2 வார பேச்சுவார்த்தை.. சமாதானத்திற்கு முயன்ற ரஜினிகாந்த்? தனியாக தங்கிய தனுஷ்? நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் - ஐஸ்வர்யா திருமண உறவில் சிக்கல் ஏற்பட்ட போது ஐஸ்வர்யாவின் தந்தை என்ற ஸ்தானத்தில் நடிகர் ரஜினிகாந்த் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சினிமா வட்டாரங்கள் சில நம்மிடம் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தனது மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யாவை பிரிவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். நேற்று இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர் அறிக்கை வெளியிட்டார். 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

தனுஷை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் இதே அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பு நேற்று வந்திருந்தாலும் 2 வாரத்திற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

சினிமா வட்டாரம்

சினிமா வட்டாரம்

இது தொடர்பாக சினிமா வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்ததில், இவர்கள் இருவரும் பிரிவதாக 2 வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டனர். நிறைய கருத்து வேறுபாடுகள் காரணமாக முடிவு செய்துள்ளனர். இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஒரு காரணம் இல்லை. இவர்களுக்கு இடையிலான பிரச்சனை பல வருடங்களுக்கு முன்பே ஒரு விஷயத்தில் எழுந்துவிட்டது. இணையத்தில் வெளியான சில புகைப்படங்கள் காரணமாக அப்போதே இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சமாதானம்

சமாதானம்

ஆனால் அப்போது இரண்டு தரப்பில் இருந்தும் மூத்தவர்கள் பேசி அதை சரி செய்தனர். இது 7-8 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பிளவு. அதன்பின் இருவரும் நெருக்கமாகவே இருந்தனர். ஆனால் சமீபத்தில் கடந்த ஒரு வருடமாக இவர்கள் இருவருக்கும் மீண்டும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு தனுஷ் பற்றி சில புகார்கள் நேரடியாக ஐஸ்வர்யா காதுக்கே சென்று இருக்கிறது. அதில் வாக்குவாதம் ஏற்படவே இருவருக்கும் சண்டை முற்றி இருக்கிறது என்று அந்த சினிமா வட்டார தகவல்கள் நம்மிடம் தெரிவித்தன.

 கோவா பேட்டி

கோவா பேட்டி

ரஜினி இந்த விவகாரம் தெரிந்தும் தொடக்கத்தில் அதை பற்றி பெரிதாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து தனுஷை சில நடிகைகளுடன் ஒப்பிட்டு நிறைய கிசு கிசுக்கள் வெளியே வந்தன. முக்கியமாக தெலுங்கு, மலையாள திரை உலகில் தனுஷ் குறித்த சில சர்ச்சைக்குரிய கிசுகிசுக்கள் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஐஸ்வர்யாவே நேரடியாக ஒரு நடிகையிடம் கோபமாக விசாரித்ததாக கூறப்படுகிறது.

நடிகை மோதல்

நடிகை மோதல்

அதாவது கிசுகிசுக்கள் உண்மையா என்று தனுஷ் பற்றி ஒரு நடிகையிடம் ஐஸ்வர்யா கேட்டதாக கூறப்படுகிறது. தன்னிடம் ஐஸ்வர்யா வந்து பேசியதை பற்றி அந்த நடிகை தனுஷிடம் புகார் கொடுத்துள்ளாராம்.. அதனால் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் மேலும் மோதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பெரிய வாக்குவாதம் ஆகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தொடர் மோதல்களால் பிரிந்துவிடலாம் என்ற முடிவை தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் எடுத்துள்ளனர்.

குடும்பத்திடம் தெரிவித்தனர்

குடும்பத்திடம் தெரிவித்தனர்

இதை இரண்டு பேருமே குடும்பத்தினர் முன்னிலையில் தெரிவித்துள்ளனர். அப்போது இவர்களை சமரசம் செய்ய ரஜினி தரப்பு முயன்றதாக கூறப்படுகிறது. அதாவது இவர்களிடம் ரஜினிகாந்த் தனி தனியாக பேசி சமாதானம் செய்ய முயன்று இருக்கிறார். பேசி பாருங்கள்.. குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளாராம். ஆனால் இரண்டு பேருமே மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணத்தில் இல்லை. 7 வருடங்களுக்கு முன் இதே போன்ற பிரச்சனையில் சமரசம் செய்து அது வெற்றிபெற்றது.. ஆனால் இந்த முறை இரண்டு பேரையும் குடும்பத்தினரால் சமாதானம் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

சமாதானம் தோல்வி

சமாதானம் தோல்வி

இந்த சமாதான முயற்சி தோல்வி அடையவே தனுஷ் வெளி மாநிலம் சென்று அங்கு தனியாக தங்கி இருக்கிறார். இரண்டு வாரங்கள் சமாதானம் முயற்சி செய்துவிட்டு.. ரஜினி தரப்பும் இனி நாம் சொல்ல ஒன்றும் இல்லை என்று ஒதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. 2 வாரமாக தனுஷ் தனியாக தங்கிய நிலையில் ஐஸ்வர்யாவும் பிரியும் முடிவை அறிவித்துவிடலாம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்து இருக்கிறாராம்.

Recommended Video

    Dhanush & Aishwarya Separation | Aishwarya போட்ட Tweet - இந்த பிரிவு தேவை | Filmibeat Tamil
     நேற்று மாலை

    நேற்று மாலை

    இதன் பின்பே நேற்று மாலை பிரியும் முடிவை அறிவிக்கலாம் என்று இருவரும் முடிவு செய்துள்ளனராம். அதன்பின் இரவு நேரத்தில் இருவரும் ஒன்றாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன்பின் சட்ட ரீதியாக இருவரும் பிரிவதற்கான முயற்சிகளை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் பிரிந்தது குறித்து அறிவித்த நிலையில் அதை பற்றி நடிகர் ரஜினிகாந்த் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவர் அமைதியாக இதை ஏற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+