Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏய் ஏய்" இன்னு சொல்லாம "ஓய் இன்னு" சொல்லவா? போடா" சீறிய சீமான்.. அப்படி சொல்லாதீங்க சார்.. ஷ்ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசிய பேச்சு, சர்ச்சையாகி உள்ளது.. என்ன காரணம்? சீமான் என்ன சொன்னார்?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளருடன் காரசாரமாக விவாதித்து மிரட்டிய வீடியோக்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி விடும்..

இப்படித்தான் கடந்த வருடம், குடிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சீமான் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஒரு செய்தியாளர், "பெரியார் சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது' என்று கூறியிருக்கிறாரே" என்று கேள்வி எழுப்பினார்.

Did Seeman insult journalists and What happened actually in Chennai protest

ஏற்றத்தாழ்வுகள்: அதற்கு பதிலளித்த சீமான், இப்போதும் சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்கிறதா? இல்லையா? என்று அந்த செய்தியாளரை நோக்கி, இடஒதுக்கீடை நீங்கள் ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு செய்தியாளர் ஒருவர், ஜமீன்தாரர்கள், மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆகியோர்களுக்கு பிசி, எம்பிசியில் இடஒதுக்கீடு கொடுக்கும் நிலையில் முற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு ஏன் கொடுக்கவில்லை? என்றார்.

மேலும் பேசிய சீமான், நீ தான் பெரிய முன்னேறுன வெங்காயமாச்சே... நீ பிசி, எம்பிசிக்கு வா.. நான் இங்கே தான் இருப்பேன்... நான் முற்படுத்தப்பட்ட வகுப்பா தான் இருப்பேன்.. என்று சீமான் சொல்லி முடிப்பதற்குள் செய்தியாளர், அத பத்தி நீங்க பேசவேயில்லைய சார் என்றார். இதில் கோபமுற்ற சீமான், "யோவ் யார் நீ முதல? காதுல பஞ்ச வச்சு படுத்து கிடந்துட்டு பேசவில்லை , கீசவில்லைனு கிடக்குற போயா லூசு.. கேக்கலனா கேக்கலைனு சொல்லு.. டேய் மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்" என்று திட்டியிருந்தார்.

மைத்துனருக்கு சீட்: பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்தது.. இதுபோலவே கடந்த சில மாதங்களுக்கு, அவரது மைத்துனருக்கு தேர்தலில் சீட் வழங்கியது குறித்தும், சவுக்கு சங்கரின் பேச்சு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சீமான், அந்த செய்தியாளரிடம் ஒருமையில் பேசியதுடன், "பைத்தியக்காரன்" என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியிருந்தார்.. சீமானின் இந்த பேச்சும் கடும் கண்டனத்துக்கு ஆளானது.

இப்போதும் அதுபோலவே ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது.. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள லூப் சாலையில் உள்ள மீன் கடைகளில் மீன் வாங்க வருவோர் வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்துவதால், அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இந்த கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சாலையோர மீன் கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Did Seeman insult journalists and What happened actually in Chennai protest

ஓய் - ஏய் : மீனவர்கள் இன்று சாலைகளில் மீன்களை கொட்டியும், படகுகளை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. எனேவ, அவர்களுக்கு சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இடஒதுக்கீடு குறித்த பேச்சை ஆரம்பித்தார்.. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்ன இடஒதுக்கீடு கொடுத்தார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர், அவர்களும் பிற்படுத்தப்பட்டவர்கள் தானே? என்றார். அப்போது, குறுக்கிட்ட சீமான், கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு இருக்கா, இல்லையா? என்று கேட்டார்.

தொடர்ந்து செய்தியாளர் கேள்வி கேட்க, நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல். பிறகு நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்று பேசிக்கொண்டிருந்தபோது "ஏய்" என்று செய்தியாளரை நோக்கி கைநீட்டி பேசினார் சீமான். அப்போது, செய்தியாளர், "ஏய்" என்று சொல்லாதீங்க சார்" என்று சொன்னார்.. இதைக்கேட்டதும் சீமான், "ஏய்-ன்னு சொல்லாமல் "ஓய்"-ன்னு சொல்லவா? "போடா" என்றார்.. இப்படி திடீரென ஒருமையில் போடா என்றதுமே, செய்தியாளர்கள் அதிர்ந்தனர்.. சீமானின் இந்த பேச்சும் செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இங்கு வெறும் குடையை வைத்து கொண்டு மீன் விற்கும் கடைகளை மக்கள் நடத்தி வருகின்றனர். அருகில் தான் கடல், அதிலிருந்து படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன்கள் இங்கு தான் இருக்கின்றன. இந்த இடத்தில் கடைகள் போடப்பட்டுள்ளன. இதை காலி செய்ய வேண்டிய தேவை எங்கு வந்தது? நான் கடற்கரையில் மீன் விற்கக் கூடாது என்றால், கடலுக்குள் நீங்கள் பேனா வைக்கலாமா என்றால் அதற்கு பதில் இருக்கிறதா?

கடலோரத்தில் மீனவர்கள் கடை போடக் கூடாது என்று சொன்ன நீதிமன்றம்தான், சமாதியை வைத்து கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது... எங்களின் வாழ்வாதாரமே இங்கு தான் உள்ளது. இதை விட்டுவிட்டு மீன் சந்தை கட்டி தருகிறோம் என்றால் எங்கே? எப்போது? பேனா சின்னம் அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை ஏன் எங்களுக்கு சந்தை கட்டுவதில் காட்டவில்லை. எங்களின் வாழ்விடத்திற்கு அருகில் சந்தை இருந்தால் தான் மீன்களை கொண்டு வந்து விற்க எளிதாக இருக்கும்" என்றார் சீமான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+