மோடிக்கு "முகம்" டக்னு மாறிடுச்சாமே? திமுக பற்றி என்ன சொன்னார் A.C. சண்முகம்? சௌமியாவு செம குஷி.. ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாஜக கூட்டணி மிக தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா, அனைவரிடமும் கலகலப்பாக பழகக்கூடியவர்.. பொதுமக்களிடம் இறங்கி சென்று சகஜமாக பேசக்கூடியவர்.. எளிதாகவும், இயல்பாகவும் பழகக்கூடியவர்..

Did PM Modi advise to PMK Candidate Sowmiya Anbumani and what did Vellore A C Shanmugam say about DMK

எனவே, தர்மபுரி தொகுதியில் சௌமியாவையே வேட்பாளராக களமிறக்கினால், பாமகவுக்கு பெருத்த பலத்தை பெற்றுத்தருவதுடன், பெண்கள் மத்தியில் புதிய தெம்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதற்கேற்றபடி தீவிரமான பிரச்சாரத்தை சௌமியா மேற்கொண்டு வருகிறார்.

பாமக தீவிரம்: முதல்முதலாக சவுமியா அரசியலில் குதித்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும்நிலையில், சௌமியாவின் மகள்களும் வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியிருப்பது, கூடுதல் ஆர்வத்தை தொகுதிக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அன்புமணியின் மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் தன்னுடைய அம்மாவுக்காக ஆதரவு திரட்டி கொண்டிருககிறார்கள்..

ஓட்டு கேட்க போகுமிடமெல்லாம், "பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியின் மகள் வந்துருக்கேன்" என்று தங்களை என அறிமுகப்படுத்திக்கொண்டு, கடைகள், வீடுகள் என எல்லா இடங்களிலும் ஓடிஓடி சென்று வாக்கு கேட்கிறார்கள். கழுத்தில் பாமக துண்டுடன், தமிழ் மொழியில் சரளமாக பேசி, அம்மாவுக்காக இந்த பெண்கள் வாக்கு சேகரிப்பதை தர்மபுரி மக்கள் வியந்து போய் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

சவுமியா: பாமகவின் இந்த அதிரடிகளையும், மக்களை சந்தித்து சவுமியா ஆதரவு திரட்டும் பாணி, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதையும், பாஜக தரப்பும் கவனிக்காமல் இல்லை.. 2 நாட்களுக்கு முன்பு கவர்னருடன் 1 மணி நேரம் விவாதித்தாராம் பிரதமர் மோடி.. அப்போது தமிழகத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என மோடி கேட்டாராம்.

ராஜ்பவனுக்கு கிடைத்த தகவலின்படி, பாஜக மற்றும் கூட்டணிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும், அதாவது, சவுமியா அன்புமணி, தமிழிசை சவுந்தராஜன், நயினார் நாகேந்திரன் என 3 பேர் மட்டுமே வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாக ராஜ்பவன் தரப்பு சொன்னதாம்.
வேட்பாளர்கள் : இப்படிப்பட்ட சூழலில், நமக்கு ஒரு பிரத்யேகமான தகவல் கிடைத்துள்ளது.. அதாவது, வேலூரில் பிரச்சாரம் செய்த மோடி, பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை மேடையில் நிறுத்தி மக்களிடம் அவர்களுக்காக வாக்கு சேகரித்தார். பிரச்சாரக் கூட்டம் முடிந்ததுமே, வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகம், சௌமியா இருவரிடமும் தொகுதி நிலவரம் குறித்து விசாரித்திருக்கிறார் மோடி.

அப்போது, ஏ.சி.சண்முகம், "இந்த முறை வெற்றியை இழக்கவிடமாட்டேன், வெற்றிக்கான அனைத்து வழிகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். திமுக வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீது தொகுதி மக்களிடம் மட்டுமல்ல திமுகவிலேயே நிறைய அதிருப்திகள் இருக்கிறது. இதெல்லாம் நமக்கு பலமாக இருக்கிறது. இந்த முறை நான் ஜெயித்து விடுவேன்" என்று என நம்பிக்கையாக சொன்னாராம்.

சவுமியா: அதேபோல, சவுமியாவும் தர்மபுரி நிலவரத்தை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது, மோடி சவுமியாவிடம், "எனக்கு கிடைக்கிற ரிசல்ட்டில் நீங்கள் ஜெயிப்பீர்கள் என வருகிறது. கீப் இட் அப்.. மக்களின் ஆதரவை திரட்டுவதில் இன்னும் வேகமாக செயலாற்றுங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள்" என்று அட்வைஸ் செய்து விட்டு சென்றாராம் மோடி.

பிரதமர் இவ்வாறு தன்னிடம் அறிவுறுத்தியதை, தன்னுடைய மாமனார் டாக்டர் ராமதாசிடமும், கணவர் அன்புமணியிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சௌமியா.

அறிவுறுத்தல்: அதுமட்டுமல்ல, ஒவ்வொரு நாள் வாக்கு சேகரிப்பதை வீடியோவாக பதிவு செய்து அதனை தாத்தா ராமதாசுக்கு அனுப்பி வைத்து, எப்படி இருக்கிறது என கேட்கிறார்களாம் சவுமியாவின் மகள்கள்... அதைப்பார்த்து, சிலபல டிப்ஸ்களை சொல்லித் தருகிறாராம் டாக்டர் ராமதாஸ். அதனை உள்வாங்கி கொள்ளும் பேத்திகள், பெண்கள் மத்தியில் மிகச்சாரியாக பதிவு செய்து வருகிறார்களாம்..

அதிலும் முக்கியமாக, பெண்களை கவர்வதற்கு எதை எதை முன்வைக்க வேண்டும் என்றெல்லாம் பேத்திகளுக்கு க்ளாஸ் எடுத்து வருகிறாராம் டாக்டர் ஐயா...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+