"ஓவர்.. ஓவர்".. ஓபிஎஸ் மீது சி.வி. சண்முகம் போட்ட கேஸ்.. அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவு
ஓபிஎஸ்ஸுக்கு எதிராக சிவி சண்முகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவானது, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து கமிஷனர் விளக்கம் தர வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.. சி.வி. சண்முகம் கொடுத்த புகாரின் மீது பதிவான வழக்கின் நிலை அறிக்கையையும், இந்த மனுவுக்கு பதில் மனுவும் தாக்கல் செய்யும்படியும் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம், கோர்ட் உத்தரவிட்டதையடுத்து நடந்தது.. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி ஆபீசுக்கு ஓபிஎஸ் சென்றார்.
அந்த நேரத்தில், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.. பிறகு, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனர்...

சாவி
இதனை அகற்றக்கோரி ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர்.. பிறகு, சீல் அகற்றப்பட்டு எடப்பபாடி தரப்பினர் அதிமுக அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.

சண்முகம்
அப்போதுதான், அந்த அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை காணவில்லை என்று மாஜி அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு குற்றஞ்சாட்டினார். மேலும் அந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை பன்னீர்செல்வம் மற்றும் அவரது குண்டர் படையினர் எடுத்து சென்று விட்டதாகவும் ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.. அந்த புகாரின்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இறுதியில், சென்னை ஹைகோர்ட்டில் சி.வி சண்முகம், ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஒரு மனுவையும் தாக்கல் செய்தார்.

டாக்குமெண்ட்டுகள்
அந்த மனுவில், "கட்சி தலைமை அலுவலகத்தை திறந்து பார்த்தபோது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குண்டர் படையினர் எடுத்து சென்று விட்டனர்.. இது தொடர்பாக கடந்த மாதம் 23ம் தேதி புகார் அளித்துள்ளோம்.. ஆனால் இந்த புகாரை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை. ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. இந்த புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

வீடியோ
இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.. மனுதாரர் சி.வி.சண்முகம் சார்பில் வக்கீல் ரியாஸ் முகமது ஆஜராகி வாதிட்டார்... இதையடுத்து, சி.வி. சண்முகம் கொடுத்த புகாரின் மீது பதிவான வழக்கின் நிலை அறிக்கையையும், இந்த மனுவுக்கு பதில் மனுவும் தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications