துண்டு 2 பக்கமும் போட்ட ராகுல் காந்தி? ஸ்டாலின், விஜய் தரப்பில் இப்படியெல்லாம் நடந்ததா? நம்ப முடியல
சென்னை: முதல்வர் விஜய், ராகுல் காந்தி சந்திப்பு இன்று மதியம் சென்னையில் நடக்கிறது.. இந்த சந்திப்புக்கு பின்னால் கடந்த ஒரு வாரமாகவே நிறைய அரசியல் நகர்வுகள் நடந்திருக்கின்றன.. முதலில் ஸ்டாலினை சந்திக்க விரும்பிய ராகுல்.. கடைசியில் விஜய்யை சந்திக்க ஓகே சொன்னது எப்படி? இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி பார்ப்போம்..!!
முதல்வர் விஜய்யை இன்று மதியம் சந்திக்கிறார் ராகுல்காந்தி. அண்மைகாலமாக விஜய் மீது அதிருப்தியில் இருந்து வந்தார் ராகுல். அதற்கு பல காரணங்கள் இருப்பதை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம். அதனால், விஜய்யையும் ராகுலையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று இரு தரப்பிலும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ராகுல் காந்தி - விஜய்
ராகுலிடம் ப்ராவீன் சக்கரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் முயற்சித்தனர், ஆதவ் அர்ஜுனாவும் விஷ்ணு ரெட்டியும் விஜய்யிடம் இதைப்பற்றி பேசினார்கள்.
"ராகுலை சந்திப்பதில் நமக்கொன்றும் பிரச்சனை இல்லையே ! காங்கிரஸ் கட்சி நமது அரசுக்கு ஆதரவளித்து வரும் போது, ராகுல்காந்தியை சந்திப்பதில் நமக்கு மகிழ்ச்சி தானே" என்று சொல்லி விட்டார் விஜய். ஆனால், ராகுல் தரப்பிலிருந்து விஜய்யை சந்திக்க ஆர்வம் காட்டப்படவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான், மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வருவதும், அதில் விஜய் கலந்து கொள்ளவிருப்பதும் முடிவானது.. இந்த தகவலை ராகுல்காந்தியும் உறுதி செய்து கொண்டார்..
விஜய்யின் நோஸ்கட்
உடனே, விஜய்யை நோஸ்கட் பண்ணும்விதமாக ஒரு நிகழ்வை உருவாக்க வேண்டுமென யோசித்த ராகுல்காந்தி, திமுக-காங்கிரஸ் தான் நம்பிக்கையான பார்ட்னர். விஜய்யின் நடந்துகொள்வது போல ஸ்டாலின் நம்மிடம் நடந்து கொள்ள மாட்டார். அவர் நம்பிக்கையான தலைவர் என்று சொல்லிய ராகுல்காந்தி, சென்னைக்கு வரும் போது ஸ்டாலினை சந்திக்க விரும்புகிறேன் என்று கனிமொழி மூலமாக தகவல் அனுப்பினார்.
இதனை ஸ்டாலினிடம் கனிமொழி சொல்ல, அவரது முகம் மாறியது மட்டுமல்லாமல், ராகுலுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க மறுத்து விட்டாராம் ஸ்டாலின்.
ஸ்டாலினை சந்திக்க பிளான்
இதனையடுத்துதான், ப்ராவீன் சக்கரவர்த்தியிடம், விஜய்யை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி. இந்த தகவல் விஜய்க்கு செல்ல, அதற்கு முன்பாகவே ஸ்டாலினை சந்திக்க ராகுல் கேட்டிருந்த அப்பாயிண்ட்மெண்ட் தகவல் விஜய்க்கு சென்றிருக்கிறது. இதனால், எரிச்சலடைந்த விஜய், தன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்த ராகுலுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தினாராம்.. ஒருகட்டத்தில் ராகுலை சந்திக்க வேண்டாம் என்ற முடிவில் அழுத்தமாக இருந்துள்ளார் விஜய்.
கடந்த 1 வாரமாகவே இந்த மூடு மந்திரம் நடந்து கொண்டிருந்தது. இதனால் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்ளாமலும் இருந்தார் ராகுல். அதுமட்டுமல்லாமல், இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையும் விஜய் கைப்பற்றியது ராகுலுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்துள்ளது..
விஜய்யுடன் இன்று சந்திப்பு
இனியும் தாமதிக்கவேண்டாம், சென்னைக்கு செல்லும்போது விஜய்யை சந்திக்காமல் இருந்தால் அது காங்கிரஸ்சுக்குத்தான் நஷ்டம் என்று ராகுலுக்கு நிர்வாகிகள் உணர்த்தியிருக்கிறார்கள். இதனையடுத்து, தேர்தலில் தவெக தான் ஜெயிக்கிறது என்கிற சூழல் நேற்று உருவானதுமே... விஜய்யை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் சொன்னாராம் காங்கிரசின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால். அத்துடன், ராகுலின் சந்திப்பு குறித்து அவர் நினைவுப்படுத்த, சந்திப்புக்கு ஓ.கே சொன்னாராம் விஜய்..
ஆக, ராகுல் - விஜய் இருவரின் சந்திப்பு எப்படி ஓ.கே. ஆனது என்கிற பின்னணிகளை நம்மிடம் தெரிவிக்கிறது சத்தியமூர்த்திபவன் வட்டாரம்...!!!!
- நமது சிறப்பு நிருபர் எழில்



Click it and Unblock the Notifications
