திரும்ப திரும்ப "அதையே" சொன்ன பொன்முடி.. விசாரணையில் "வார்த்தையை" விட்டு.. அப்ப "அவரும்" சிக்குகிறாரா
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை மேற்கொண்ட ரெய்டு நடவடிக்கையில், அமைச்சர் பொன்முடி அடுத்த நபராக சிக்கியுள்ளார்.. நேற்றைய தினம் விசாரணை நடந்துள்ள நிலையில், இதுகுறித்து சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
செந்தில் பாலாஜி பரபரப்பே இன்னும் முடியாத நிலையில், அடுத்த அதிரடியாக அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையினர் வளையத்துக்குள் வந்துள்ளது திமுகவில் அதிர்ச்சியை தந்து வருகிறது.

பொன்முடியின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனம், தொழில் நிறுவனம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையை மேற்கொண்டனர்.
பொன்முடி: பொன்முடிக்கும், அவரது மகன் கவுதம சிகாமணிக்கும் சொந்தமான வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி, முக்கிய ஆவணங்களையும் அங்கிருந்து கைப்பற்றியிருக்கிறார்கள்.. இதனடிப்படையில், சம்மனும் வழங்கப்பட்டு, பொன்முடியை தங்கள் அலுவலகத்திற்கு நேற்றே அழைத்துச்சென்று, அதிகாரிகள் விசாரணையும் நடத்தினார்கள்..
நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம், அதிகாலை 3 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.. பிறகு, விசாரணை முடிந்து பொன்முடி வீட்டுக்கு திரும்பினார்.. எனினும், இன்று மாலை 4 மணிக்கு மறுபடியும் அவரை ஆஜராகும்படி, நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
மனிதாபிமானம்: இதுகுறித்து திமுக வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் சொன்னபோது, விசாரணை நடத்துவதாக அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது... அவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. அமலாக்கத்துறையினரின் கேள்விகளுக்கு, அமைச்சர் பொறுமையாக பதிலளித்தார். கவர்னரை தொடர்ந்து எதிர்த்து வந்ததால், அமைச்சர் மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரித்தது மனித உரிமை மீறல். இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும்படி அமைச்சருக்கும், அவரது மகனுக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
விசாரணை: இந்நிலையில், இதுகுறித்த மேலும் சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.. 17 மணி நேர சோதனைக்குப்பிறகு அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் அமலாக்கத் துறையினர்... விடிய விடிய அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. அந்த விசாரணை, பொன்முடியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது போலவே இருந்ததாம்... எனினும் விசாரணை முழுவதும் முடியவில்லை..
ஆனால், ஓவர் மன அழுத்தத்திலும் களைப்பிலும் பொன்முடி இருந்ததால், விடியற்காலை அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. விசாரணை முடியாததால்தான், மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகச் சொல்லி அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் நடந்த விசாரணையில், "எனக்கு நினைவில்லை, என் மகனுக்குத்தான் தெரியும், வழக்கறிஞரிடம்தான் கேட்க வேண்டும்" என்கிற பதிலையே பொன்முடி திரும்ப திரும்ப சொன்னாராம்.
அதேபோல, விசாரணையில், மிக மரியாதையாக நடத்தப்பட்டிருக்கிறார் பொன்முடி... சம்மன்படி, இன்று ஆஜராகும் பட்சத்தில் விசாரணை மிக அழுத்தமாக இருக்கும் என்றம் சொல்லப்படுகிறது.
கைது நடவடிக்கை: பொன்முடியை தொடர்ந்து, அவரது மகனும் விசாரிக்கப்படவிருக்கிறார்.. இதில், பொன்முடி கொடுக்கும் பதிலை வைத்தே அவரது மகனை முதலில் கைது செய்ய வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.. அந்தவகையில், முதலில் கைதாவது பொன்முடியா? அல்லது அவரது மகனா ? என்கிற பட்டிமன்றம் திமுகவில் நடந்து கொண்டிருக்கிறதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications