படித்து படித்து சொன்ன மோடி.. கேட்காத எடப்பாடி.. கடைசியில் நடந்த சம்பவம்.. சீக்ரெட்டை உடைத்த ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவில் நடக்கும் மோதல் குறித்து ஓ பன்னீர்செல்வம் பேசியது கவனம் பெற்று வருகிறது. இதில் அவர் மோடி - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை குறித்து பேசியது விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. அதாவது இரண்டு பேருமே ரகசியமாக பேசியதாக ஓ பன்னீர்செல்வம் கூறி தமிழக அரசியலில் காட்டுத்தீ ஒன்றை பற்ற வைத்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சம் அடைந்து உள்ளது. இத்தனை காலம் அமைதியாக இருந்த.. எடப்பாடிக்கு இணையான பவர்புல் தலைவர் என்று கருதப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் எடுத்த பாராட்டு விழாவில் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. விழாவை அவர் புறக்கணித்தது சர்ச்சையாகியிருக்கிறது.

உள் கட்சி பூசல் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் செல்லவில்லை என செங்கோட்டையன் சொல்கிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.
செங்கோட்டையன் அதிமுகவில் திடீரென கலகம் செய்ய தொடங்கி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான, நட்பான சில சீனியர்கள் முக்கியமான மெசேஜ் ஒன்றை கொடுத்துள்ளாராம்.
அதன்படி செங்கோட்டையனை ஓ. பன்னீர்செல்வத்தை போல எளிதாக எதிர்கொள்ள முடியாது.
இது ரொம்ப சவாலான விஷயம். கவனமாகவே எதிர்கொள்ள வேண்டும். இது போக செங்கோட்டையன் ஜெயலலிதா காலத்திலேயே அரசியல் செய்தவர். அவருக்கு கட்சி அரசியல், நிர்வாக பிரச்சனை, ஜாதி பார்முலாக்களை எதிர்கொள்ள தெரியும் என்று எச்சரித்து உள்ளார்களாம்.
ஓ பன்னீர்செல்வம் கருத்து
இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கோட்டையனின் இந்த புரட்சி குறித்து ஓ பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
செங்கோட்டையன் பேச்சு குறித்துப் பேசிய ஓபிஎஸ், எம்ஜிஆர் காலத்தில் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன்தான் செங்கோட்டையன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் விரும்புகின்றனர் . அதிமுகவின் தோல்விக்கு எடப்பாடிதான் காரணம். அவர் முன்னாள் தலைவர்கள் இணைவதை விரும்பவில்லை.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்கள்.. கட்சியில் இருக்கும் தலைவர்கள் இப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சில விஷயங்களை சொன்னால் பிரச்சனை ஆகலாம். கட்சியின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பின்னால்தான் இருக்கிறார்கள். அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது ரகசியம். ஒருசில ரகசியங்களை வெளியிட முடியாது, அது அதிமுக இணைப்புக்கு தடையாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதிமுகவில் விலக்கப்பட்ட தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உடன் மோடி பேசினார். அமித் ஷா பேசினார். அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டும் கூட.. எடப்பாடி பழனிச்சாமி அதை கேட்கவில்லை. அவர் பிடிவாதமாக இருந்தார்.. அதுவே அதிமுகவிற்கு எதிராக திரும்பிவிட்டது என்று ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
சீக்ரெட்
இதன் மூலம் ஓ பன்னீர்செல்வம் முக்கியமான சீக்ரெட் ஒன்றை உடைத்துள்ளார். அதன்படி அதிமுகவில் விலக்கப்பட்ட தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உடன் மோடி பேசினார். அமித் ஷா பேசினார் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
ஆனால் இவர்கள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியும் கூட.. அவர்கள் தீவிரமாக கேட்டும் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்கவில்லை. அவர் பிடிவாதமாக இருந்தார்.. டெல்லி எதிர்ப்பை மீறியே எடப்பாடி செயல்பட்டார் என்ற சீக்ரெட்டை ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அதாவது அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications