முத்துக்குமரனை கலாய்த்த விஜே பார்வதி.. அன்னைக்கு ரெட் கார்டு கொடுக்க சொன்னாரே, இப்போ பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது ஒருத்தர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வெளியே வந்த பிறகும் அவரைத் துரத்தும் என்பதற்கு இப்போது முத்துக்குமரன் விவகாரமே ஒரு உதாரணமாக மாறியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சையில் முத்துக்குமரன் சிக்கியிருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்த விஜே பார்வதி போட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்திருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வென்றார். அதற்குப் பிறகு பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதியும் கம்ருதீனும் போட்டியாளர்களாக இருந்தனர். அப்போது பார்வதி, கம்ருதீன் தொடர்பான சில சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் விவாதமானபோது, இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று முத்துக்குமரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் வீட்டில் யார் தவறு செய்தாலும் அதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முத்துக்குமரன் பேசியது அப்போது பேசுபொருளானது.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. முத்துக்குமரன் மீது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அன்றைக்கு தங்களைப் பற்றி பேசியதை நினைவுபடுத்தும் விதமாக விஜே பார்வதி ஒரு பதிவைப் பகிர்ந்திருக்கிறார்.

Muthukumaran VJ Parvathy Wahidha Bigg Boss


பார்வதி பதிவு

முத்துக்குமரன் பிக் பாஸ் கோப்பையை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விஜே பார்வதி, "இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வின்னர்தானே அன்னைக்கு நமக்கு ரெட் கார்டு கொடுக்கணும்னு பேசினார்? LOL! சரியான தேர்வு! பிக் பாஸின் போலி வெற்றியாளர்களும், அவங்களோட 'நல்ல மனிதர்' இமேஜ் பில்டிங்கும்!" என்று கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவில் முத்துக்குமரனின் பெயரைக் குறிப்பிட்டு நேரடியாகத் தாக்கவில்லை என்றாலும், அவர் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தையும் அதனுடன் எழுதியிருக்கும் வார்த்தைகளையும் பார்த்தால் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக, "நல்ல மனிதர் இமேஜ் பில்டிங்" என்று அவர் குறிப்பிட்டிருப்பதுதான் இப்போது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Muthukumaran VJ Parvathy Wahidha Bigg Boss

முத்துக்குமரன் - வஹிதா விவகாரம்

விஜே பார்வதி இப்படி ஒரு பதிவு போடுவதற்கு முன்பே முத்துக்குமரன் தொடர்பான சர்ச்சை சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா, முத்துக்குமரன் தன்னிடம் நெருக்கமாகப் பழகி, திருமணம் செய்துகொள்வதாக நம்பிக்கை அளித்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். தனக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரிந்திருந்தும், ஆறுதலாகப் பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதாகவும் அவர் தனது பதிவுகள் மற்றும் வீடியோக்கள் மூலம் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தற்கொலை முயற்சிக்குப் பிறகு சிகிச்சை பெற்று நலமடைந்ததாகவும் வஹிதா கூறியிருக்கிறார். இதனால் முத்துக்குமரன் மீதான குற்றச்சாட்டுகள் இணையத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், வஹிதா கூறிய குற்றச்சாட்டுகளை முத்துக்குமரன் மறுத்திருக்கிறார். இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகியதாகவும், காதல் உறவு எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நாங்கள் நட்பாக எடுத்துக் கொண்ட சில வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுவதாகக் கூறி, அவற்றை நீக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Muthukumaran VJ Parvathy Wahidha Bigg Boss

பழைய ரெட் கார்டு

பார்வதியின் பதிவு இப்போது பேசப்படுவதற்கு முக்கியக் காரணம், 9வது சீசனில் கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் காருக்குள் வைத்து சான்ராவை வெளியே தள்ளிய பெரிதாக பேசப்பட்டது. அப்போது சான்ராவுக்கு ஆதரவாக ஒரு பெண்ணை இதுபோல செய்யலாமா? கண்டிப்பாக பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட்கார்டு கொடுக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். அதை வைத்து தான் இப்போ பார்வதி பழி தீர்த்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+