளர்கள் எஸ்பி வேலுமணி , தங்கமணி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் வைத்திலிங்கம்.. ஏற்கனவே கொங்குவில் தலைகளுடன் வைத்திலிங்கத்துக்கு, ஏகப்பட்ட, அதிருப்திகளும், வருத்தங்களும், அதிகார பிரச்சனைகளும் இருந்தாலும், அவைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.

அப்செட்
"இனி நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம், கட்சி நிர்வாகிகளாக 2 தரப்பிலும் பாதி பேரை நியமித்தால் போதும்... பிரச்சனையை வளர்க்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டும், இரட்டை தலைமை + பாதிப்பாதி நிர்வாகிகள் என்ற கண்டிஷன்கள் எங்களுக்கு சரிப்பட்டு வராது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்களாம். தன்னால் முடிந்த அளவுக்கு வைத்திலிங்கம் முயன்று தோல்வியடைந்ததால், ஓபிஎஸ் மகன் நேரடியாக எடப்பாடிக்கு போனை போட்டாராம்.. 3 முறை போன் போட்டும் எடப்பாடி போன் எடுக்கவில்லை என்கிறார்கள்..

ஈபிஎஸ்
நாம்தான் உறுதியான முடிவை எடுத்துவிட்டோமே, அப்பீலுக்கும் போயுள்ளோமே, இனி பிள்ளைகளிடம் பேச என்ன இருக்கிறது? என்று எடப்பாடி தன்னுடைய ஆதரவாளர்களிடம் சொன்னாராம்... இப்படி ஒரு தகவல்கள் கசிந்து வரும் நிலையில், வேறு சில விவரங்களும் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும் ,இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டி உள்ளதால், பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் முதலில் முடிவு எடுத்துள்ளார்.

"வைட்டமின் + ப"
ஏற்கனவே கடந்த ஒரு மாதமாகவே, போட்டி பொதுக்குழுவை நடத்த முடியாமல், திணறி வந்தார் ஓபிஎஸ்.. பொறுப்பாளர்களை மாவட்ட வாரியாக நியமித்தும், பலத்தை காட்ட போதுமான ஆதரவாளர்கள் இல்லாததாலும், "வைட்டமின் ப" செலவு செய்ய முயலாததாலும், இந்த பொதுக்குழு தள்ளிப்போய் கொண்டே இருந்ததாக சொல்லப்பட்டது.. அதேசமயம், நீதிமன்ற உத்தரவு தமக்கு சாதகமாக வரும்பட்சத்தில் பொதுக்குழுவை தைரியமாக கூட்டலாம், அதற்குள் எடப்பாடி தரப்பில் உள்ளவர்களை ஓரளவாவது தன்பக்கம் இழுத்து வந்துவிட வேண்டும் ஓபிஎஸ் தரப்பில் என்றும் கணக்கு போடப்பட்டது.

தூது விடும் படலம்
கோர்ட் தீர்ப்பு வந்து 3 நாட்கள் ஆகியும், பெரிய அளவுக்கு யாரும் ஓபிஎஸ் தரப்பில் தாவவில்லை என்று தெரிகிறது.. அதேசமயம், தூது விடும் படலம் தொடர்ந்து நடப்பதால், ஓபிஎஸ் பக்கம் படையெடுக்கும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.. இப்படி ஓபிஎஸ் பக்கம் பரபரப்புகள் தொற்றிக் கொண்டிருக்க, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு, வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்து எடப்பாடி பழனிசாமி அமைதி காத்து வருகிறாராம்.












Click it and Unblock the Notifications