சிவக்குமாருக்கு இந்த மேட்டர் தெரியுமா? சூர்யாவிடம் ஆவேசத்துடன் வந்த ராஜேஸ்வரி பிரியா.. நறுக் கேள்வி
சென்னை: பிரபல நடிகர் சூர்யாவுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.. அத்துடன் ஒரு முக்கிய கோரிக்கையையும் விடுத்திருக்கிறார்.
கடந்த மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தன்று ராஜேஸ்வரி பிரியா வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.. அதில், "எப்படி சினிமாவில் சிகரெட் குடிப்பதனை ஊக்குவிக்க கூடாது என தேசிய புகையிலை கட்டுபாட்டுத் திட்டம் மூலம் 2003 ல் விளம்பர தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம் உள்ளதோ அதே போன்று புகை பிடிக்கும் காட்சியே இருக்க கூடாது என்றும் சட்டம் வேண்டும்.

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 53% மேல் திரைப்படங்களே புகைபழக்கம் அதிகரிக்க காரணம் என்று வெளியிட்டுள்ளது. அதனால், எதிர்கால சந்ததியினரின் உயிரை காக்க அனைத்து நடிகர்களும் நடிகைகளும் திரைப்படத் துறையினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆவேசம்: அதேபோல, சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் விஜய்யின் லியோ பட பாடல் வெளியானபோது, ராஜேஸ்வரி பிரியா கடும் ஆவேசத்துடன் சேனல்களுக்கு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.
அதில், "நான் ரெடி' பாடலில், ரவுடியிசத்தை தூண்டுதல், தீய போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு இளைஞர்களை தூண்டி விடுதல் போன்ற குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிகரெட்டை வாயில் வைத்து நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு "சர்க்கார்" படத்தில் முதல் காட்சியிலேயே சிகரெட்டை வாயில் வைத்திருந்தார்.. அதற்கும் நான் எதிர்ப்பு தந்தேன்..
கொள்கைகள்: இத்தனை இளைஞர்கள் விஜய்யை பின்தொடர்கிறார்கள்.. ஒரு தலைவராக பார்க்கும் அளவுக்கு, அவரே தன்னை கிரியேட் செய்தும் கொள்கிறார்.. அப்படி இருக்கும்போது, அதற்கான அடிப்படை பண்பு ஏதாவது இருக்கணும்தானே? சமூகத்தின் மீதும் அக்கறை இருக்கணும் இல்லையா? என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.
விஜய்யை எதிர்ப்பதால், தனக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காகவே ராஜேஸ்வரி பிரியா இப்படியெல்லாம் பேட்டிகளை தந்து பரபரப்பை கிளப்பிவிடுகிறார் என்று விஜய் ரசிகர்களே இதனை அப்போது விமர்சித்திருந்தனர். ஆனாலும், தன்னுடைய கருத்துக்களில் இன்றுவரை உறுதியாக இருந்து வருகிறார் ராஜேஸ்வரி பிரியா.
நடிகர் சூர்யா: இதோ விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கும் ராஜேஸ்வரி பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்த அறிக்கையில், "சிகரெட் காட்சிகளை மையப்படுத்தி நடித்து இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் சினிமா நடிகர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் சூர்யா அவர்கள் தனது சொந்த தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரே வைக்காத புதிய படத்தின் டீசர் காட்சியில் சிகரெட் புகைத்தபடி வருவது கேடு கெட்ட காட்சியாக உள்ளது.
உங்கள் தம்பி நடிகர் கார்த்தி அவர்கள் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கொள்கை பிடிப்போடு உள்ளார். உங்கள் அப்பா ஒரு பிள்ளைக்கு நல்லது சொல்லி கொடுத்து, உங்களுக்கு சொல்லி கொடுக்க மறந்துவிட்டாரா? அல்லது தந்தை சொல்லை மதிக்கவில்லையா?
அறக்கட்டளை: உங்கள் அறக்கட்டளையின் மூலம் படிக்கும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா? உங்கள் நடிப்பை நம்பாமல், எப்போது சிகரெட்டை நம்பினீர்களோ அப்போதே நடிகராக தோற்று போய்விட்டீர்கள் சூர்யா" என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா காட்டமாக விமர்சித்திருக்கிறார். இதற்கு சூர்யா ரசிகர்கள் திரண்டு வந்து ராஜேஸ்வரி பிரியாவுக்கு பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications