அடிச்சு புடிச்சு ஓடி வந்தது வேஸ்ட்டா? தவெக ரிப்போர்ட்டால் கதறும் 4 விஐபிகள்! விஜய் யோசனை இதுதான் போல

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அரசியல் களமே பரபரப்பாகி வருகிறது.. ஒவ்வொரு அரசியல் காய்களும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. அப்படித்தான் அதிமுகவில் இருந்து விலகி, தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை அவசர அவசரமாக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் நிலையும், தமிழகம் முழுவதும் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.. இந்த 4 பேரும் என்னதான் செய்ய போகிறார்கள் தெரியவில்லை. ஆனால் விஜய் 2 விதமான முடிவுகளை எடுக்கலாம் என்கிறார்கள்.

பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யாபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா என 4 அதிமுக எம்எல்ஏக்களும் தவெகவுக்கு தாவியுள்ளார்கள்..இப்போது இடைத்தேர்தல் வரப்போகிறது. ஆனோல், மீண்டும் இவர்களுக்கே அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா தெரியவில்லை..

Vijay TVK Tamil Nadu Politics Political Strategy TVK Leaders Election 2026 2026

முதல்வர் விஜய்

இப்போதுள்ள சூழலில் இவர்களுக்கு மீண்டும் சீட் கொடுப்பதில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக தலைமைக்கு சுத்தமாக விருப்பமில்லை என்று தகவல்கள் கசிகின்றன.

இதற்கு முக்கிய காரணம், தவெக தலைமை அந்தந்தத் தொகுதிகளில் சீக்ரெட்டாக கள ஆய்வு நடத்தி உள்ளது.. அதில், தங்களுக்கு 5 ஆண்டுகள் சேவை செய்ய அள்ளி வழங்கிய வாக்குகளை மதிக்காமல், தங்களின் சுயநல அரசியல் காரணங்களுக்காகவும், உட்கட்சிப் பூசல்களுக்காகவும் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்த இந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீது தொகுதி மக்கள் கடுமையான அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்களாம்..

தவெக எடுத்த ஆய்வு

அதுமட்டுமல்ல, இந்த 4 பேருக்கும் அந்தந்த தொகுதிகளில் போதிய நற்பெயரோ அல்லது சொந்த செல்வாக்கோ பெரிய அளவில் இல்லை, அஅனால்இவர்களையே மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தினால் தவெக அங்கு மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்றும் கட்சி மேலிடம் துல்லியமாகக் கணித்துள்ளது.

மற்ற கட்சிகளில் இருந்து பதவிக்காகவும் சுயநலத்திற்காகவும் ஓடி வருபவர்களுக்கு உடனடியாகப் போட்டியிட வாய்ப்பளித்தால், அது கட்சியின் கொள்கைக்கும் பொதுமக்களிடையே உள்ள பிம்பத்திற்கும் மிகப்பெரிய கலங்கத்தை ஏற்படுத்திவிடும் என்று முதல்வர் விஜய் மூத்த நிர்வாகிகளிடம் கறாராகக் கூறியதாகத் தெரிகிறது.

சட்டமன்றத்தில் தவெக அரசு தனது சொந்த பலத்தை நிரூபிக்கவும், தனிப் பெரும்பான்மைக்கான இலக்கை எட்டவும் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானது என்பதால், தவெக தலைமை எந்தவொரு தேவையற்ற ரிஸ்க்கையும் எடுக்க விரும்பவில்லையாம்..

4 அதிமுக மாஜி எம்எல்ஏக்கள்

இந்த 4 பேருக்கு பதிலாக அந்தந்தத் தொகுதிகளில் தவெகவின் தீவிர உழைப்பாளர்களுக்கும், மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்ட புதிய முகங்களுக்கும் வாய்ப்பளிக்க கட்சி மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்..

அதுமட்டுமல்ல, மற்ற கட்சிகளில் இருந்து பதவிக்காகவும் சுயநலத்திற்காகவும் ஓடி வருபவர்களுக்கு உடனடியாக போட்டியிட வாய்ப்பளித்தால், அது கட்சியின் கொள்கைக்கும் பொதுமக்களிடையே உள்ள பிம்பத்திற்கும் மிகப்பெரிய கலங்கத்தை ஏற்படுத்திவிடும் என்று முதல்வர் விஜய், மூத்த நிர்வாகிகளிடம் கூறியதாக தெரிகிறது.

விஜய் யோசனை என்ன

மற்றொருபுறம் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மிகப்பெரிய சட்டப் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. இந்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீது அதிமுக சார்பில் கட்சித் தாவல் நடவடிக்கை நிலுவையில் இருந்த ஒரு இக்கட்டான சூழலில், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதிமுக கொறடா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

4 மாஜிக்கள் முடிவு?

இதற்கிடையே, இந்த வழக்கில் தங்களது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நீதிமன்றம் இடைக்காலத் தடை எதுவும் விதித்துவிடக் கூடாது என்பதற்காக, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயன்று வருகிறார்கள்.

பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, தாய் கட்சியான அதிமுகவிலும் இடமில்லாமல், நம்பி வந்த தவெகவிலும் உரிய அங்கீகாரமும் தேர்தலுக்கான சீட்டும் கிடைக்குமா என்ற மிகப்பெரிய அச்சத்தில் இந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், அவர்களது ஆதரவாளர்களும் தவிப்பிலும் அதிர்ச்சியிலும் உள்ளார்களாம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+