திமுக ஆட்சியில் 500 மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர்.. அதிரடியாக ரத்து செய்த விஜய்
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பெறுப்பேற்றதில் இருந்தே முந்தைய திமுக ஆட்சியில் கோரப்பட்ட டெண்டர்களை ஆய்வு செய்து வருகிறது. அதில் முறைகேடு ஏதும் இருப்பதாக நம்பினால் உடனே ரத்து செய்கிறது அதன்படி பல்வேறு துறைகளின் 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்திருக்கிறது. அந்த வகையில் ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 500 மின்சார பஸ்களை வாங்க முந்தைய திமுக ஆட்சியில் கோரப்பட்ட டெண்டர் ரத்து செய்திருக்கிறது. அதற்கு பதில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 பேருந்துகளை தனியார் மூலம் வாங்கி இயக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மே 10ம் தேதி பொறுப்பேற்றது. அப்போதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், நிர்வாக சீர்திருத்தங்களையும் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முந்தைய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் கோரப்பட்ட டெண்டர்களை விஜய் தலைமையிலான அமைச்சரவை மிகத் தீவிரமாக ஆய்வு செய்கிறது.

கடந்த ஒரு மாதமாகவே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்று அடிக்கடி கூறி வரும் முதலமைச்சர் விஜய், டெண்டர் விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை விரும்புகிறாராம்.
இதன் ஒரு பகுதியாக, முந்தைய தி.மு.க. அரசின் இறுதிக்கட்டத்தில், பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் அவசர அவசரமாகக் கோரப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் டெண்டர்களை விஜய் தலைமையிலான அரசு மறுஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. குறிப்பாக, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கோரப்பட்ட டெண்டர்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன
இந்த விரிவான ஆய்வின் போது, பல டெண்டர்களில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததும், குறுகிய கால அவகாசத்தில் ) சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சாதகமாக முறைகேடுகள் நடந்திருப்பதாக தவெக அரசு குற்றம்சாட்டியுள்ளது.. வழக்கமாகப் பெரிய திட்டங்களுக்கான டெண்டர் கோரப்படும் போது போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், முந்தைய ஆட்சியில் விதிகளுக்குப் புறம்பாக, மிகக் குறுகிய கால வரம்பிற்குள் டெண்டர்கள் கோரப்பட்டு, அவசரகதியில் ஒப்பந்தங்கள் இறுதி செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டுகிறது தவெக அரசு.
அந்த வகையில் முறைகேடுகள் மற்றும் முறையற்ற விநியோகம் ஏதேனும் கண்டறியப்பட்டதாக கருதினால், அந்த டெண்டர்களை உடனடியாக ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். அதனடிப்படையில், தற்போதைய அரசு பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் விஜய்.
இந்த அதிரடி நடவடிக்கை அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்து செய்யப்பட்ட இந்த டெண்டர்கள் அனைத்தும், இனிவரும் நாட்களில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமில்லாமல், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மறுடெண்டர் விடப்படும் என்றும், தகுதியான நிறுவனங்களுக்கு மட்டுமே விதிகளின்படி ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்றும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 500 மின்சார பஸ்களை வாங்க முந்தைய திமுக ஆட்சியில் கோரப்பட்ட டெண்டர் ரத்து செய்திருக்கிறது. அதற்கு பதில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 பேருந்துகளை தனியார் மூலம் வாங்கி இயக்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்களே பஸ்களை வாங்கி, இயக்கி, பராமரிக்கும். தமிழக அரசு ஒரு கிலோமீட்டருக்கு நிலையான கட்டணத்தை மட்டுமே செலுத்தும் வகையில் ஒப்பந்தத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், மின்சார பஸ்களை வாங்குவதற்கும், அதற்கு கண்டக்டர்களை நியமிப்பதற்கும், பராமரிப்புச் செலவுகளை ஏற்பதற்கும் போதிய நிதியில்லை. இதனால் தனியார் நிறுவனங்களே பஸ்களை வாங்கி, இயக்கி, பராமரிக்க ஒப்புதல் கோரி கடிதம் எழுதியுள்ளோம், அதன் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றார்கள்.














Click it and Unblock the Notifications